நெருக்கடி காலங்களில் பக்கத்துக் கடைகளில் பண்டமாற்று செய்து கொள்வது வணிகர்களின் இயல்பு. அடுத்த கடையைச் சேர்ந்த இளைஞன் தன் வாசலில் வந்து நின்ற போது அந்த முதலாளி சொன்னார், ”உனக்குத்தான் பொருட்கள் எங்கெங்கே இருக்குமென்று தெரியுமே! நீயே எடுத்துக் கொள்”. விரைந்த இளைஞன் சில நிமிடங்களில் பொருட்களுடன் வந்து பட்டியலை எழுதிவிட்டு காற்றைப்போல விரைந்தான். தன் நண்பரிடம் கடைக்காரர் சொன்னார், ‘இவன் ஊதிய உயர்வை எதிர் பார்க்கிறான். நிச்சயம் கிடைக்கும்”. எப்படிச் சொல்கிறீர்கள் என்றபோது, ”அவனுடைய முதலாளி தராவிட்டால் நான் தருவேன்” என்றார்.
உண்மையான உழைப்புக்கு உலகெங்கும் வாசல்கள் திறந்தே இருக்கும்.
rajarajacholan
migavum arumai