உயிரின் குணம்

– மரபின் மைந்தன் ம. முத்தையா விதைபோல் கனவு விழுகிறது வெளித்தெரியாமல் வளர்கிறது எதையோ பருகி நிமிர்கிறது என்றோ வெளியே தெரிகிறது! எண்ணமும் வேர்களில் நீர்வார்க்கும் எத்தனம் வளர்ச்சியை சரிபார்க்கும் மண்ணில் பெற்றவை உரமானால் மிக நிச்சயமாய் பூப்பூக்கும்!

அறிய வேண்டிய ஆளுமைகள்

– மரபின் மைந்தன் ம. முத்தையா மனிதகுல வரலாற்றை மாற்றியமைத்த ஆப்பிள்கள் மூன்று. ஆதாம் ஏவாள் கண்ட ஆப்பிள். ஐசக் நியூட்டன் தலையில் விழுந்த ஆப்பிள். மூன்றாவதாக ஸ்டீவ் ஜாப்ஸ் கணினி உலகுக்குத் தந்த ஆப்பிள். கடவுளின் உலகத்தில் மட்டுமல்ல, கம்ப்யூட்டர் உலகத்திலும் ஆப்பிள் விலக்கப்பட்ட கனியாகி விட்டதுதான் ஆச்சரியம். ‘கம்ப்யூட்டர்’ என்கிற சொல்லை உச்சரிக்க … Continued

உளிகள் நிறைந்த உலகமிது!

அறிமுகங்கள்! அனுபவங்கள்! ஆளுமைகள்!! – மரபின் மைந்தன் ம. முத்தையா உருவாக்கத்திலும் உள்ளடக்கத்திலும் புதுமை இருந்தால் போதாது என்பார் கணேஷ் பாலிகா. உருவானதை முன்வைப்பதிலும் அதே புதுமை அவசியம் என்று நினைப்பார். படைப்பாக முன்வைப்பு டழ்ங்ள்ங்ய்ற்ஹற்ண்ர்ய் என்பது. விளம்பர நிறுவனங்களைப் பொறுத்த வரை ஒரு பெரிய வைபவம். எனக்குத் தெரிந்து க்ளையண்ட்டின் இடத்திற்குப் போவதை விட … Continued

மனிதம் வாழ்க!

காலத்தால் பண்படுதல் மனித நீதி கருணைதான் நீதிக்குள் குலவும் சோதி கோலங்கள் மாறுகையில் திட்டம் மாறும் கொள்கைகள் வளர்கையிலே சட்டம் மாறும் வேலெடுத்து நாட்டியதும் வீரம் அன்று வெண்கொடியைக் காட்டுவதும் விவேகம் இன்று நூலறிவும் நுண்ணறிவும் வளரும்போது நேற்றிருந்த சட்டங்கள் இன்றைக்கேது?

உளிகள் நிறைந்த உலகம் இது!

– மரபின் மைந்தன் ம. முத்தையா அறிமுகங்கள்! அனுபவங்கள்! ஆளுமைகள்! தொண்ணூறுகளின் தொடக்கம். காட்சி ஊடகங்களின் ஆட்சி தொடங்கிய காலம். தனியார் தொலைக்காட்சிகள் தலையெடுக்கத் தொடங்கிய நேரம். தொலைக்காட்சி விளம்பரங்களை உருவாக்கும் பணியிலும் பிஃப்த் எஸ்டேட் நிறுவனம் ஈடுபட்டது.

பயம்கொள்ளாமல் இயங்கு

மின்னல் கிழித்த கோடுக ளெல்லாம் மழையின் கோலங்கள் ஆகும் செந்நெல் செழித்த வயல்களின் நடுவே தென்றல் கோலங்கள் போடும் தன்னில் பிறந்த எண்ணக் கோடுகள் சிந்தனைக் கோலங்கள் ஆகும் இன்னும் இன்னும் உள்ளே அமிழ எண்ணங்கள் இமயம் ஆகும்!

உளிகள் நிறைந்த உலகமிது!

அறிமுகங்கள்! அனுபவங்கள்! ஆளுமைகள்! ஆடிய காலும் பாடிய வாயும் நிற்காது என்பார்கள். எழுதிய கையும் அப்படித்தான். விளம்பர எழுத்தாளராய் வாழ்வை நடத்துவது ஒரு வகையில் சுகமானது. ஒற்றைப் பொறி தட்டி ஒரு கருத்துரு தோன்றிவிட்டால் நல்ல பணம். சிரமமில்லாத வேலை. பிடி கிடைக்கும் வரை பிடிவாதமாக இருந்துவிட்டால் நிலைகொண்டு விடலாம். இந்த நம்பிக்கை ஆழமாக இருந்தது. … Continued

அறிய வேண்டிய ஆளுமைகள்

மும்பைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்த இளைஞனுக்கு தான் ஏமாற்றப்படுகிறோம் என்று அப்போது தெரிந்திருக்கவில்லை. தூத்துக்குடி பக்கமுள்ள நாகலாபுரம் என்ற கிராமம்தான் அந்த இளைஞனின் சொந்த ஊர். படிக்க வசதியில்லாமல் பத்தாம் வகுப்புடன் பள்ளிக்குச் செல்வதை நிறுத்தி விட்டு தங்கள் ஊர்க்கார இளைஞர்கள் பலரைப் போலவே சென்னையில் உள்ள தேநீர்க்கடைகளில் வேலை பார்க்க வந்த அந்த இளைஞனுக்கு … Continued

உளிகள் நிறைந்த உலகமிது!

-மரபின் மைந்தன் ம. முத்தையா கோவையில் நான் எழுதிய தமிழ் விளம்பரங்கள் பரவலான கவனிப்பைப் பெற்றன. பொதுவாகவே, பெரிய நிறுவனங்களின் விளம்பர உருவாக்க வாய்ப்புக்களைப் பெற, விளம்பர நிறுவனங்கள் போட்டி போடுவதுண்டு. தாமாகவே முன்வந்து விளம்பர டிசைன்களை உருவாக்கி வணிக ஒப்பந்தம் பெற முயல்வதும் உண்டு. அதற்கு ஸ்பெகுலேடிவ் கேம்பெய்ன் என்று பெயர்.

அறிய வேண்டிய ஆளுமைகள்

-மரபின்மைந்தன் ம. முத்தையா மைக்கேல் சௌல் டேல் சின்னதாய் ஒரு வணிகம் செய்து, இரண்டாயிரம் டாலர்கள் சம்பாதித்தபோது, டெல்லுக்கு வயது 12. சின்ன வயதிலேயே புத்திசாலித் தனம் பளிச்சிட வளர்ந்த டெல், படிப்பில் அதிக அக்கறை காட்டவில்லை. எட்டுவயதில், பள்ளி இறுதிப்படிப்பிற்கு நிகரான தேர்வொன்றை எழுதியே ஆக வேண்டுமென அடம்பிடித்த டெல்லை, அந்தத் தேர்வுக்கு அனுப்ப … Continued