அறிய வேண்டிய ஆளுமைகள்

-மரபின் மைந்தன் முத்தையா

டேல் கார்னகி

சுயமுன்னேற்ற உலகில் ஒவ்வொருநாளும் உச்சரிக்கப்படும் பெயர்களில் ஒன்று டேல் கார்னகி. அமெரிக்காவில் உள்ள மிசௌரியில், ஏழை விவசாயிக்கு மகனாக 1888இல் பிறந்தவர் இவர். இனிதாகக் கழியவில்லை, இளமைப்பருவம். பொறுப்புக்களுடன் போராடிக்கொண்டே படிக்க வேண்டியிருந்தது.

அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து, அப்பா வளர்த்து வந்த பன்றிகளுக்குத் தீனி வைத்து, பசுக்களில் பால் கறந்து, பிறகு படிக்கப்போக வேண்டி வரும். கல்லூரிப்படிப்பை முடித்தபிறகு விற்பனையாளராகச் சேர்ந்து பணிபுரிந்தார் டேல் கார்னகி.

அவரின் அம்மாவுக்கோ, மகனை மதபோத கராக்கி அழகு பார்க்க ஆசை. ஆனால் டேல் கார்னகிக்கு நடிப்பில் ஆசை வந்து ஆட்டி வைத்தது. 1910இல், நியூயார்க்கில் உள்ள நாடகப் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்தார். அப்படியொரு கல்லூரி இருப்பதே ரயில் பயணம் ஒன்றில் சக பயணி சொல்லித்தான் தெரியும். ஆறு மாதப் பயிற்சிக்கு நானூறு டாலர்கள்.

டேல் கார்னகியின் சேமிப்பு காணாமல் போனது. சில வீதி” நாடகங்களில் நடித்தார். கைச்செலவிற்கு சூட்கேஸ், டை வியாபாரத்தில் இறங்கியது கை கொடுத்தது.

1928ல், நியூயார்க்கை சேர்ந்த பேராசிரியர் ஹேரி ஓவர்ஸ்ட்ரீட் எழுதிய, ‘ஐய்ச்ப்ன்ங்ய்ஸ்ரீண்ய்ஞ் ஏன்ம்ஹய் ஆங்ட்ஹஸ்ண்ர்ன்ழ்’ என்ற புத்தகம் டேல் கார்னகியை மிகவும் கவர்ந்தது.
அதேநேரம் நார்மன் வின்சென்ட் பீல், ஓரிஸன் மார்டன், ஹென்றி லிங்க் போன்ற வர்களின் எழுத்துக்களையும் விரும்பிப்படிக்க ஆரம்பித்தார்.

கற்ற புத்தகங்கள், பெற்ற அனுபவங்கள் ஆகியவற்றின் அடிப்படையில், சுயமுன்னேற்ற வகுப்புகளை வடிவமைத்தார் டேல் கார்னகி. உரையாற்றும் திறன், விற்பனைத்திறன், நிர்வாகத் திறன் என்று வெவ்வேறு தலைப்புகளில் அவருடைய வகுப்புகள் வடிவமைக்கப்பட்டன.

20 முதல் 35 பேர் இந்தப்பன்னிரண்டு வகுப்புகளில் சேர்க்கப்பட்டனர். இப்படித் தொடங்கிய இந்த வகுப்புகள், டேல் கார்னகியின் முக்கியமான புத்தகங்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டன. பங்கேற்பாளர்களுக்கு வீட்டுப்பாடம்கூட உண்டு.

இதற்கிடையில், டேல் கார்னகியின் புத்தகங்களும் பிரபலமாகத் தொடங்கின.

ஆனால், அவரது திருமண வாழ்க்கை திருப்திகரமாக இல்லை. லோலிட்டா என்ற பெண்ணுடனான மணவாழ்க்கை 1931ல் முறிந்தது. 1944ல் டோரத்தி என்ற பெண்ணை மணந்தார். டோரத்தியும் ஏற்கனவே விவாகரத்தானவர்.

டோரத்தி, 1945ல் உருவான கார்னகி அசோசியேட்ஸ் நிறுவனத்தின் நிர்வாகத்தை கவனித்துக்கொண்டார்.
டேல் கார்னகி உதிர்த்த பல வாசகங்களே, அதிரடி மாற்றங்களுக்கு அடித்தளம் அமைக்கும் விதமாய் இருந்தன.

– உற்சாகமாக இருப்பதுபோல் நடியுங்கள். உற்சாகமடைவீர்கள்.

– விமர்சிப்பது, கண்டனம் செய்வது, புகார் சொல்வதெல்லாம் எந்த முட்டாளாலும் முடியும். புரிதலும் மன்னித்தலும் புத்திசாலிகளுக்கே சாத்தியம்.

– நீங்கள் மிகவும் நேசிக்கும் ஒன்றை முழு மனதோடும் முழு அர்ப்பணிப்பு உணர்வோடும் செய்கிற போது, நீங்கள் இதுவரை அறிந்தேயிராத ஆனந்தத்தை அனுபவிப்பீர்கள்.

– உலகின் மொத்த சந்தோஷத்தின் அளவைக் கூட்ட உங்களால் முடியும். எப்படித் தெரியுமா?

