அந்த மனிதர் ஆதிவாசி. முதல் முறையாக நகரத்திற்கு வந்திருந்தார். இயற்கையின் ஓசைகளுக்கே பழகிய அவருடைய காதுகளில் கொடூரமாக ஒலித்தது ஓர் ஓசை. அதிர்ந்துபோய் பார்த்தார். ஒரு சிறுவன் புல்லாங்குழலை ஊத முயன்று
கொண்டிருந்தான். அவர் இதற்குமுன் புல்லாங்குழலைப் பார்த்ததில்லை. அச்சத்துடன் நகர்ந்தார். ஓரிரு நாட்களுக்குப் பின் ஓர் அரங்கம் வழியே போனபோது இனிமையான இசை அவர் செவிகளில் புகுந்தது. உள்ளே பார்த்தால் ஒரு புல்லாங்குழல் கலைஞர் வாசித்துக் கொண்டிருந்தார். வாழ்க்கை புல்லாங்குழல் போலத்தான். கையாள்பவர்களின் திறமைக்கேற்ப அது இன்னிசையாகவோ இம்சையாகவோ மாறுகிறது.
Leave a Reply