நமக்குள்ளே

அனுராஜனின் மாத்தியோசி தொடர் நன்றாக உள்ளது. கிருஷ்ண.வரதராஜன் எழுதிய கவுன்சிலிங் கலையை கற்றுத் தரும் தொடர் அற்புதமாக இருந்தது. அடுத்து அவரின் தொடரை ஆவலாய் எதிர்பார்க்கின்றோம். சந்தேகம் சந்தானராஜ் சூப்பர்…..
லீமா ஸ்டான்லி, தஞ்சாவூர்.

நம்மில் பலர் எதற்கெடுத்தாலும் நேரமில்லை. நேரம் போதிய அளவில்லை என்று செய்ய வேண்டிய வேலைகளை தள்ளிப் போடுபவர்கள், வால்டன் பற்றிய கட்டுரை படித்தால் போதும். நேரங்கள் உருவாவதில்லை, உருவாக்கப்படுகின்றன என்று உணர்த்தியது, அறிய வேண்டிய ஆளுமைகள் தொடர்.

பிரபாகரன், கோவை.

நம்பிக்கையூட்டும் எழுச்சிமிக்க கட்டுரைகள் வெளியிடுவதில் நமது நம்பிக்கை இதழுக்கு நிகர் நமது நம்பிக்கையாகும். கான்ஃபிடன்ஸ் கார்னர் எங்களுக்கு உற்சாகம் தரும் அற்புத டானிக், கணவனோ மனைவியோ நண்பரோ அல்லது மற்றவரோ நமக்காக அவர் செய்யும் செயலுக்கு மூன்றெழுத்து மந்திரமான நன்றி என்ற வார்த்தையை தெரிவியுங்கள் அவர்கள் உங்கள் முன் வைத்திருக்கும் அபிப்பிராயத்தை பன்மடங்கு உயர்த்தும். தவறுகளுக்கு உடனே வருத்தம் தெரிவியுங்கள், அது உங்களை நன்மனிதனாக்கும் என்று உணர வைத்தது, வழக்கறிஞர் ராமலிங்கத்தின் உற்சாகத் தொடர்.

தென்னவன், தென்காசி.

தவறுகளிலிருந்து திருத்திக் கொண்டால்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்று உணர வைத்தது, மனநல நிபுணர் டாக்டர் குமாரபாபுவின் நேர்காணல். மேலும் நமது நம்பிக்கை இதழில் நம்மூர் இளைஞர்களின் சாதனைக் கட்டுரைகளை வெளியிட்டால் நன்றாக இருக்குமே!
சேகர், திருச்சி.

பளிச் விஷயங்கள் பத்து, இதழ் வழியே எஸ் எம் எஸ் நன்று. கூடி வாழ்கின்ற வாழ்வில் தான் குதூகலம் என்ற வரிகளின் மூலம் அழகாய் சொல்லியுள்ளார் மரபின்மைந்தன் முத்தையா. மனதில் உறுதி இருந்தால் எல்லாமே பலம்தான், பலவீனங்களும்கூட பல சமயங்களில் பலம்தான் என்று உலகுக்கு உணர வைத்தது எடிசனின் நம்பிக்கை.

சரவணன், கோபி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *