இதழ் வழியே கொஞ்சம் SMS

நம்பிக்கையோடு மோதுங்கள்
சாவி இல்லாத பூட்டை யாரும் தயாரிப்பார்களா என்ன?
தீர்வு இல்லாத பிரச்சனைகளை கடவுள் உருவாக்குவதில்லை!
நம்பிக்கையோடு தடைகளைத் தகர்த்திடுங்கள்!!

எது முக்கியம்?
தங்கப் பானையில் விஷமிருப்பதைக் காட்டிலும்
மண் பானையில் பால் இருப்பதே மேலானது!!

வெற்றிக்கற்கள்
இந்த சமூகம்
நிச்சயமாக உங்கள் மீது
கற்களைத்தான் எரியும்.
சுவர்கள் அமைப்பதும், பாலம் அமைப்பதும்
உங்கள் விருப்பம்!!

நேர்மறை எண்ணங்கள்
குழந்தைக் கொசு தன் முதல்வேட்டையை முடித்துக்கொண்டு வீடு திரும்பியது.
தந்தைக் கொசு: உன் முதல் வேட்டை அனுபவம் எப்படி இருந்தது.
குழந்தைக் கொசு: மிகப் பிரமாதம்!
மனிதர்கள் என்னை கைதட்டி வரவேற்றார்கள்!!
விஷயங்களை நேர்மறையாக எடுத்துக்கொள்ளுங்கள்.

வெற்றி
வெற்றி புத்திசாலிகளின் சொத்தல்ல!
நம்பிக்கை, தளர்வில்லாத மனம்
இவற்றின் முன் யார் தலை வணங்குகிறார்களோ
அவர்களுக்கு வழங்கப்படும் மாமகுடம்.

புகைப்படம்
புகைப்படங்கள் இருட்டறையில்தான் உருவாக்கப்படுகின்றன.
உங்கள் வாழ்வு இருண்டிருந்தால்
கடவுள் உங்களைக் கொண்டு
வண்ணமயமான புகைப்படத்தை
உருவாக்குகிறார் என்று நம்புங்கள்.

உங்களுக்கு உள்ளே
வெளிப்புற சக்தியால்
முட்டையின் ஓடுகள் உடைபட்டால்
அது ஓர் உயிரின் முடிவு!!
உள்ளெழும் சக்தியால்
முட்டையின் ஓடுகள் உடைபட்டால்
அது ஓர் உயிரின் தொடக்கம்!!

உணவுகளில் உப்பு இருப்பது தெரிவதில்லை. ஆனால், அதன் இல்லாமை உணவையே ருசியற்றதாக்கிவிடுகிறது.

கடவுள்
கடவுளை நம்புவதால் மலைகளின் உயரம் குறைவதில்லை.
சுமையை குறைக்கச் சொல்லி கடவுளை வேண்டாதீர்கள்.
உங்கள் பலங்களை கூட்டச் சொல்லி வேண்டுங்கள்!!

மகத்தான விஷயங்கள் எப்பொழுதுமே உங்களுக்குள்தான் ஆரம்பமாகின்றன.

நம்மை விலைமதிப்புள்ள மனிதராக ஆக்குவது
வெளிப்புறத் தோற்றமல்ல,
நம் உள்ளுணர்வுகளே!!

முக்கியமானவராய் இருங்கள்

தனித்துவம் மட்டுமல்ல முக்கியத்துவமும்தான் மனிதனின் மகத்துவம்!!

2 Responses

  1. James P Camaron

    We should convert only negative matters in to possitive, not for all. so, at very first we must try to know which is possitive and negative.

  2. T.Ebenezar selvan

    great information … has motivated people like me … hats off .. for your future venture.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *