அந்தப் பெண்ணின் வீடு தூசும் தும்புமாய் இருக்கும். அவளுக்கு ரோஜா என்றால் பிடிக்கும். ஒருநாள் நான்கு ரோஜாக்களை வாங்கினாள். பூச்சாடியில் வைக்க விரும்பினாள். அது அழுக்காய் இருந்தது. துடைத்து மேசையில் வைத்தாள். மேசை அழுக்காய் இருந்தது.
மேசையைத் துடைத்தாள். அறை ஒட்டடையாய் இருந்தது. அறையைத் தூய்மை செய்தாள். வீடு மங்கலாகவும் அழுக்காகவும் இருந்தது. வீட்டைத் தூய்மை செய்தாள்.
நமக்குப் பிடித்தமான விஷயம் நம்மையே திருத்துவதாய் இருக்க வேண்டும்.
Leave a Reply