ஏர்காடும் ஏற்காடும்

-கே.ஆர்.நல்லுசாமி

ஏற்காட்டில் படிக்க வாய்ப்பில்லாமல் போய் விட்டதே என்ற கவலை ஒருபக்கம் இருந்தாலும், காலத்தின் வேகத்தில் ஊர்ந்து வந்தபோது, ஏர்காட்டில் (வயல் காட்டில்) கிடைத்த ஆயிர அனுபவங்ளை படித்துக்கொண்டு ஏற்றம் இறைத்துக்கொண்டே வாழ்க்கையில் ஏற்றம் பெற நினைத்ததனால் அன்று ஏர் ஓட்டியவன் இன்று ஏர் விமானத்தில் செல்ல முடிகிறது. எப்படி? என்றும் உழைக்க மறந்ததில்லை. நேரம் தவறவில்லை. உரிமையோடு எதையும் கேட்க தயங்கியதில்லை.

சோதனைகள் வந்த பொழுதெல்லாம் சோர்ந்து போகவில்லை.

எங்கே படிக்கிறோம் என்பதைவிட எதைப் படிக்கிறோம் என்பதை அறிந்து படிக்கவேண்டும். பொது அறிவை வளர்த்துக் கொள்ளவும், முயற்சிக்க வேண்டும். இன்று அனைவரும் கல்வி கற்று வந்தால்கூட எது போன்ற கல்வியை கற்று வருகிறோம் என்பதை உணர்ந்து படிக்க ஆரம்பித்தால் நிச்சயமாக வெற்றிக்கான வழிகள் மிக எளிதாக கிடைக்கும். அன்று நாங்கள் வாய்ப்பாடு கற்று வந்ததினால் இன்று எங்களுக்கு பல வாய்ப்புகள் கிடைத்தன.

இன்று தினமும் சில மணிநேரம் கணினி பயிற்சிக்குப் பின் உஷ்ஸ்ரீங்ப்ஐஐ கூட உஷ்ஸ்ரீங்ப்ப்ங்ய்ற் ஆக இயக்க முடிகிறது என்றால் அன்று படித்த வாய்ப்பாடு இன்று கிடைக்கின்ற வாய்ப்போடு வெற்றி பெறமுடிகிறது.

பல ஆண்டுகளுக்குப் பின் ஆங்கிலம் கற்றவர்கள் எல்லாம் அஆஇஈஉ என்ற அப்க்ஷங்ற்ண்ஸ்ரீஹப் கூட அ-அஜ்ஹழ்ய்ங்ள்ள்,ஆ-ஆழ்ண்ப்ப்ண்ஹய்ற்,இ-இர்ம்ங்ஹஸ்ரீற்ர்ழ், ஈ-ஈங்ஸ்ரீண்ல்ப்ண்ய்ங்,உ-உக்ன்ஸ்ரீஹற்ண்ர்ய் என்ற வரிசையில் கற்று வருவதால் கற்ற கல்வியும், பெற்ற அனுபவமும் முன்னேற்றக் காற்றை முழுமையாக சுவாசிக்க வைக்கிறது. வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாமல் படிப்பதை விட எழுத்துக்கு அர்த்தம் வைத்து படிப்பது எப்படி முன்னேற்றாமல் விட்டுவிடும்.

நாம் கற்றுக்கொள்கிற ஒவ்வொரு எழுத்துக்களும் நமது தலையெழுத்தை நிர்ணயம் செய்வதாக இருக்கவேண்டும்.
ஒரு மரத்தை ஆணிவேர் எப்படி விழாமல் காத்துக் கொள்கிறதோ அது போல மனிதனுக்கு மனது திடமாக இருக்கவேண்டும். இல்லை யென்றால் ஆணிவேர் இல்லாத மரம்போல அல்லாட ஆரம்பித்துவிடும்.

எவ்வளவு உயரம் சென்றாலும், சென்று கொண்டிருந்தாலும் பிரச்சனைகள் வரும்போது தடுமாற்றம் வருகிறது.
பல அனுபவங்களுக்குப் பின் பயணம் இனிதாய் சென்று கொண்டிருந்த சமயத்தில் ஒரு வியாபாரியுடன் வியாபாரத் தொடர்பு கொண்டதன் மூலம் பெரிய வியாபாரம் கிடைத்தது. மகிழ்ச்சி கொண்டேன்.

