குருநாதர் தன் சீடர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார், “இந்த பிரபஞ்சத்தைப் பாருங்கள். கடவுள் ஒழுங்குணர்ச்சி கொண்டவர் என்பது தெரிகிறது. வானம், மலைகள், கடல்கள் ஆகியவற்றை எவ்வளவு ஒழுங்காகப் படைத்திருக்கிறார்”. சீடர் ஒருவர் எழுந்தார்.
“சுவாமி! எனக்குக் கடவுளின் கலையுணர்ச்சிதான் தெரிகிறது. குழந்தைகளின் விரல் நகங்கள், அணில்களின் கண்கள், ஒட்டகச் சிவிங்கியின் கால்கள், உடலில் கூச்சத்தை ஏற்படுத்தும் பாகங்கள் இதையெல்லாம் பாருங்களேன்” என்றார். தன்னைவிட தன் சீடன் கடவுளைச் சரியாகப் புரிந்து கொண்டதில் மகிழ்ந்தார் குருநாதர்.
indhumathi
ryrutilkukukikh,jbdg