வெற்றி பெரும் உத்வேகம்

– கனகலஷ்மி

உங்கள் இலக்குகளில் வெற்றிபெற வேண்டும் என்றால் உங்கள் மூளையில் அதற்காக வடிவமைத்து வைத்திருக்கும் திட்டங்களை முதலில் அகற்றுங்கள்.

உங்கள் வெற்றிக்காக நீங்கள் உருவாக்கி இருக்கும் எண்ணங்களை தேவைப்படும்போது மட்டும் செயல்படுத்துங்கள். நீங்கள் நினைக்கும் பொழுதெல்லாம் செயல்படுத்தாதீர்கள்.

உங்கள் கைகளில், நீங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கும் இந்த நொடியில் நீங்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்னென்ன செய்யக் கூடாது என்பதற்கான முழு அறிக்கையை தயாராக வைத்திருங்கள். அடுத்த வெற்றியாளர் நீங்கள்தான்.

இதுபோன்ற பல சுளீர் கருத்துக்களைக் கொண்டு நம் வெற்றி முனைப்பைத் தூண்டும் எண்ணத்தோடு வெளிவந்திருக்கும் ஆங்கில புத்தகம் “தங்ஹக்ஹ் ச்ர்ழ் அய்ஹ்ற்ட்ண்ய்ஞ்” இதை எழுதியிருப்பவர் உலகின் தலைசிறந்த சிந்தனையாளர் வரிசையில் மிக முக்கியமானவராய் கருதப் படும் திரு. டேவிட் ஏலன்.

“நியூ யார்க் லைப்”, “தி மெர்க்” “உலக வங்கி”, போன்ற உலகப் புகழ்பெற்ற நிறுவனங்கள் இவரின் வாழ்த்துரையோடு துவங்கப்பட்டவை. அமெரிக்காவின் “தி வாஷிங்டன் போஸ்ட்”, “லாஸ் ஏஞ்செல்ஸ் டைம்ஸ்” “தி அட்லேண்டிக்” போன்ற தலைசிறந்த பத்திரிகைகள் இவர் கட்டுரை களையும் கருத்துக்களையும் வெளியிட்டுள்ளன.

“தங்ஹக்ஹ் ச்ர்ழ் அய்ஹ்ற்ட்ண்ய்ஞ்” என்ற புத்தகம் 52 குறுங்கட்டுரைகளுடன் வெளிவந்துள்ளது. ஒவ்வொரு கட்டுரையும் சோம்பேறித்தனமாய் முடங்கிக் கிடப்பவர்களுக்கான சாட்டையடி. இந்தப் புத்தகத்தில் பேசப்படும் ஒவ்வொரு சுய முன்னேற்ற கொள்கைகளும் இந்தப் புத்தகத்தை மாத்திரம் அல்ல. அவை கடைப்பிடிக்கப்படும் போது நம் வாழ்க்கையையும் அழகாக மாற்றப் போவது நிச்சயம். இனி இந்த புத்தகத்தின் சில சுவாரஸ்யமான பக்கங்கள் உங்களோடு:

புவியீர்ப்பு விசை பற்றி ஒரு வரிகூட தெரியாதவன் ஒரு முன்னணி கார் பந்தய வீரனாக இருக்கலாம் என்பது டேவிட் ஏலனின் கருத்து.

அதற்கு அவர் தரும் விளக்கம் இதோ, அவன் பயணம் செய்கிற காரின் சக்கரம் புவியீர்ப்பு விசையில் இயங்குகிறபோதும் பந்தய வீரர் அதைப் பற்றி அறிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவன் பந்தயத்தில் வெற்றி பெறவேண்டிய அவசியம் இல்லை. அவன் பந்தயத்தில் வெற்றி பெற காரை வேகமாக இயக்குபவனாக இருக்க வேண்டும், பந்தயத்தில் வெற்றி பெறுவதற்கான அனைத்து நெளிவு சுழிவுகளையும் அறிந்திருக்க வேண்டும். காரை தன் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கத் தெரிய வேண்டும். நீ உன் வேலையை கவனமாக செய்கிறபோது புவியீர்ப்பு அதன் வேலையை ஒழுங்காகச் செய்யும்.

உன் இலக்குகளில் மட்டும் கவனமும் அதில் வெற்றி பெறுவதற்கான யுக்திகளும்தான் உயர்ந்த சாதனையின் ரகசிய மந்திரம். உங்கள் நினைவிற்குத் தோன்றும் அனைத்தையும் செய்ய நினைப்பது, அனைத்தையும் பெற நினைப்பது, அனைத்துமாகவும் இருக்க நினைப்பது ஒரு சராசரி மனிதனை தளர்வடைய வைத்துவிடும். நீங்கள் வெற்றி பெற எது தேவையோ அதை நோக்கி மட்டுமே உங்கள் உழைப்பும் முயற்சியும் அமைவது உங்கள் இலக்குகளை வெகு சீக்கிரமாக அடைகிற முனைப்பை உங்கள் மனம் உங்களுக்கு ஏற்படுத்தும்.