தனிமையாகவும் தாழ்வாகவும் உணரும் சிலருக்கு ஊக்கம் தரும் சொற்களைத் தருவதன் மூலம்தான். நீங்கள் சொன்ன சொற்களை நீங்களே மறந்தாலும் கூட, அதனால் பயன்பெற்றவர் வாழ்க்கை முழுவதும் அந்த சொற்களை நினைவில் வைத்திருப்பார்.

தூக்கம் வரவில்லை என்றால், கவலைப் பட்டுக்கொண்டே புரண்டு கொண்டு இருக்கா தீர்கள். எழுந்து எதையாவது செய்யுங்கள்.

டேல் கார்னகியின் புத்தகங்களில்,’”ஏர்ஜ் ற்ர் ஜ்ண்ய் ச்ழ்ண்ங்ய்க்ள் ஹய்க் ஐய்ச்ப்ன்ங்ய்ஸ்ரீங் டங்ர்ல்ப்ங்” முப்பது மில்லியன் பிரதிகளுக்குமேல் விற்றது.

மற்ற மனிதர்களின் பெயர் சொல்லி அழைப்பதன் மூலம் அவர்கள் உள்ளங்களை வெல்ல முடியும் என்கிறார் டேல் கார்னகி.

பல முறை பார்த்தவர்களையும், ”உங்க பேரென்ன சொன்னீங்க” என்று கேட்பது எவ்வளவு ஆபத்தானது என்பது அனுபவித்தவர் களுக்குத்தான் தெரியும்.

”ஏர்ஜ் ற்ர் நற்ர்ல் ரர்ழ்ழ்ஹ்ண்ய்ஞ் ஹய்க் ள்ற்ஹழ்ற் ப்ண்ஸ்ண்ய்ஞ்” இதுவும் அவரது குறிப்பிடத்தக்க புத்தகங்களில் ஒன்று.

ஆபிரகாம் லிங்கனின் வாழ்க்கை வரலாற் றையும் புத்தகமாக எழுதினார் டேல் கார்னகி.
பிறர் வாழ்க்கை மீது ஆர்வம் காட்டுங்கள். இரண்டே மாதங்களில் நல்ல நண்பர்களைப் பெறுவீர்கள். பிறர் உங்கள்மீது ஆர்வம் காட்ட வேண்டும் என்று விரும்பி செயல்பட்டால் அதற்கு இரண்டு வருடங்களாவது ஆகும் என்றார் அவர்.

மனித உறவுகளையும் மனம்சார்ந்த அணுகு முறைகளையும் மையப்படுத்தியே அவரின் பெரும் பாலான நூல்கள் எழுதப்பட்டன. மனிதர்கள் என்பவர்கள் தர்க்க அறிவால் படைக்கப்பட்டவர் கள் அல்ல. அடிப்படையில் உணர்வுகளால் உருவாக்கப்பட்டவர்கள் என்பது டேல் கார்னகியின் மிக முக்கியமான சித்தாந்தங்களில் ஒன்று.

எல்லாவற்றையும் தர்க்கரீதியாகவே பார்த்தால் தீர்வுகளை எட்ட முடியாது. உணர்வு ரீதியில் சில விஷயங்களை அணுகினால்தான் எதிரிலிருப்பவர்களுக்கு நம் எண்ணமும், எதிரிலிருப்பவரின் எண்ணம் நமக்கும், புரியவரும் என்பது அவரது கருத்து.

கருத்துமோதல்களில் வெற்றி பெறச் சிறந்த வழி, அவற்றைத் தவிர்ப்பதுதான் என்று டேல் கார்னகி சொல்லக்கூட இதுதான் காரணமோ என்னவோ?

உணர்வுரீதியாய் தன்னெழுச்சி பெற்ற மனிதனே பெரிய பெரிய சாதனைகளுக்கான ஊக்கத்தைப் பெறுகிறார் என்பது டேல் கார்னகியின் பார்வை. சுமுகமான உறவுகள் மூலமாகவே சிக்கலில்லாத வாழ்க்கை சாத்தியம் என்ற எண்ணத்தை அடிநாதமாகக் கொண்டவை டேல் கார்னகியின் எழுத்துக்கள்.
”உலகத்துடன் நாம் கொள்ளும் உறவு நான்கே வழிகளில்தான். நாம் என்ன செய்கிறோம். நாம் எப்படி தோற்றமளிக்கிறோம். நாம் என்ன சொல்கிறோம். அதை எப்படிச் செய்கிறோம்” இது டேல் கார்னகியின் புகழ்பெற்ற வாசகங்களில் ஒன்று.

சின்னச்சின்ன சொற்றொடர்களில் வெற்றிச் சூத்திரங்கள் பலவற்றை வகுத்துக் கொடுத்த டேல் கார்னகி, 1955ல் நவம்பர் ஆறாம்தேதி மரண மடைந்தார். உலகப் புகழ்பெற்ற சுயமுன்னேற்ற சிந்தனையாளர் டேல் கார்னகிக்கு உள்ளூரான மிசௌரியில் ஒரு கல்லறை இருக்கிறது. அந்தக் கல்லறையில், கண்ணுக்குப்படாத ஒரு சின்னக் குறிப்பு ஈஹப்ங் ஸ்ரீஹழ்ய்ங்ஞ்ண்ங் 1888-1955.
ஆனால், அவர் யார் என்பதையும் அவர் நமக்கு இன்றும் என்ன சொல்கிறார் என்பதையும் அவருடைய புத்தகங்கள் பேசிக்கொண்டே இருக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *