நமது நம்பிக்கை இதழ் சிறந்த இதழ். மாணவர்களின் நலன்களையும், பணிபுரிபவரின் கருத்துக்களைவும் வெளியிடும் உன்னத இதழ். கான்ஃபிடன்ஸ் கார்னர், வாழ்க்கையின் திருப்பம். தடைகள் தகர்த்த கலாம், பகுதி ஏற்கெனவே படித்திருந்தாலும் புதிய தகவலை கொண்டு செல்கிறது,
பிடித்துப் போனதில் பிடிவாதமான இருங்கள், நீங்கள் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவர்கள் என்று ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு உள்ளன.
ஆ.ரேவதி, சேலம்.
கான்ஃபிடன்ஸ் கார்னர் கவுன்சிலிங் கார்னர், சிறு வயது படிக்கின்ற மாணவர்களுக்கு படிக்க ஆர்வமூட்டும் வகையில் கதையோட்டத்துடன் உள்ளதால் உண்மையிலேயே ஊக்கமூட்டும் கார்னர்தான்! நமது நம்பிக்கைக்கு நன்றி.
தங்க பரமேஸ்வரன், பரமக்குடி
தயக்கமின்றி செய்தால் எதிலும் வெற்றிபெறலாம் என்பதற்கு நல்லதோர் முன்னுதாரணமாய் திகழ்ந்த திருமதி.சுதாமூர்த்தி பெண்களின் கனவு நாயகியாக திகழ்வார் என்பதில் எள்ளவும் ஐயமில்லை.
சித்ரா, கோவை.
நம்பிக்கை இருந்தால் சாதிக்கலாம் என்ற வரிகளுக்கேற்ப பனியன் கம்பெனியின் அடிமட்டத்திலிருந்து சிகரம் தொட்ட இளம் தொழிலதிபர் சுரேஷ். இளைஞர்களுக்கு நல்ல வழிகாட்டி. இதுபோன்ற சாதனையாளர்களின் பேட்டிகள் உற்சாகம் தருகின்றன.
அநன், பொள்ளாச்சி.
‘மனது வைத்தால் மலையை நகர்த்தலாம்’ உற்சாகத் தொடரில் அப்துல்கலாமின் பிறந்தநாளை மாணவர் தினமாக அறிவித்த வேளையில், தடைகளை தகர்த்த கலாம் பற்றிய தொடர் கட்டுரை நம்பிக்கை டானிக். கண்ணோடு மின்னல்கள் சொல்லோடு நம்பிக்கை தந்த கலாமின் ஆசைப்படி பாரதம் வல்லரசாகும் என்ற நம்பிக்கையோடு,
நவீன், பெரிச்சிபாளையம்.
நமக்கென்று உள்ள தனித்தன்மையை ஒருபோதும் மாற்றிக் கொள்ள மாட்டேன் என்ற நம்பிக்கை இருந்தால் நம்மை வெல்ல யாராலும் முடியாது என்று உணர்த்தியது த.ராமலிங்கம் அவர்களின், ‘விதைகளே இங்கு வேண்டப்படும்’ கட்டுரை.
விஸ்வம், தாராபுரம்
Leave a Reply