தங்கள் சொந்த செலவுக்காக அந்தச் சிறுவர்கள், தெருவில் போகிறவர்களின் காலணிகளைத் துடைத்து காசு பெற்றுக் கொண்டிருந்தனர். தன் கார் கண்ணாடி வழியே அந்த சிறுவர்களை தன் நண்பர்களுக்குக் காட்டிய செல்வந்தர் சொன்னார், “அவர்கள் என் மகன்கள். நான் இன்று பணக் காரன். ஆனால் இப்படித்தான் என்
வாழ்வைத் துவக்கினேன். உழைப்பில் நம்பிக்கை வைக்கும் எந்த ஏழையும் தோற்றுப் போவதில்லை என்பது என் அனுபவம். என் மகன்களும் தங்கள் வாழ்வை ஏழைகளாகத் தொடங்குவதே நியாயம்”. இப்படி சொன்ன செல்வந்தர், ஹென்றி ஃபோர்டு.
Leave a Reply