கேள்வி நாங்கள் பதில் நீங்கள்

யாருக்கு வாழ்க்கையில்
தோல்வியே கிடையாது?

(20ம் தேதிக்குள் உங்களின் சிறந்த பதில்களை அனுப்புகள்.
வெளியாகும் பதில்களுக்கு புத்தகங்கள் பரிசு)

சென்ற மாத இதழில் கேட்கப்பட்ட கேள்வி

எந்த ஒரு விஷயத்திலும் திறமை உள்ளவர் தன் திறமையை வெளிப்படுத்த வாய்ப்புக் கிடைத்தால் மகிழ்வார். ஆனால், மாணவர்கள் மட்டும் தேர்வு எனும் தன் கற்றல் திறமையை வெளிப்படுத்த கிடைக்கும் வாய்ப்பை பயத்தோடு பார்ப்பது ஏன்?

பரிசு பெற்ற பதில்கள்

மாணவ மாணவியர் வகுப்பில் பாடங்கள் கற்பிக்கப்படும்போது முழுக்கவனத்துடன் கவனிப்பதில்லை, சந்தேகங்களை உடனுக்குடன் கேட்டுத் தெளிவு பெறுவதில்லை, வீட்டில் அன்றாடப் பாடங்களை படிப்பதில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக தள்ளிப்போடும் மனோபாவம், சோம்பேறித்தனம் ஆகியனவற்றால் தேர்விற்கு பயக்கிறார்கள்.
பி.எஸ்.சுப்பிரமணியம், நாமக்கல்.

கற்றல் என்பது கட்டாயப்படுத்தி திணிக்கப்படுவதே காரணம். இங்கு மாணவர்களின் மதிப்பெண்களுக்கு மதிப்பு இருக்கும் அளவுக்கு அவர்களின் திறமைக்கு மதிப்பு இல்லாததும் வருந்தத்தக்கது.
சி.விஜயாம்பாள், கிருஷ்ணகிரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *