இனிவரும் காலம் இளைஞர்கள் காலம்

நேர்காணல்

– கனகலஷ்மி

இளம் சாதனையாளர் ஆன்மால் விஜ்

உங்கள் ஆரம்ப நாட்கள் பற்றி?

என்னுடைய பள்ளிப்படிப்பை கோவை லிசியூக்ஸ் பள்ளியில் முடித்தேன். எங்கள் பள்ளியில் கிடைத்த எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொண்டேன். ஏதோ ஒரு துறையோடு நின்றுவிடாமல் இலக்கியம், கணிதம், கணினி என அனைத்திலும் என் திறமைகளை காட்டினேன். என் எல்லா வளர்ச்சிகளுக்கும் எனக்கு துணை

புரிந்தவர் என் அப்பா திரு. ராக்கேஷ் குமார், என் அம்மா திருமதி. சுசீல். என் பள்ளி நாட்களில் என்னை மற்ற மாணவர்களி டமிருந்து தனியாக அடையாளப்படுத்தி காட்டியது என் பேச்சுத்திறன். 20க்கும் மேற்பட்ட பரிசுகளை பேச்சுப் போட்டியில் அள்ளி வந்தேன். என் பள்ளி, எனக்கு ‘மாணவர் தலைவன்’ என்ற பொறுப்பை கொடுத்து கௌரவித்தது. பள்ளி மாணவனாக இருந்த போதே “The Herald” என்ற இதழை வெளியிட்டோம். நகர்ப்புறம், கிராமப் புறங்கள் குறித்த வாழ்வியல் குறித்த கட்டுரைகள் சிந்தனைகள் அதில் வெளிவந்து எனக்கு பெரும் பாராட்டையும் வரவேற்பையும் பெற்றுத் தந்தது.

கல்லூரிப் பருவத்திலேயே எண்ணற்ற தலைமை பண்புகளுடன் நீங்கள் செயல்பட்டது எவ்வாறு?

நான் என் கல்லூரிப் படிப்பை ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் முடித்தேன். என் முதல் ப்ராஜெக்ட் “Export system for colony reading in Indian Bee colonies”. பொருட்஑ள் தயாரிப்பு, உபரி பொருட்கள் தயாரிப்பது பற்றிய ப்ராஜெக்ட் அது. அதை தொடர்ந்து மாணவர்களை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கிற வகையில் குறுந்தகடுகளை வெளியிட்டோம். 2007 ஆம் ஆண்டில் சாதிக்கத் துடிக்கும் துடிப்புள்ள இளைஞர்களை இணைத்து என் நண்பர் திரு. நிஷாந்த் பாபுவின் உதவியுடன் ““Covai User Group
(CUG)” என்ற அமைப்பை துவங்கினோம். இது அனைத்து பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கும் தொழில் நுட்பத்தில் நன்மை தீமைகளை விளக்குவதில் பெரும் பங்கு வகித்தது. 27 நபர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பு இன்று 800 உறுப்பினர்களைக் கொண்டு வளர்ந்துள்ளது. இதுபோல் ஒரு பெரிய அமைப்பை உருவாக்க எல்லைகளை தாண்டி சிந்திக்க வேண்டும். தொழில் நுட்பத்தால் எந்தத் தீமையும் சமூகத்திற்கு நிகழக்கூடாது என்பதே இதன் நோக்கம். CUG-இன் முதலாம் ஆண்டு விழாவில் உலகின் முதல் இளம் CEOஒ- வாக விளங்கும் திரு. அகாஸ் கோபிநாத் மற்றும் புகழ் பெற்ற “Food king catering service” CEO- சரத்பாபு ஆகியோர் என இன்னும் பல முன்னணி தொழிலதிபர்களின் வருகை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

அதைத் தொடர்ந்து 2008ஆம் ஆண்டு என் கருத்துருவாக்கத்தில், “Students software solutions” என்ற நிறுவனத்தை நிறுவி, அதன் தலைவராகவும் பொறுப்பேற்றேன். IT-துறையின் ஜாம்பவான் களான விப்ரோ, இன்போஸிஸ் என இன்னும் பல நிறுவனங்களுக்கு ஈடு கொடுக்கும் வண்ணம் மாணவர்களின் திறனை வளர்ப்பதே எங்கள் நிறுவனத்தின் நோக்கம்.

ஒரு நிறுவனத்தின் நிறுவனராய், ஆலோசகராய், இயக்குனராய் பல்வேறு பொறுப்புகளை சுமந்து வரும் நீங்கள், உங்கள் தொழில் சார்ந்த வாழ்க்கையை எப்படி துவங்கினீர்கள்? இன்று அதில் அடைந்துள்ள வளர்ச்சி என்ன?

“The Winner Sports Company” என்ற நிறுவனத்தில் 2001ஆம் ஆண்டு முதல் முறையாக விற்பனைத்துறைஅதிகாரியாய் வேலை செய்தேன். பின்பு ஏர்டெல் ம-இஹய் போன்ற நிறுவனங்களில் மார்கெட்டிங் துறையில் பணியாற்றினேன். பின்பு என் சொந்த முயற்சியில் துவங்கிய இமஎ, நநந என்ற அமைப்புகள் என் கட்டுப்பாட்டின் கீழ் வந்து லாபமுடன் செயல்படத் துவங்கியது. 2008ஆம் ஆண்டு GuruG.net என்ற நிறுவனம் இணையதளம் மூலம் பயில்பவர்களுக்கு குறுந்தகடு ஒன்று வெளியிட்டது. அதில் தன்னாளுமை குறித்து நான் ஆற்றிய உரை இடம்பெற்றிருந்தது. மாணவனாக இருந்த போதே நிறுவனத்தின் இயக்குனராக பொறுப்பேற்றேன். இன்னும் நான் தொட வேண்டிய உயரங்கள் பல உள்ளன.

‘அகன்யா’ என்றால் என்ன?

அகன்யா என்பது பள்ளிக் குழந்தைகளுக்காக மட்டுமே துவங்கப்பட்ட ஒன்று. குழந்தைகளுக்கு Counseling நடத்துவதற்காக துவக்கப்பட்ட நிறுவனம். இதற்கான ஒரு பயிலரங்கு நடந்தது. அதில் திரு. சுப்ரடோபாட்சி என்பவர், ‘ஐப கம்பெனிகளையும் தாண்டி நமது சிந்தனை இருக்க வேண்டும்’ என்று சொன்னார். அப்படி நான் சிந்தித்த பொழுது, பள்ளி நிறுவனங்கள்தான் வரும் காலங்களில் ஒரு பெரிய வளர்ச்சியை அடையப் போகின்றன. எனவே, எனது கம்பெனியை 11-ல் இருந்து 15 வயதுக்குட்பட்டவர்களுக்காக துவங்கியுள்ளேன். திரு. ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்கள் National Movement ஒன்றைத் துவங்கினார். “Lead India 2020” “வல்லரசு இந்தியா 2020”. அது இப்பொழுது ஆந்திராவில் மிக வெற்றிகரமாக நடந்து வருகிறது. இதுதான் அதற்கு அடுத்து நடக்கக்கூடிய ஒரு National Movement . நம் சுதந்திரத்திற்குப் பின்னால் நடக்கக் கூடிய இரண்டாவது National Movement . நான் 5ஆம் வகுப்பில் இருந்து 8ஆம் வகுப்பு வரை படிக்கக் கூடிய குழந்தைகள் மீது என் கவனத்தைச் செலுத்துகிறேன். ஏனென்றால் திரு. அப்துல் கலாம் அவர்களுடைய பயிலரங்கம் ஒன்றில் நான் கலந்து கொண்டபோது அவருடைய சில திட்டங்களைச் சொன்னார். அப்பொழுது அவர் சொன்னது 2020-ல் சராசரி உழைக்கும் வயது 29 ஒரு இந்தியனுக்கு. மற்ற நாடுகளை பார்த்தால் சீனா 45′, அமெரிக்கா 60′, ஐரோப்பா 16′. அதனால் உலகமே நம் இந்தியாவை திரும்பிப் பார்க்கக்கூடிய நிலை 2020-ல் வரும். அந்த வருடத்தில் 29 வயதை அடையப் போகிறவர்கள் இன்று 5ஆம் வகுப்பிலிருந்து 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள். இந்தியா 2020-ல் வல்லரசாக மாறவேண்டும் என்றால் இப்போது உள்ள 11 வயது முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகளை நல்ல முறையில் பயிற்றுவிக்க வேண்டும். இதேபோல் ஒரு National Movement ஒன்று திருச்சியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக் கழகத்திலும் நடக்கிறது. அவர்கள் 5ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பல்கலைக்கழக சான்றிதழ்களை வழங்குகிறார்கள் இப்பயிற்சிக்காக, இது பல்கலைக்கழக வரலாற்றிலேயே முதல் முறையாக பள்ளிக் குழந்தைகளுக்கு பல்கலைக்கழக சான்றிதழ்கள் வழங்கப்படும் நிகழ்வு. (SUITS) School University Industry Tieup Scheme. ஒரு மாணவன் 11ஆம் வகுப்பிலோ 12ஆம் வகுப்பிலோ தன் கல்வியை தொடரவில்லை என்றால்கூட, அவன் இந்த சான்றிதழைக் கொண்டு வேலைவாங்க முடியும்.

