கல்விக் கட்டணம் – கணக்குகள் மாறட்டும்
பள்ளிகளின் கல்விக் கட்டணம் குறித்து நீதியரசர் கோவிந்தராஜன் அறிக்கை தொடர்பான விவாதங்கள் வெவ்வேறு பரிமாணங்கள் எடுத்தன. எல்லோருக்கும் ஒரே விதமான கட்டண மாற்றம் என்பது
சாத்தியமில்லாதது. அதே நேரம் கல்வியின் பெயரால் பொருத்தம் இல்லாத பெருந்தொகை பெறுவதும் தடுக்கப்பட வேண்டும்.
இதில் சீர்திருத்தம் வேண்டுமெனில் இருதரப்பும் இறங்கி வருவது அவசியம். தனியார் பள்ளிகள் தருகிற தரத்தில் அரசுப் பள்ளிகளின் தரமும் கட்டமைப்பும் உருவாவதில் கூடுதல் கவனம் அவசியம்.
கூடுதல் கட்டணம் பெறுகிற பள்ளிகளில் உள்ள வசதிகள் பெறுகிற பணத்தின் மதிப்புக்குப் பொருத்தமாக இருந்து, பெற்றோரும் மனமுவந்து அத்தகைய பள்ளிகளில் சேர்த்தால் அப்படியே விட்டுவிடலாம்.
மருத்துவமனைகளில் ஒரே மாதிரியான கட்டணம் சாத்தியமில்லை. அது உயிர் காக்கும் பிரச்சினை. கல்வியின் தரமும் தனிமனிதர்களின் தேர்வு மற்றும் விருப்பத்திற்கேற்ப மாறும் போது கட்டணங்கள் ஒரு வரம்புக்கு உட்பட்டு மாறுபடுவதை அனுமதிக்கலாம் என்பதே நம் கருத்து.
Leave a Reply