3 இடியட்ஸ் திரைப்படம் காட்டும் வெற்றியின் வரைபடம்

3 இடியட்ஸ் திரைப்படத்திலிருந்து வாழ்வின் வெற்றிக்கான சூத்திரங்களைக் கண்டறிந்து பட்டையைக் கிளப்பியிருக்கிறார் ராஜேஷ் என்பவர்.

வலையில் படித்த இந்த சுவாரசியமான பகுதியை தமிழில் தந்திருக்கிறோம். 3 இடியட்ஸ் படத்தை விரைவில் தமிழில் டப் செய்து நமது

தொலைக்காட்சிகள் வெளியிட்டுவிடும். அதற்கு முன்னோட்டமாய் இதோ வலையிலிருந்து ஒரு டப்பிங்!!

1. வெற்றி என்பது பக்க விளைவு:

நிகரற்ற செயல்திறனே எப்போதும் முக்கியம். வெற்றி என்பது அதற்குக் கிடைக்கும் பக்க விளைவுதான். எனவே செயல்திறனில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் கேட்டாலும், கேட்கா விட்டாலும் வெற்றி விளைந்தே தீரும்.

2. வாழ்வின் சுதந்திரம்:

வாழ்ந்து பார்க்கத்தான் வாழ்க்கை. அநேகம் பேர் அரைகுறையாய் வாழ்ந்துவிட்டு இறந்து விடுகிறார்கள். தீவிரத்துடன் இரவும் பகலும் வாழ்க்கையை அனுபவியுங்கள். வாழ்க்கை என்பது மனிதகுலத்தின் மகிழ்ச்சிக்காகத் தரப்பட்டிருக்கும் மகத்தான பரிசு.

3. செயல்திறனின் அடிப்படையே ஈடுபாடுதான்:

உங்கள் பொழுதுபோக்கில் இருக்கும் ஆர்வம், அதையே முழுநேரப்பணியாக மாற்றும் போது, அந்த ஈடுபாடே அதனை முழுநேரப் பணியாக மாற்றுகிறது. ஈடுபாட்டுடன் ஒன்றை விடாமல் தொடர்ந்து செய்பவர்கள் அந்தத் துறையில் சாதனை படைக்கிறார்கள்.

4. கற்றுக் கொள்வது எப்போதும் எளிது:

சொல்லிக் கொடுப்பவர்கள் கூட சிலநேரம் தோற்றுப் போவார்கள். கற்றுக் கொடுப்பவர்கள் ஒரு போதும் தோற்பதில்லை. ஆர்வமும் வேகமும், இருக்கும் வரை, எதையும் கற்றுக் கொள்ளலாம்… எளிதாக!!

5. கல்விமுறையின் கனம்:

இன்றைய கல்வி முறை மாணவனின் தலையில் பெரும் கனமாய் அழுத்துகிறது. பல்கலைக்கல்வி பயன் தருகிறதென்றாலும் அதற்கு நாம் தரும் விலை அதிகம். உள்ளுணர்வைத் தூண்டும் கல்வியே உயர்ந்த கல்வி.

6. அறிவின் மேம்பாடு போலவே உணர்வுகளின் ஒழுங்கும் அவசியம்:

அறிவை மேம்படுத்திக் கொள்வதும் தீவிரப் படுத்திக் கொள்வதும் வாழ்வின் வெற்றிக்கு அவசியம். அதேபோல உணர்வுகளை ஒழுங்கு படுத்திக் கையாள உங்களுக்குத் தெரிந்துவிட்டால் உங்கள் வெற்றி உறுதி செய்யப்படுகிறது.

7. தேவையின் தீவிரமே உங்கள் திறமையை வெளிப்படுத்துகிறது:

அளவில்லாத அவசியம் ஏற்பட்டாலே ஒழிய உங்கள் தீவிரம் வெளிப்படுவதில்லை. அமீர்கான் அக்வா கார்ட் பம்ப்பை பயன்படுத்தும் இடம், இந்தக் கருத்தை உறுதி செய்கிறது.

8. எளிமையே நல்லது:

வாழ்க்கை முறை என்பது, வேலைகளின் அளவுக்கேற்ப அமைய வேண்டுமே தவிர, ஆசைகளால் வாழ்க்கை வழி நடத்தப்படக்கூடாது. கண்கள் வானத்தை தாண்டி கனவு கண்டாலும், கால்கள் பூமியில் ஆழப்பதிந்திருப்பது அவசியம்.

9. உங்கள் துறையில் உங்கள் தலைமைப்பண்பு:

நம்நாட்டில் பல நல்ல நல்ல துறைகள் கூட, தலைமைப்பண்பு இல்லாதவர்களின் கைகளில் சிக்கி சராசரிக்கும் கீழாய் செயல்படுகின்றன. டீன் வேடத்தில் வருபவர் தலைமைப்பண்பின் சிறந்த உதாரணம். கொள்கைகள், சித்தாந்தங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அவர் தனது நிறுவனத்தை வழி நடத்துகிறார்.

10. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்:

எல்லையற்ற அன்பு சுதந்திரமாய் வெளிப் படுத்தப்படும் போது, மாபெரும் சக்தியாய் உருவாகிறது. கிருஷ்ணா, மீரா இடையிலான காதல் இதற்கான உதாரணம்.

11. தகவல் தொடர்பில் துல்லியம்:

நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் முக்கியமானது. வார்த்தையைத் தவறாக உச்சரித்தாலோ தவறான இடத்தில் இடைவெளி விட்டாலோ தவறான புரிதலுக்கு வாய்ப்பிருக்கிறது.

12. சராசரியாய் இருப்பது தண்டனைக்குரிய குற்றம் :

பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் பிறப்பது குற்றமல்ல. தன் திறமைகளை மேம்படுத்தாமல், தன்னால் என்ன முடியும் என்பதே தெரியாமல், தன் சக்திக்கும் கீழாக சராசரியாய் வாழ்வதுதான் தண்டனைக்குரிய குற்றம். ஒவ்வொருவரும் தனக்குள் இருக்கும் அபரிமிதமான சக்தியை வெளிப்படுத்துவதன் மூலம் இந்த வாழ்க்கையை கௌரவப்படுத்த வேண்டும்.

இப்படிப் பார்த்தால் இந்தப்படம் கூட ஒரு பாடம்தானே!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *