ஈஸியா வாங்கலாம் நூற்றுக்கு நூறு

– சாதனா

ஹாய் ப்ரெண்ட்ஸ்,

நீங்கள் பல நாட்களாக காத்திருந்த எக்ஸாம் வந்தாச்சு.

நான் சரியாகவே படிக்கவில்லை. எக்ஸாமுக்கு இன்னும் சில நாட்கள்தானே இருக்கிறது. இனிமேல் என்னால் என்ன செய்ய முடியும் ? என்று கலங்கும் நண்பர்களுக்கு ஒரு வார்த்தை.

கடைசி ஓவரில், கடைசி பாலில்கூட வென்றவர்கள் இருக்கிறார்கள். எனவே நம்பிக்கை இழக்காதீர்கள். ஓட்டப்பந்தயத்தில் வெற்றிக் கோட்டை நெருங்கியவுடன் ஆவேசம் வந்தது ஓடுகிறவர்களை கவனித்திருக்கிறீர்களா ? வெற்றி பெறவேண்டும் என்ற வெறியில் தன் முழு சக்தியையும் திரட்டி ஓடி வெற்றி பெறுகிறார்கள்.

எனவே முடியும் என்று நினைத்தால் இப்போது கூட உங்கள் சக்தி முழுவதையும் ஒன்று திரட்டி நன்றாகப் படித்து சாதனைகள் செய்யலாம்.

டென்த் மார்க்தான் +2 விலும் கிடைக்குமா ?

நீங்கள் டென்த்தில் என்ன மதிப்பெண் எடுத்திருக்கிறீர்களோ, அதே சதவீதம்தான் ‘2 விலும் வரும் என்று ஜோசியம் சொல்லி சிலர் பீதியை கிளப்புகிறார்களா? டென்த்தில் நீங்கள் 300 எடுத்திருந்தால் +2 வில் அதிக பட்சம் 600 முதல் 700 வரை எடுப்பீர்கள் என்பார்கள்.

இப்படிச்சொல்வதற்கு காரணம் ஜஸ்ட் பாஸ் என்ற நிலையில் படிக்கும் மாணவன் தன் உழைப்பை மேம்படுத்திக்கொள்ளவில்லை என்றால் அடுத்த வருடமும் அதே நிலையில்தான் இருப்பான். இதே லாஜிக்தான் இதிலும்.

டென்த்தில் 60 சதவீதம்தான் மார்க் வாங்கியிருக்கிறீர்கள் என்றால் +2விலும் 60 சதவீதம்தான் எடுப்பீர்கள், உங்கள் உழைப்பில் மாற்றம் இல்லாதவரை.

எனவே, முயற்சியை மாற்றுங்கள். மதிப்பெண்ணை கூட்டுங்கள்.

தேர்வு எழுதும் முறைகள்

இரவில் அதிக நேரம் கண்விழிக்காதீர்கள். தூக்கம் கெடுவதால்கூட பயம், பதட்டம் அதிகமாகும்.

கண்டிப்பாக விளையாடுங்கள். விளையாடும் போது நல்ல மனநிலையை ஏற்படுத்தும் செரட்டின் என்ற திரவத்தை நம் மூளை அதிகம் சுரக்கிறது. அதனால்தான் விளையாடும் போது நாம் அதிகம் உற்சாகமாக உணர்கிறோம்.

உங்களுக்கு தேர்வு பற்றி பயமிருந்தால் பெற்றோர்களிடமும் ஆசிரியர்களிடமும் ஒளிக்காமல் மனம்திறந்து பேசுங்கள்

ஒரு தேர்வு முடிந்த அடுத்த நிமிடம் அதை எப்படி எழுதியிருக்கிறோம் என்றெல்லாம் அதிகம் ஆராய்ச்சி செய்து குழம்பிக்கொண்டிருக்காமல் அன்றைய தேர்வை மறந்துவிட்டு அடுத்த தேர்வுக்கு தயாராகுங்கள்.

சரியாக எழுதினால் நிச்சயம் சென்டம் வாங்கலாம். அழகான, தெளிவான கையெழுத்து, முடிந்தளவிற்கு அடித்தல் திருத்தல் இல்லாமல் இருத்தல்,  கூடுதல் தகவல்களை எழுதுதல், முக்கிய வார்த்தைகளை அடிக்கோடிடுதல் ஆகியவைதான் சென்டம் வாங்குபவர்களில் இருந்து ஸ்டேட் பர்ஸ்ட் வாங்குபவர்களை தீர்மானிக்க காரணமாக அமைகிறது.

பொதுவாக கடைசி நேர உழைப்பில் சோம்பல் காட்டாமல் அதிகம் உழைத்தால் கண்டிப்பாக நல்ல மதிப்பெண் பெறமுடியும்.  ஒவ்வொரு பாடத்திற்கும் ஒவ்வொரு வகையில் பதில் எழுதுதல் முக்கியம். உதாரணத்திற்கு கணிதத்தில் ‘ symbol ஒன்று போல் வரிசையாக வரும்படி இருத்தல் அவசியம். குறியீடுகளை தவறில்லாமல் மறக்காமல் குறிக்க வேண்டும்.  அலகுகளை குறிக்க தவறக்கூடாது.  பெரும்பாலும் கவனக் குறைவுதான் மதிப்பெண்ணை கடைசி நேரத்தில் குறைக்கும்.

கவனத்தோடு கேள்விகளை படிப்பதும், நாம் நினைக்கும் விடை அந்த கேள்விக்கானது தானா? என்று தெளிவாக சிந்தித்தும் எழுத வேண்டும்.  சில நேரங்களில் கேள்வி எண்ணை தவறாக எழுதுவதால் கூட மதிப்பெண் குறைகிறது.

இனிமேல் முயற்சித்தால்கூட நல்ல மதிப்பெண் வாங்கலாம். இன்னும் கொஞ்சம் கூடுதலாக முயற்சித்தால் சென்டம் கூட வாங்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *