அந்த மக்கள் தலைவரின் உரை முடிந்ததும் அவரை நோக்கி முண்டியடித்த மக்கள் வெள்ளத்தில் அந்த ஏழைப் பெண்ணும் ஒருத்தி. எப்படியோ அவரை நெருங்கி, அவர் நடத்தும் போராட்டத்திற்கான நிதியாக தன்னிடமிருந்த ஒரே செப்புக்காசை
வழங்கினாள். அருகிருந்த செல்வந்தர் வாங்கி வைக்க முயன்றபோது தலைவர் மறுத்தார். “நீங்கள் பல்லாயிரம் ரூபாய்களை நன்கொடையாய் தருபவர். இவளின் ஒரே சொத்து இது. அதையும் தரும் உள்ளம் எனக்கு விலைமதிப்பற்றது. நானே பத்திரப்படுத்துவேன்” என்றார். செல்வந்தரும் சிரித்தபடியே சம்மதித்தார். அந்தத் தலைவர், மகாத்மா காந்தி. அந்த செல்வந்தர், ஜமன்லால் பஜாஜ்.
Leave a Reply