அந்த ஆசிரியர் ஓய்வு பெற்றார். அவருக்குப் பாராட்டுவிழா நடத்தினார்கள். “நீங்கள் தலைசிறந்த ஆசிரியர். உங்களால் மறக்க முடியாத ஆசிரியர் யார்?” என்று கேட்டபோது, அவர் சொன்னார், “நான்
முனைவர் பட்டம் முடித்தவுடன், படித்து முடித்ததாய் நினைத்தேன். வகுப்பில் மாணவர்கள் சந்தேகங்கள் கேட்கத் தொடங்கியதும் முதலில் திணறினேன். பிறகு தினமும் மறுபடி படிக்கத் தொடங்கினேன். எனவே என்னால் மறக்க முடியாத ஆசிரியர்கள் என் மாணவர்கள்தான்” என்றார். கற்றுக் கொள்ளலாம்…. எப்போது வேண்டுமானாலும்! யாரிடம் வேண்டுமானாலும்.
vicky
Good one!
thanks a lot