நமக்கு ஏற்புடையதும், ஏற்பட்டதும் ஆன
சூழ்நிலைகளில்
வாழ்வது வாழ்க்கையின் ஒரு பகுதி.
சூழ்நிலைகளையும் புன்னகைத்து வரவேற்பது
வாழ்வின் கலை.
உங்கள் வாழ்வில் தேர்ந்தெடுக்கிற
சூழ்நிலை வரும்போது
நாணயத்தை சுண்டுங்கள்.
காரணம்:
அது உங்கள் குழப்பத்திற்கு
தீர்வை தரும் என்பதற்காக அல்ல.
நாணயம் காற்றில் சுழல்கிறபோது
உங்கள் மனம் எதை அதிகமாக
விரும்புகிறது என்பதை
நீங்கள் அறிவீர்கள்.
சில போராட்டங்களை தனிமையில்
எதிர்கொள்ள நேரிடும்.
சில பாதைகளை தனியாகவே
கடக்க நேரிடும்.
எப்போதும் யாரையும்
சார்ந்திராதீர்கள்.
பாடத்தை சொல்லிக்கொடுத்து
பின்பு தேர்வை வைக்கும்
நம் ஆசிரியர்கள் போல் அல்ல, வாழ்க்கை.
அது சற்று கடினமானது.
நமக்கு தேர்வினை வைத்துவிட்டு
பின்பே அதன் பாடத்தை
நமக்கு கற்பிக்கிறது.
Leave a Reply