– க. அம்ச கோபால் முருகன்
சாதனை மாணவர்களுக்கு உறுதுணையாக இருந்து மதிப்பெண்களை அள்ளித் தருவதில் முதன்மையான இடம் பெறுவது அவர்களின் கையெழுத்து. நன்றாகப் படிப்பவர்களுக்குக் கூட பெரும் சவாலாய் இருப்பது கையெழுத்து.
கையெழுத்து அழகாய் மாறி அசத்தப் போகிறவர்களுக்காக சில குறிப்புகள்:-
1. எழுத்து வடிவங்கள் மிகச் சரியாக இருக்க வேண்டும்.
2. எழுத்துகளுக்கு இடையிலும் சொற்களுக்கு இடையிலும் பொருத்தமான, போதுமான இடைவெளி இருக்கவேண்டும். எழுத்து வரிசை நேர்கோட்டில் இருத்தல் அவசியம்.
3. எழுதும் பேனா, பென்சில் போன்றவற்றை இரவல் வாங்கிப் பயன்படுத்தாதீர்கள்.
4. எழுதுகிறபோது, ஏனோ தானோவென்று எழுதாமல் அந்த எழுத்துகளுக்கு உரிய மரியாதையைத் தாருங்கள்.
5.எழுது முனைப் பொருளை தொடர்ந்து நீண்ட காலத்திற்குப் பயன்படுத்தாதீர்கள்.
6. அடிக்கடி உங்கள் பேனாவையும் குளிப்பாட்டி சுத்தப்படுத்துங்கள்.
7. எங்கு எதை எழுதினாலும் தெளிவாகவும், அழகாகவும் இருக்க வேண்டுமென நினையுங்கள்!
8.எழுதிய எழுத்துக்கள் நம் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என்பதை நினைவில் வைத்து வடிவங்களை பதியுங்கள்.
9. உங்கள் பேனாவிற்கு ஏற்ற பொருத்தமான மையினைத் தேர்ந்தெடுங்கள்.
10.உங்கள் எழுதும் வேகம், கைவாகு இவைகளைப் பொறுத்து, பொருத்தமான கம்பெனி பேனாக்களை பயன்படுத்துங்கள். கூடுதலான விலை கொடுத்து பேனாவினை வாங்குவதால் மட்டும் கையெழுத்து மாறுவதில்லை. மலிவுவிலை பேனாக்கள் எழுத்தை மோசமாக்குகின்றன.
11.எழுதப்படுகிற குறிப்பேடு, வெள்ளைத்தாள் ஆகியவை தரமாக இருக்கட்டும். தரமற்றவை பேனாவின் எழுதுமுனையை பழுதாக்கி உங்கள் எழுத்தின் அழகை பாதிக்கிறது.
12.தவறாக எழுதிய எழுத்தின் மீதே திரும்பவும் எழுதாதீர்கள். அடித்தல் திருத்தல் இல்லாமல் இருப்பதே சிறப்பு.
13. தமிழ்மொழியின் எழுத்து வடிவம் வேறு. ஆங்கில மொழியின் எழுத்து வடிவம் வேறு. எனவே, தனித்தனிப் பேனாக்களைப் பயன் படுத்துங்கள்.
14. சிந்தனை வாழ்வை சீராக்குகிறது. அச்சிந்தனையை வெளிப்படுத்த தேர்வுத்தாள் ஒரு வாய்ப்பு. கையெழுத்து அதற்கான துணை.
15. எல்லோருமே குறிப்பிட்ட காலத்திற்குள் அழகாக எழுதிப் பழக முடியும். உங்களாலும் முடியும். பயிற்சியும் முயற்சியும் வெற்றி தரும்.
எழுதுங்கள் அழகாக…..!
உங்கள் கையெழுத்தில் பறவைகள் சிறகடிக்கட்டும்! பூக்கள் மலரட்டும்! களைகளைப் பிடுங்கும் ஆயுதங்களாகவும் உருவெடுக்கட்டும்!
மாறட்டும்…
வெற்றிகள்
குவியட்டும்….!
usha
usha
selvam
selvam.A