அனைவரும் பயணப்படுகிற பாதையில் நீங்கள் பயணப்பட வேண்டுமா? அல்லது உங்களை தனித்துவம் ஆனவராக அடையாளம் காட்டி வெற்றிக் களிப்பில் ஜொலிக்க வேண்டுமா? நீங்கள் தனித்துவம் வாய்ந்தவராக இருக்க வேண்டும் என்றால் எல்லைகளைக் கடந்து சிந்திக்க வேண்டும். உங்கள் மனதில் பழகிப்போன பிம்பங்களை அகற்றி வித்தியாசமாக சிந்திக்கப் பழக வேண்டும்.

உங்கள் மனதில் சிவப்பு நிறத்தை கற்பனை செய்தால், சிவப்பு நிற பொருட்கள் உங்கள் கண் முன் தட்டுப்பட பல சாத்தியங்கள் உண்டு. ஒரு புது ரக காரை நீங்கள் கற்பனை செய்தால் நீங்கள் படிக்கும் நாளிதழில் அல்லது நீங்கள் பயணம் செய்யும் சாலையில் மற்றும் எங்காவது ஒரு இடத்தில் அந்த காரை நிச்சயம் நீங்கள் பார்ப்பீர்கள்.

தீவிரமான எண்ணங்களை உங்கள் கண்முன் கொண்டுவரும் ஆற்றல் உங்கள் மனதிற்கு உண்டு. உங்கள் மூளை அதற்கேற்றாற் போல்தான் இயற்கையிலேயே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. உங்கள் மனதிற்கும் மூளைக்கும் தேவையான எரிபொருள் வழங்கப்படும்போது அதன் வெளிப் பாடுகள் பின் வருவனவற்றுள் எவையேனும் ஒன்றாகத்தான் இருக்க முடியும். பிரச்சனை களுக்கான தீர்வுகள், புதுமையான எண்ணங்கள், நம் தீவிர உழைப்பின் வெற்றிகள்!

நாம் ஒரு செயலை எப்படி செய்ய வேண்டும் என்பதை நம் மனம் யோசிப்பதே இல்லை. அதை செய்துகொண்டு இருப்பது போல் தான் கற்பனை செய்கிறது.

ஒரு பந்தை பிடிப்பது, மாபெரும் நிறுவனத்தை உருவாக்குவது, உங்கள் பெற்றோரை கவனித்துக் கொள்வது என எந்த செயல்களை செய்வதாய் இருந்தாலும் அதை எப்படி செய்ய வேண்டும் என்கிற செயல் முறையைப் பற்றி நம் மனம் கவலைப்படுவதில்லை. இந்த கற்பனையே நாம் வெற்றி பெறும் உத்வேகத்தை நம்முள் ஏற்படுத்துகிறது.

உலகில் நீங்கள் ஏமாற்றவே முடியாத இடம் உங்கள் மனம்தான். உங்கள் உடல் கட்டமைப்பில் உங்களை நிர்வகிக்கிற மேலாண்மை பகுதி உங்கள் மனம்.

ஒரு பொருளை பார்த்த மாத்திரத்திலேயே அதை உங்கள் வெற்றிக்கு சாதகமாக எப்படி பயன் படுத்துவது, எத்தனை மணி நேரத்தில் பயன் படுத்துவது என்ற கணக்குகளை உங்கள் மனம் வகுக்கத் துவங்கும். அது நடைமுறைக்கு சாத்தியமாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் எந்த முயற்சியும் எடுக்காமல் போனால் உங்களுக்கு பல வகையில் அவை நினைவூட்டிக் கொண்டே இருக்கும்.

சில சமயங்களில் ஒரு பொருளை பார்க்கிற பொழுது உங்களுக்கு எதுவுமே தோன்றாமல் போனால் உங்கள் மனம் நிச்சயம் உங்களை விடப் போவதில்லை. அவை ஏதோ ஒரு வகையில் உங்களிடம் அதன் தேவையை சொல்லிக் கொண்டுதான் இருக்கும். அதைப் புரிந்து கொள்கிற விழிப்புணர்வு நமக்குத் தேவை. மனம் நம் உடலில் விசுவாசம் நிறைந்த தொழிலாளி. அதற்குச் சரியான வேலையைக் கொடுக்க வேண்டியது நம் பொறுப்பு.

இன்னும் நம் நம்பிக்கை விதையின் வீரியத்தை அதிகரிக்கத் தூண்டும் “தங்ஹக்ஹ் ச்ர்ழ் அய்ஹ்ற்ட்ண்ய்ஞ்” புத்தகத்தின் மொத்த சாராம்சம் “புதுமையான சிந்தனை, உங்கள் செயல்பாடுகளில் கவனம், உங்கள் இலக்குகளுக்கு தேவையான முயற்சிகள், அதை நோக்கிய உங்கள் பயணம்” இந்த கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு வெற்றிப் பாதைக்கு அடித்தளம் இட்டுத் தருகிறார் திரு. டேவிட் ஏலன்.

வெற்றி என்பது உடல் திறனை சார்ந்ததும் நம் இலக்கின் மேல் நாம் முயற்சி என்ற பெயரில் போட்டு வைத்திருக்கும் மன அழுத்தமும் அல்ல. தெளிவான புதிய சிந்தனைகள்தான் சிறந்த வாழ்வின் ஆதாரம் என்பதை டேவிட் ஏலனின் வாசகர்கள் நிச்சயம் உணர்ந்திருப்பார்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *