முழு கவனத்தோடும் ஈடுபாட்டோடும் மூளையைப் பயன்படுத்தும்போது, பல அசாதாரண விஷயங்களை அனாயாசமாக செய்து முடிக்கமுடியும். உதாரணமாக 100 இலக்கங்கள் கொண்ட எண்ணை ஓரிருமுறை கேட்டுவிட்டு, நேராகவும் தலைகீழாகவும் சொல்லும் சக்தி மூளைக்கு உண்டு.
ஹஇருபது நிமிடங்களில் 100 மனிதர்களைச் சந்தித்து, ஒவ்வொருவர் பெயரையும் திரும்பச் சொல்லும் பதிவுத்திறன் மூளைக்கு உண்டு.
ஹலோசி என்ற நினைவாற்றல் முறையை உருவாக்கினார் சிமாணிடிஸ் என்ற கிரேக்க நாட்டுக் காரர், தன் வீட்டையே 25 பகுதிகளாய் பிரித்துக்கொண்டு, ஒவ்வொரு பகுதியிலும் உள்ளவற்றை மனதுக்குள் ஒரு பட்டியலாக வகுத்துக் கொண்டார். 25க்குள் எந்த எண்ணைச் சொன்னாலும் அங்கிருக்கும் பொருட்களை அவரால் வரிசையாகச் சொல்ல முடிந்தது.
ஹமூளை எல்லா வற்றையுமே படங்களாகத் தான் நினைவில் வைத்துக் கொள்கிறது. விஷயங்களைக் காட்சிகளாக மனதில் பதிய வைக்கிற போது நினைவாற்றல் துல்லியமாக செயல்படுகிறது.
thanigaivel
super sir