கூட்டம் கூட்டமாய் சில முள்ளம்பன்றிகள், குளிர் பிரதேசத்தில் மாட்டிக்கொண்டன. எல்லாம் நெருக்கமாய் நின்று கொண்டால் அந்த நெருக்கத்தின் உஷ்ணம், குளிரிலிருந்து காப்பாற்றும் என்ற யோசனை பிறந்தது. ஆனால், நெருங்கி நிற்கும்போது உடலின் முள் ஒன்றின்மேல் ஒன்று குத்தி ரத்தம் கசிந்தது. அதற்கு பயந்து தள்ளி நின்ற ஒன்றிரண்டு முள்ளம்பன்றிகள், குளிரில் உறைந்து செத்தன.
சின்னக்காயங்களைப் பொருட்படுத்தாமல் ஒன்றாய் நின்ற பன்றிகள் உயிர் பிழைத்தன. நெருக்கமானவர்களுடன் சேர்ந்திருக்கும்போது சில மனக்காயங்கள் ஏற்படுவது இயற்கை. கொல்லும் தனிமையைவிட சின்னக்காயங்கள் எவ்வளவோ மேல்.
saravanakumar
i eyse open for u and thank u sir