ஆனால், அரசாங்கம் சராசரியான கல்வியையே குழந்தைகளுக்குத் தர விரும்புகிறதே?

தற்போதைய நிலைமையில் கல்வி கற்பிக்கும் முறைகள் பெரிதும் மாறி வருகின்றன. நான் 10 மாதங்களில் 200 பள்ளிகளுக்குச் சென்று பார்த்துள்ள வகையில் கல்வி கற்பிக்கும் முறைகளில் பல மாற்றங்கள் வந்துள்ளன. இன்னும் சில காலங்களில் நல்ல ஒரு மாற்றத்தை நமது கல்வி கற்பிக்கும் முறைகளில் காணலாம். இப்போது பல கார்ப்பரேட் நிறுவனங்கள் பள்ளிகள் மீது கவனம் செலுத்துகின்றன. காரணம், அவை பிற்காலத்தில் நல்ல வளர்ச்சி அடையும் என்பதால். எனவே பள்ளிப்பாடங்களில் நல்ல மாற்றங்கள் வர வாய்ப்புகள் அதிகம்.

நீங்கள் ஒரு வகையில் ஐப நிறுவனம் சார்ந்தவர். மற்றொரு வகையில் National Movement-க்காக உழைக்கிறீர்கள் (ITயையும் தாண்டிய ஒன்று). இதை எவ்வாறு கையாள்கிறீர்கள்?

நான் இரண்டையும் வேறுபடுத்திக் காணவில்லை. ஐப என்பது என் வேலை. வார நாட்களில் காலை 9 முதல் மாலை 5 வரை பார்ப்பது. மற்றொன்று என்னுடைய வாழ்க்கை . அதை நான் சனி, ஞாயிறுகளில், நான் வேலை செய்யா வார நாட்களின் நேரங்களிலும் பார்த்துக் கொள்கிறேன். நான் அடிப்படையாக மாணவர்கள் மீது கவனம் செலுத்த ஆசைப்படுகிறேன். அதனால் நான் பல புது விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடிகிறது. எனக்குள் ஒரு புதிய சக்தியும் பிறக்கின்றது. இங்கு கோவையில் உள்ள 200 மாணவிகள் உள்ளனர். இதற்கு IIA என்ற நிறுவனம் உறுதுணையாக உள்ளது (Indian Industries Association). நான் இதைத் துவங்கி 2 வருடங்கள் ஆகின்றன. நான் என்னுடைய 3ஆம் வருட கல்லூரிப் படிப்பின்போது இதைத் துவங்கினேன். இதை நடத்துவதற்காக பல விஷயங்களை தெரிந்து கொள்ள ஆசைப்பட்டேன். அப்போது நாங்கள் ஒரு இஹள்ங் ள்ற்ன்க்ஹ் நடத்திய போது, சரண்யா என்ற மாணவி 35% மதிப்பெண்ணோடு Amirtha School of Business-க்கு apply செய்திருந்தாள். ஆனால் அங்கு சேர 70% மதிப்பெண் தேவை. ஆனாலும் அவள் தேர்வு பெற்று அந்நிறுவனத்தில் இணைந்தாள். அதே போல் நானும், இன்று நான் வாங்கும் சம்பளம் என்னுடன் படித்த மற்றவர்களைவிட 50% அதிகம். காரணம் (SSS and CUG). நான் செய்த Case study, interview-க்களைப்பற்றியது. அதில் பார்த்தால் தற்காலத்தில் மாணவர்கள் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரிய வில்லை.

உதாரணமாக, நாளை நான் ஒரு இடத்துக்குச் செல்ல வேண்டும் என்றால் எவ்வாறு போகவேண்டும் என்ற தெளிவு என்னுள் இருக்கும். பஸ் அல்லது ஆட்டோ எடுத்துக்கொண்டு அங்கு சென்றுவிடலாம் என்று எனக்குத் தெரியும். ஆனால், வாழ்க்கை ஒரு பயணம் என்று நான் சொன்னால் அதில் நான் எங்கு போகிறேன், எவ்வாறு போகப் போகிறேன் என்றதெளிவு என்னிடத்தில் வேண்டும். அதற்காகத்தான் CUG மற்றும் SSS . CUG என்பது நாம் ஒரு தலைமைப் பொறுப்பை அடைய வேண்டும் என்பதை கற்றுக் கொடுக்கும் ஒரு தளம். எனவே, நாங்கள் மாணவர்கள் மீது கவனம் செலுத்தினோம். ஏனென்றால், அவர்களால் எதையும் சீக்கிரம் கற்றுக் கொள்ள முடியும். CUG அடிப்படையாக ஒரு தலைவரை உருவாக்குவதற்காக மட்டும் உருவாக்கப்பட்டது. மற்ற எந்த இடத்திலும் கற்றுக் கொடுக்காத விஷயங்கள் பல இங்கு நாங்கள் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறோம். பள்ளிகளுக்கே சென்று ஞாயிற்றுக்கிழமைகளில் பள்ளி வகுப்புகளிலேயே மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்குகின்றோம்.

ஒரு பொறியாளராக விரும்பும் மாணவர்கள் சகஜமான வாழ்க்கையில் நடக்கக்கூடிய சில விஷயங்களில் தங்கள் திறமைகளை காட்ட வேண்டும். சில நாட்களுக்கு முன் Amirtha College மாணவர்கள் (B.E. – EEE) ஒரு Washing Machineஐ செய்தார்கள். அது மிகப்பெரிய கண்டுபிடிப்பு இல்லை என்றாலும், வெறும் பாடமாக படிப்பதற்கு இது ஒரு சிறந்த விஷயம். குழந்தைகள் எதைப் படிக்கிறார்களோ, அதை அவர்கள் சராசரி வாழ்விலும் செய்யவேண்டும். ஒருவர் Marketing துறையில் 6 மாதம் வேலை செய்துள்ளார். மற்றொருவர் Marketing படிப்பை 6 மாதம் படித்துத் தேர்வு எழுதியுள்ளார். ஆனால் நிறுவனம் யாருக்கு வேலை கொடுக்கும். அந்தத் துறையில் அனுபவம் உள்ளவனுக்குத்தான். (Who does real-time application). நாங்கள் சமூக சேவை செய்ய ஆசைப்படுகிறோம். சமூக சேவை என்றால் உணவு, உடை கொடுப்பதல்ல. திறமைகளை வளர்த்து மாணவர்களை அவர்கள் வாழ்வில் உயர்த்துவது.

IT நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் அவர்களுக்கென ஓர் உலகத்தை உருவாக்கிக் கொண்டு தங்கள் குடும்பத்தைக்கூட விட்டு விலகுகிறார்கள். ஏன்?

அது அவரவரைப் பொறுத்தது. ஐப என்பது நம் நாட்டுக்குள் modernization என்பதைக் கொண்டு வந்துள்ளது. பெங்களுரூ போன்ற நகரங்களில் ஐப நிறுவனப் பணியாளர்கள் மட்டும் 7000 கோடிகள் மாதச் சம்பளமாக வாங்குகிறார்கள்.

நமக்கே தெரிய வேண்டும், எவ்வாறு நமது வாழ்க்கையில் வேலைக்கும் குடும்பத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று.

வளர்ச்சி சதவீதத்தை பார்க்க வேண்டும் என்றால் IT நிறுவனங்களைப் போல் எதுவும் இல்லை என்றே சொல்லலாம். ஆனால் ஒருவர் IT நிறுவனத்தில் 3 வருடம் தொடர்ந்து வேலை பார்த்தால் அவர் சம்பளம் கண்டிப்பாக 1 லட்சமாக இருக்கும்.

ஆனால் வேலைப்பளு என்பது அதிகம்தான். அதனால் அவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படலாம். அதைத் தவிர்க்க ஒருவருக்கு எவ்வாறு தனது வேலை யையும், டங்ழ்ள்ர்ய்ஹப் வாழ்க்கை யையும் கையாள்வது என்ற தெளிவு இருந்தால் போதும். ஆனாலும் மன உளைச்சல் IT நிறுவனங்களில் அதிகம் என்பதை ஒத்துக் கொள்கிறேன். ஆனால் பல விதங்களில் ஓய்வும் கிடைக்கும்.

IT நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் ஒரு நிறுவனத்தில் இல்லாமல் பல நிறுவனங்களுக்கு மாறுகிறார்களே. ஏன்?

