சந்தேகம் சந்தனராஜ்

சந்தேகம் சந்தனராஜ் – 1

”வலதுகைப் பழக்கம் உள்ளவர்கள் உணவை வாயின் வலது பக்கம் மெல்வார்கள். இடதுகைப் பழக்கம் உள்ளவர்கள் இடது பக்கம் மெல்வார்கள்”

அப்போது அவுக் அவுக்னு அள்ளிப் போட்டுக்கிறவங்க எந்தக்கை பழக்கம் உள்ளவங்க?

********
சந்தேகம் சந்தனராஜ் – 2

”குகையை விட்டு வெளியே வரும்போது
வவ்வால்கள் எப்போதும் இடது புறம்தான்
திரும்பும்”

பின்னே! இல்லாட்டி டிராபிக் கான்ஸ்டபிள்
அபராதம் விதிச்சிடுவாரே!

****
சந்தேகம் சந்தனராஜ் – 3

”டைட்டானிக் கப்பலை உருவாக்க 7 மில்லியன் டாலர்கள் செலவாயின. டைட்டானிக் படம் எடுக்க 200 மில்லியன் டாலர்கள் செலவாயின.”

அப்படீன்னா, டைட்டானிக் படம் எடுத்த செலவிலே 28 டைட்டானிக் கப்பல்களையே உருவாக்கியிருக்கலாமோ!!

********
சந்தேகம் சந்தனராஜ் – 4

”சூயிங்கம் மென்றுகொண்டே வெங்காயம்
உரித்தால், கண்களில் கண்ணீரே வராது”

வெங்காயம் மென்று கொண்டே சூயிங்கம் பாக்கெட்டை உரித்தால் கண்ணீர் வருகிறதே… அது எப்படி?

********
சந்தேகம் சந்தனராஜ் – 5

”புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்திவிட்டால், ஒரு மணி நேரம் குறைவாகத் தூங்கினாலே போதும்”

தூக்கம் வரலைன்னு புகைபிடிக்க ஆரம்பிச்சுட்டா என்னங்க பண்றது?

*********
சந்தேகம் சந்தனராஜ் – 6

”மற்ற வகை நாய்களைவிட ஜெர்மன்
ஷெப்பர்டு நாய்கள்தான் மனிதர்களை
அதிகம் கடிக்கின்றன”

இதை மத்தவகை நாய்களுக்கு சொல்லீடாதீங்கப்பா!! ரோஷம் வந்திடப் போகுது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *