ஒருவர் தன்னைத் தானே உற்சாகப்படுத்திக் கொள்வது எப்படி?
(Self Motivation)
சென்ற மாத இதழில் கேட்கப்பட்ட கேள்வி
ஒரு சிறந்த பள்ளி எப்படி இருக்க வேண்டும்?
ஒரு மாணவனையோ, மாணவியையோ பார்த்த மாத்திரத்தில் நீ எந்த பள்ளிக் கூடத்தில் படிக்கிறாய் எனக் கேட்காமல் நீ இந்தப்பள்ளி மாணவன் , மாணவி
தானே எனக் கேட்கும் அளவுக்கு சிறந்த மாணவ மாணவிகளை உருவாக்குவது தான் ஒரு சிறந்த பள்ளி.
சம்பத், கோவை.
பள்ளிக்கூடம் என்பது குழந்தைகளின் சரணாலயமாக அமைய வேண்டும். மதிப்பெண்களைத் தாண்டி பண்பும், மரியாதையும் நிறைந்த பிள்ளைகளுக்கே மாண்பும் மாலையும் தேடி வரும் என்பதை உணர்த்த வேண்டும். தோல்விகளால் துவண்டு போகாமல் போராடி வெல்லும் விவேகத்தை, நம்பிக்கை விதையை விதைக்க வேண்டிய களம் பள்ளிக்கூடமே ஆகும். உலகையே ஜெயித்துக் காட்டும் பருவம், மாணவப்பருவம். உலகையே மாணவர்களின் உள்ளங்கையில் சேர்ப்பிக்கக்கூடியவை பள்ளிக்கூடங்களே.
பா.சுகன்யா, கோவை.
Leave a Reply