ஏனென்றால், அவர்கள் வேலை செய்வது என்பது பணத்திற்காக. அவர்கள் இப்போது 40000 ஒரு நிறுவனத்தில் சம்பளம் வாங்குகிறார்கள் என்றால் மற்றொரு நிறுவனம் 60000 தருகிறது என்றால் அப்போது ஒரு மாற்றம் தேவைப் படுகிறது.

எப்படி அவருக்கு ஒரு நல்ல நிறுவனம் கிடைக்கிறதோ, அதே போல் அவர் விட்டுச் சென்ற நிறுவனத்திற்கு மற்றொருவர் கிடைப்பார். ஆனால், இது சின்னச் சின்ன நிறுவனங்களில்தான் நடக்கிறது. Cognizant போன்ற பெரிய நிறுவனங்களில் கிடையாது.

நிறைய கம்பெனிகள் அவர்களிடம் வேலை செய்பவர்களை நிறுத்திவிடுவதற்குக் காரணம்?

– நீங்கள் நல்ல திறமைசாலியாக இருந்தால் உங்களை நிறுத்த மாட்டார்கள்.

– நிறுவனத்திற்கே வேலைகள் எதுவும் இல்லாத போது அவர்களால் எப்படி நிறுவனத்தை நடத்த முடியும்.

நீங்கள் ஒரு கம்பெனியில் வேலை செய்ய வேண்டுமா வேண்டாமா என்பது உங்களைப் பொருத்தது. நீங்கள் இல்லா விட்டால் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி குறையும் என்றால் அந்த கம்பெனி கண்டிப்பாக உங்களை விடாது. அதனால் நம் திறமைகள் தான் அதைத் தீர்மானிக்கின்றன.

நீங்கள்தான் சரியான ஒரு நிறுவனத்தை தீர்மானிக்க வேண்டும். எதில் உங்கள் வளர்ச்சி நன்றாக இருக்கும் என்பதை முதலில் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்.

பார்த்தசாரதி, திருநெல்வேலியை சேர்ந்த ஒருவர். Wipro நிறுவனத்தில் வேலை செய்பவர் சொல்வது என்னவென்றால், 99% employees ஒரு நிறுவனத்தில் மாற்றப்படலாம். ஆனால் சில குறிப்பிட்ட நபர்களை மாற்றினால் கம்பெனியினுடைய வளர்ச்சியே பாதிக்கப்படும்.

உங்கள் வழிகாட்டியாகவும் உந்துதலாகவும் இருந்தவர் யார்?

ரங்கசாமி என்பவர்தான் என்னை ஒரு தொழிலதிபர் ஆகத் தூண்டியவர். அவர் என்னை ஒரு நல்ல பேச்சாளராகவும், தொழிலதிபராகவும் ஆக்க விளைந்தார். ஆனால் நான் அப்போது ஒரு பேச்சாளன் அல்ல. ஆனால் இன்று இந்த கம்பெனிகளும் என்னிடத்தில் உள்ளது என்றால் அது என் பேச்சுத் திறமையால்தான். ரங்கசாமி என்பவர் என்னுடைய 8ஆம் வகுப்பில் எனக்கு ஆசிரியராக இருந்தவர். அப்போது அவர் என்னை ஒரு பேச்சுப் போட்டியில் கலந்துகொள்ளச் சொன்னார். ஆனால் எனக்கு அதில் அனுபவம் இல்லை. நான் மனப்பாடம் செய்து மேடையில் பேசினேன். ஆனால் எனக்கு நடுவில் மறந்து போய் விட்டது. எனது ஆசிரியர் என்னை ஊக்குவிப்பதற்காக எனக்கு மூன்றாம் பரிசு பெற்றுத் தந்தார். அதற்குப் பின் 40 போட்டிகளில் பங்கு பெற்றேன். அந்த 40 போட்டிகளிலும் வெற்றி பெற்றேன். அப்போது அவர் சொன்னார், ” நான் இறக்கறதுக்குள்ள கோவையின் முதல் 10 பணக்காரர்களில் ஒருவனா உன்னை பார்க்கணும்”. அவ்வாறு என் வளர்ச்சிக்கு உதவியவர்கள் 56 பேர். அவர்களிடம் எல்லாம் நான் இப்போதும் தொடர்பில் உள்ளேன்.

நான் எதை வேண்டுமானாலும் மறந்து போவேன். ஆனால் என் வளர்ச்சிக்கு உதவிய இவர்களை நான் என்றுமே மறக்க மாட்டேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *