சேமிப்பின் பலம் கைகொடுக்கும் குழந்தையின் கல்விக்கு!

– நல்லசாமி

ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும். கல்வி தவிர மற்ற பொருள்கள் அத்தகைய சிறப்புடைய செல்வம் அல்ல என்பது சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு வள்ளுவரால் கூறப்பட்ட வாக்கு. இன்றைய சூழ்நிலைக்கும் பொருந்தி வருகிறது. ஒரு சிலர் தம் வாழ்நாள் முழுவதும் சம்பாதிக்கும் தொகையில் பெரும் பகுதியை தனது குழந்தைகளின் கல்விக்காக செலவிடுவதே இதன் சிறப்பினை உணர்த்துகிறது.

ஒருவரின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தும் கல்வியாக நமது சமூகம் காலந்தொட்டு நம்பிவருவது மருத்துவம் மற்றும் பொறியியல் போன்ற தொழில் சார்ந்த துறைகளையே. நமக்கு முந்தைய தலைமுறைகளில் (ச்ர்ழ்ம்ங்ழ் எங்ய்ங்ழ்ஹற்ண்ர்ய்ள்) கல்வி நிறுவனங்கள் பெரும்பாலும் அரசாங்கம் மற்றும் சேவை நிறுவனங்களால் நடத்தப்பட்டு வந்த, தரமான கல்வி, சேவை நோக்குடன் வழங்கப்பட்டு வந்தது.

இன்றைய கால கட்டங்களில் பொருளாதார சீரமைப்பு போன்ற காரணங்களால் அனைத்து துறைகளும் தனியார் மயமாக்கப்பட்டு சிறப்படைந்து வருகிறது. இதற்கு கல்வித்துறையும் விதிவிலக்கல்ல. ஒவ்வொரு வளர்ச்சிப் பாதையிலும் சாதக பாதக சூழ்நிலைகள் என இரண்டுமே உண்டு. தரமான தொழில் சார்ந்த கல்வியின் வளர்ச்சி தனியார் கல்வி நிலையங்கள் மூலம் பன்மடங்கு வளர்ந்துள்ளது. அதுபோலவே அதற்கான கட்டணங்களும் ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து வருகிறது. இத்தகைய சூழ்நிலைகளில் பெற்றோர்களின் சேமிப்புடன் அதற்கான திட்டமிடுதலும் முக்கியத்துவம் வாய்ந்தது. பெற்றோர்களின் சேமிப்பு எதிர்கால கல்வித் தேவையை பூர்த்தி செய்யாத பட்சத்தில் குழந்தைகள் தங்களது கல்விக் கனவுகளை பொருளாதாரத்தை முன்னிட்டு சமரசம் செய்து கொள்ளும் சூழ்நிலை ஏற்படுகிறது. உதாரணமாக முதல் தர கல்வி நிலையத்திற்குப் பதிலாக ஏதேனும் ஒரு கல்வி நிறுவனத்தில் சேர்ந்து படிக்க வேண்டியுள்ளது அல்லது தனது விருப்பத்திற்கு மாறான துறையை தேர்ந்து எடுக்க வேண்டியுள்ளது. இத்தகைய செயல்கள் குழந்தைகளின் ஈடுபாட்டைக் குறைக்கிறது. சங்க கால புலவர் ஔவையார் கூறியது போல், “கற்கை நன்றே! கற்கை நன்றே! பிச்சைப் புகினும் கற்கை நன்றே!” இதன் மூலம் அறிவது பொருத்தமான கல்வியை நாம் எப்பாடு பட்டாவது குழந்தைகளுக்கு அமைத்துத் தருவது ஒரு பொறுப்பான பெற்றோரின் கடமையாக அமைகிறது.

எவ்வாறு திட்டமிடுவது:

திட்டமிடுதல் முதல் படி. குழந்தைகளின் திறமை, ஆர்வம் மற்றும் பெற்றோரின் எதிர்பார்ப்பு ஆகியவற்றைக் கொண்டு பொருத்தமான துறை மற்றும் கல்வி நிறுவனங்கள் (உள்நாடு, வெளிநாடு) போன்றவற்றை தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து அத்தகைய கல்விக்கான கட்டணத்தை இன்றைய மதிப்பில் தெரிந்துகொள்ள வேண்டும்.

இன்றைய மதிப்பில் ரூ. 1 லட்சம் செலவு என கணக்கிட்டால் 5, 10 மற்றும் 15 வருடங்களில் தோராயமாக அதன் மதிப்பானது கீழ்க்கண்ட அட்டவணைப்படி மாறுபடும்.

இன்றைய மதிப்பில் : ரூ. 1 லட்சம்
5 ஆண்டுகளில் : ரூ. 1,34,000/-
10ஆண்டுகளில் : ரூ. 1,79,000/-
15 ஆண்டுகளில் : ரூ. 2,40,000/-

உங்களது குழந்தையின் வயதிற்கேற்ப சேமிக்கும் கால கட்டத்தை முடிவு செய்து அதனை மாதமாகவோ, காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டுக்கு ஒருமுறையோ தங்களது சூழ்நிலைக்கேற்ப சேமிப்புத் திட்டத்தினை அமைத்துக் கொள்ளலாம்.