வியாபார விதிமுறைகளில் எந்த வித சிக்கலும் இன்றி வியாபாரம் ஆரம்பிக்கப்பட்டது. சிற்சில இர்ம்ம்ன்ய்ண்ஸ்ரீஹற்ண்ர்ய்ல் குறிப்பிட்ட வார்த்தைகள் மனதைப் புண்பட வைத்தது. எப்படி எடுத்துக் கூறியும் புரிந்து கொள்ளவில்லை. மாறாக அவர் எதிர்பாராத பதில் நான் எழுதியதும் அதிர்ந்து போய்விட்டார். இதுபோன்ற துணிவு எப்படி வந்தது?

சில சிக்கலான கேள்விகளுக்கு பதில் கூறுவதும் சிரமமே! நல்ல நட்பு வட்டங்கள் உள்ளதால் அதற்கான பதில் மிக எளிதாக கிடைக்கிறது. நல்ல நண்பர்களுடன் கலந்து கொள்ளும்போது நல்ல தீர்வும் கிடைத்து விடுகிறது.
சில நேரங்களில் வியாபாரம் என்பது விபரீதமாகவும் மாறும் என்பதற்கு பலர் வாழ்க்கையைப் பார்த்த நமக்கு விபரீதமான அல்லது முரண்பாடான எந்த நிகழ்வு வந்தாலும் சில மணிநேரமாவது தடுமாற்றம் ஆகிறது. பற்பல சிந்தனைகள் வருகின்றன.

மனதில் துணிவு இருந்தால் மட்டுமே நம்மிடமுள்ள பிரச்சனைகளை நண்பர்களுடன் கூறமுடியும். இல்லையேல் மனைவியிடம்கூட கூற முடியாது. கூறிப் பயனில்லை என்று நினைப்பதைவிட கூறினால் தீர்வு கிட்டும் என்ற நம்பிக்கை வேண்டும்.

எந்த சிக்கலுக்கும் தீர்வு ஒன்று உண்டு என்பதை எண்ணி சரியானவர்களோடு கலந்தாலோசிக்கும்போது தீர்வு மிக எளிதாகக் கிடைத்துவிடுகிறது. இவ்வாறாக பற்பல சிக்கலுக்கு தீர்வு காணக்காண வாழ்க்கை கல்வியில் வைக்கப் பட்ட தேர்வில் வெற்றி பெறமுடிகிறது.

எங்கள் நிறுவனத்தில் பணியாற்றுவதற்காக வருபவர்களிடம் சில எளிமையான கேள்விகள் கேட்டால்கூட சொல்ல முடிவதில்லை.

ஆனால், .ஆஆஅ, ஆஇர்ம், ஙஇர்ம், ஙஅ, ஙஆஅ பட்டம் பெற்றவர்களாய் இருந்தும், நல்ல மதிப்பெண் பெற்றவர்களாய் இருந்தும், ஒரு சாதாரண பொது வினாவிற்குகூட பதில் தெரியவில்லை என்பது வியப்பாக இருக்கிறது.

இது அவர்களின் தவறாக நினைப்பதைவிட அவர்கள் கற்று வருகிற பாடங்களும், கற்றுத் தருகிற கல்வி நிறுவனங்களின் குறைகளாக நினைக்கிறேன்.

தொழில்கூடங்களுக்கு சென்றாலோ, தொழில் செய்தாலோ, சில அடிப்படை கணக்குகளும், இர்ம்ம்ன்ய்ண்ஸ்ரீஹற்ண்ர்ய் நந்ண்ப்ப்ள்ம் மிகமிக அவசியமாகிறது. அவற்றை ஆராய்ந்து கல்வி நிறுவனங்கள் கற்றுக் கொடுத்தால் முதல் மார்க் வாங்குவதோடு, வாழ்க்கையிலும் முதல்வனாக வருவார்கள்.

“உழைப்பவன் வீட்டில் பசி எட்டிப் பார்க்குமே தவிர உள்ளே நுழையாது” என்பார்கள்.

படிக்க நமக்கு வாய்ப்பு இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் உழைப்பதில், உயர்வதில், உயர்த்துவதில் முதல் இடத்தைப் பிடிக்க சந்தர்ப்பம் அதிகமாகவே இருக்கிறது.

ஏர்காட்டில் படித்தாலும், ஏற்காட்டில் படித்தாலும் மற்றவர்கள் சொல்வதை நாம் ஏற்கவும், நாம் சொல்வதை மற்றவர்கள் ஏற்க வைப்பதும் நம் கைகளில்தான் உள்ளது.

“பயனுள்ளதாய் படிப்போம்.
படித்துப்பயன் பெறுவோம்
படித்ததைப் பயன்படுத்துவோம்.”

“உழைத்துப் பெற்றிடுவோம்.
பிழைத்துக் காட்டிடுவோம்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *