ஓர் எளிய மனிதர் எதிர்பாராத விதமாக மக்கள் செல்வாக்குப் பெற்று, தேர்தலில் ஜெயித்து அமைச்சரும் ஆனார். “இப்படியொரு நிலைக்கு வருவதாக கற்பனைகூட செய்திருக்க மாட்டீர்களே” என்று செய்தியாளர்கள் கேட்டார்கள். “கற்பனை செய்ததால்தான் இந்த நிலைக்கு வந்தேன். நான் பொதுவாழ்வில் இறங்கும்போது
எத்தனையோ ஏளனங்கள் இருந்தாலும் அடுத்த ஐந்தாண்டுகளில் என் செல்வாக்கு வளர்வதாக ஐந்தாண்டுகளுக்கு முன் கற்பனை செய்தேன். அது தந்த உற்சாகத்தில் களத்திலிறங்கினேன்” என்றார். உங்கள் இலட்சியங்களைக் கற்பனையில் காணுங்கள். பிறகு எட்டிப் பிடியுங்கள்.
sridhar
today i got good energy because i read confidance corner thank u namadhu nambikai
sakthi anand.N
thanks for your essays….