நமக்குள்ளே

நம் ஆசிரியரின் அட்டைப்படக் கட்டுரை சாதனை மந்திரங்கள் – 6 என்ற தலைப்பில் உருவான கட்டுரையில் “சவாலா? சமாளிக்காதே” என்ற துணைத் தலைப்பில் “சவால்களை சமாளிப்பது சரக்கில்லாதவர்களின் வேலை…. சவால்களை ஜமாய்ப்பதுதான் சாதனையாளர்களின் லீலை” – இதுதான் சரி.

இவ்வளவு காலம் உள்ள சவாலே.. சமாளி என்ற கூற்றை உடைத்தெறிந்து புது இரத்தம் பாய்ச்சப்பட்டுள்ளது. ஒவ்வொருவரின் நிகழ்கால நம்பிக்கை வாழ்வில்… வாழ்க.. வளர்க… உம் சீரிய நம்பிக்கை ஊட்டும் பணி..

எஸ்.யூஜன், கோவைப்புதூர்.

சாதனை மந்திரங்கள் 6, உள்ளத்துக்கு ஊக்கம் கொடுத்ததோ பல நூறு. படித்தவுடன் மனம் ஆனதோ தெளிவான ஆறு. எழுதிய ஆசிரியர் மரபின் மைந்தனுக்கோ ஆயுசு நூறு. என்றும் எழுதிக் கொண்டிருக்கும் இவருக்கு வயசோ என்றும் பதினாறு.
அமராவதி பரமேஸ்வரன், திட்டக்குடி.

‘பள்ளம் மேடுகள் இருந்தாலும் – உன் பாதை நீள்வது உனக்காக’ பள்ளத்தில் புலம்பிக் கொண்டிருப்பவர்களுக்கு வழங்கப்பட்ட புத்துணர்ச்சியூட்டும் டானிக்.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கோவை.

செம்படம்பர் மாத இதழில் வெளிவந்த ‘சாதனை மாற்றங்கள் 6 என்ற பகுதி மிகவும் எதார்த்தமாகவும் வெற்றியை விரும்பும் மனிதர்களுக்கு ஒரு தூண்டுகோளாகவும் அமைந்துள்ளது.

எஸ்.ராகோதமன், சென்னை.

சென்ற இதழில் வெளியான ‘மாற்றம்’ சிறுகதை மிகவும் நம்பிக்கை ஊட்டும் கதை. திருக்குறளை நினைவூட்டும் வகையில் அருமையான நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கியுள்ளார்.

ச.சரவணன், கோவை.

கவுன்சிலிங் கலையை கற்றுத்தரும் மீட்பாரகுங்கள் தொடரில் மற்றவர்களின் இதயத்தில் இடம்பிடிக்க சுலபமான பல வழிகளை ஆசிரியர் கிருஷ்ண.வரதராஜன் எடுத்துக் கூறியிருப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

பிரியா முருகேஷ், கோவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *