காலப்போக்கில் நிலக்கரி வைரமாகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சாணக்யன் சொன்ன சொல் இன்று வேதமாகிறது. சாணக்கியனின் ஒவ்வொரு சொல்லும் ஒரு வைரக்கல். தொகுத்து வழங்கிய ஆசிரியருக்கு நன்றி மலர்கள்.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கோவை.
இலட்சியங்களை கற்பனையில் கண்டுவிட்டு பிறகு எட்டிப் பிடிக்க வேண்டும் என்ற கான்பிடன்ஸ் கார்னர் வாக்கியம் மிக அருமை. இலட்சியங்களை கற்பனையில் காணலாமே தவிர அவற்றைக் கனவாகக் காணக்கூடாது என்பதும் இவ்வாக்கியம் மறைமுகமாக உணர்த்தத்தான் செய்கிறது.
சம்பத், கோவை.
“நம்மை உயர்த்தும் நமது நம்பிக்கை” கட்டுரையில், நெப்போலியனைப் பற்றி படித்தபோது மன உறுதியும் திட நம்பிக்கையுமே, எதிரிகளை வீழ்த்தும் ஏவுகணைகள் என்பதை உணர முடிந்தது. இப்படி நல்ல கருத்துக்களை விதைக்கும் நமது நம்பிக்கைக்கு பாராட்டுக்கள்.
தங்கதாஸ், திருவாரூர்.
நமது நம்பிக்கை டிசம்பர் இதழில் சுவையான தகவல்கள், நம்பிக்கையூட்டும் சிந்தனைகள், பயனுள்ள அறிவுரைகள், அப்பப்பா… இதழ் வாசிக்க வாசிக்க ஒருவித உற்சாகம் தொற்றிக் கொள்கிறது…! இதழெனும் பாசக் கரங்கள். இப்படியொரு இதழை தவறவிட்டுவிட்டோமென்று வருந்துகின்றேன். இப்பொழுதாவது வாசகராகி விட்டோமே என்று அகமகிழ்கிறேன் இன்று! வாழ்த்துக்கள்.
ஜி.அப்துல்பாரி, பழனி.
ஒரு மனிதன் தெளிவாக மாறவேண்டுமென்றால் மாதம் ஒரு நற்பழக்கம் கட்டுரை ஒரு அழகான எளிய வழி. அதுவும் இம்மாதம் கைபேசி பயன்படுத்தும் விதம், நேரம் இவற்றை தெளிவாக வகைப்படுத்தி, மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் புதிய தகவல்களை வழங்கி தெளிவுபடுத்திவிட்டீர்கள். அருமையான அவசியமான கட்டுரை. நன்றி.
தங்க.பரமேஸ்வரன், சின்ன கொசப்பள்ளம்.
Leave a Reply