‘கம்டெக்ஸ்’ என்ற பெயரில் கம்ப்யூட்டர் கண்காட்சி ஒன்று நடைபெற்றது. அதில் பேசிய பில்கேட்ஸ், ”கார் தயாரிக்கும் நிறுவனமாகிய ஜெனரல் மோட்டர்ஸ், கம்ப்யூட்டர் துறை போல் புதிய தொழில் நுட்பங்களைக் கடைப்பிடித்திருந்தால், 25 டாலர்களுக்கு கார்கள் கிடைக்கும். ஒரு கேலன் டீசலுக்கு ஆயிரம் மைல்கள் ஓட்டலாம்” என்றாராம்.
‘ஜிவ்’வென்று ஏறிவிட்டது ஜெனரல் மோட்டர்ஸ் நிறுவனத்திற்கு. மைக்ரோசாப்ட் போன்ற தொழில்நுட்பம் கார் களுக்கு வந்திருந்தால் என்ன ஆகுமென்ற கற்பனையை டாப் கியரில் ஓடவிட்டு, பில்கேட்ஸை கொஞ்சம் போட்டுப் பார்த்து விட்டார்கள். ஜெனரல் மோட்டர்ஸின் கற்பனை இது…
1. காரணமே தெரியாமல் கார்கள் அடிக்கடி க்ராஷ் ஆகும்.
2. நடுவழியில் கார் நின்றால், காரின் விண்டோஸை மூட வேண்டும். மீண்டும் விண்டோஸைத் திறந்து மறுபடி இயக்க வேண்டி வரும்.
3. சில நேரம் கார்களின் என்ஜின்களை ரீ ஸ்டார்ட் செய்ய வேண்டி வரலாம்.
4. இப்போது காரின் உஷ்ண அளவு, எரிபொருள் அளவு எல்லாம் தனித்தனியே தெரிகிறது. கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தைப் பின்பற்றினால், பட்ண்ள் இஹழ் ட்ஹள் ல்ங்ழ்ச்ர்ழ்ம்ங்க் ஹய் ண்ப்ப்ங்ஞ்ஹப் ர்ல்ங்ழ்ஹற்ண்ர்ய் என்ற குறிப்பு வரும்.
5. விபத்து ஏற்பட்ட விநாடி, ஏர் பலூன் பொத்தானை அழுத்தினால் அழ்ங் ஹ்ர்ன் நன்ழ்ங் என்று கேட்கும். அதற்குள் காரியம் மிதமிஞ்சிப் போகும்.
6. என்ஜினை அணைக்க ஸ்டார்ட் பட்டனை அழுத்த வேண்டியிருக்கும்.
7. கட்டுப்பாட்டு முறைகள் காருக்குக் கார் மாறும் என்பதால், புதிய கார் வாங்கும் போதெல்லாம் வாடிக்கையாளர்கள் புதிதாக கார் ஓட்டிப் பழக வேண்டி வரும்.
கம்ப்யூட்டர் துறையை கார்க்காரர்கள் கலாய்த்த முறை இது.
பில்கேட்ஸ்…. இது தேவையா உங்களுக்கு?
Leave a Reply