எவ்வளவு சேமிப்பது, எதில் சேமிப்பது:

மேற்கண்ட கணக்கீட்டின்படி தேவையான தொகையை நிர்ணயித்து தங்களது முதலீட்டினை நிலையான வட்டி விகித முதலீடு மற்றும் பரஸ்பர நிதி (ஙன்ற்ன்ஹப் ஊன்ய்க்) மற்றும் இதர சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்யலாம். இது ஒருவருக்குள்ள கால அவகாசம், சேமிக்கும் தொகை மற்றும் அவரின் ரிஸ்க் எடுக்கும் திறன் ஆகியவற்றைக் கொண்டு பொருத்தமான சேமிப்புத்திட்டத்தினை தேர்வு செய்யலாம். உதாரணமாக சேமிப்பில் 35 சதவிகிதத்தை 15 ஆண்டு கால அவகாசம் உள்ள நபர் பரஸ்பர நிதித்திட்டத்தை தேர்வு செய்யலாம். அதே சமயம் 5 ஆண்டு கால அவகாசமுள்ள நபர் 10 அல்லது 15 சதவிகிதத்தை பரஸ்பர நிதித் திட்டத்தில் சேமிக்கலாம். மீதித் தொகையை நிலையான வட்டி விகிதத்தில் இருப்பது பாதுகாப்பானது.

சேமிப்பின் நிலையை குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கு ஒரு முறையாவது கண்காணித்து தேவைப்பட்டால் மறுபரிசீலனை செய்வது சிறந்தது.

தங்களது முதலீடு சுமாராக 8 சதவீத அடிப்படையில் வளர்ந்தால் ரூ.1லட்சத்திற்கான தங்கள் எதிர்கால இலக்கை அடைய கீழ்க்கண்டவாறு சேமிக்க வேண்டும்.

கடைப்பிடிக்க வேண்டியவை:

1. தங்களின் சேமிப்பை நீண்ட கால அடிப்படையில் அமைப்பது பாதுகாப்பானதால் அதனை குழந்தையின் முதல் அல்லது இரண்டு வருடங்களில் சேமிப்பைத் துவக்குவது சிறந்தது.

2. உங்கள் குழந்தையின் எதிர்கால கல்வித் தேவைக்கான சேமிப்பாக இருந்தால் அந்தக் குறிப்பிட்ட இலட்சியத்தைத் தவிர எதற்காகவும் உபயோகப் படுத்தக்கூடாது.

3. எதிர்பாராமல் கிடைக்கும் சம்பள உயர்வு, போனஸ் மற்றும் குழந்தைகளுக்கான பரிசுத் தொகை ஆகியவற்றை இந்த சேமிப்பில் சேர்ப்பது கூடுதல் பலன் தரும்.

4. நீங்கள் தனிநபர் வருமானம் உடையவராக இருந்தால் இந்த சேமிப்பு இலக்கிற்கான தொகையை ஏதாவது ஒரு ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் இலாபமற்ற (டன்ழ்ங் பங்ழ்ம் டப்ஹய்) மூலம் பாதுகாப்பை பெறுவது குறைந்த செலவே ஆகும்.

5. இவ்வாறு சேமிப்புத் திட்டங்கள் எதுவானாலும் குறிப்பிட்ட காலத்தேவைக்கு முன்பு – 1 அல்லது 2 ஆண்டுகளுக்கு முன்பு நிரந்தர வைப்பு மற்றும் சேமிப்பு போன்றபாதுகாப்பான திட்டங்களில் எப்போது தேவைப்பட்டாலும் எடுக்குமாறு மாற்றி வைத்துக் கொள்வது நன்று.

செய்யக்கூடாதவை:

1. சேமிப்புக்கான காலத்தை தள்ளிப் போடுவது சேமிப்பின் சுமையை அதிகரிக்கும்.

2. தேவையறிந்து பொருத்தமான திட்டத்தை தேர்வு செய்வதில் ஆர்வம் காட்ட வேண்டும்.

3. திட்டத்தின் சாதக பாதகங்களை அறியாமல் ஆயூள் காப்பீடு மற்றும் பரஸ்பர நிதி நிறுவன முகவர்கள் கூறும் தகவல்களை ஆராயாமல் அந்தத் திட்டம் தமக்கு காலம் கடந்து பாதிப்புக்குள்ளாவதை தவிர்க்கலாம்.

4. இவ்வாறு சேமிக்காமல் தனது மூப்பு சேமிப்பு திட்டம் (தங்ற்ண்ழ்ங்ம்ங்ய்ற் ஊன்ய்க் / டங்ய்ள்ண்ர்ய் ஊன்ய்க்) ஆகியவற்றை பயன்படுத்துவது அவர்களது எதிர்கால பொருளாதார தேவையை பாதிக்கும்.

நமது குழந்தைகளின் கல்விக் கனவை நினைவாக்க சேமிப்புடன் கூடிய திட்டமிடுதலும் அவசியம், என்பதை உணர்ந்து இருப்போம். இதற்கு அரசு வங்கிகளின் கல்விக்கடன் திட்டங்கள் குறைந்த வட்டியில் சுலபமான அணுகுமுறையில் கிடைக்கின்றன. இந்தக் கடன்கள் வேலை கிடைத்த பின்பு சுலபமாக திருப்பிச் செலுத்தும் சலுகையோடு வரிசேமிப்பையும் அளிக்கிறது.

இது பெற்றோரின் பொருளாதார சுமையை குறைப்பதோடு, குழந்தைகளின் பொறுப்புணர்ச்சியை அதிகமாக்கும்.

இதுபோன்று திட்டமிடுதல் மூலம் வளமான குடும்பம், வளமான சமுதாயத்தை உருவாக்கி நம் நாட்டு வளர்ச்சியில் பங்கு பெறுவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *