இரண்டு சிறுவர்களிடையே ஓர் ஒப்பந்தம். தன்னிடம் உள்ள மிட்டாய்களை எல்லாம் ராமுவுக்கு சோமு தர வேண்டும். பதிலுக்கு ராமு தன்னிடம் உள்ள கோலிகுண்டுகளை சோமுவுக்குத் தரவேண்டும். மிட்டாய்களை வாங்கிக் கொண்ட ராமு, தன்
டிரவுசரில் நான்கு கோலிகுண்டுகளை மறைத்துக்கொண்டு மீதியைக் கொடுத்தான். இரவு தூங்கும்போது புரண்டு படுக்கும் போதெல்லாம் கோலிகுண்டு உறுத்தி விழித்தான். ஏன் புரண்டு படுக்கிறாய் என்று கேட்ட அக்காவிடம் உண்மையைச் சொன்னான். அக்கா சொன்னாள், “ராமு! உறுத்துவது கோலிகுண்டல்ல. குற்றவுணர்வு. நாளை அவற்றை சோமுவிடம் தந்துவிடு”. மறுநாள் ராமு நிம்மதியாக தூங்கினான்.
Leave a Reply