– பேராசிரியர் பர்வீன் சுல்தானா
உந்தி எழு; உயரப்பற என்கின்ற தலைப்பை நான் வித்தியாசமாக உணர்கிறேன். ஒன்று, நமக்குள் ஒரு சக்தி இருக்கின்றது. இரண்டாவது, நாம் அடைய வேண்டிய இலக்கு, நமக்கு முன்னால் இருக்கின்ற சாத்தியக் கூறுகள் என நான் இந்த தலைப்பிற்கு பொருள் கொண்டுள்ளேன். நம் வாழ்வில் மாற்றங்கள் நிகழாமல் எதுவுமே நடை பெறுவதில்லை. மாற்றம் நிகழவேண்டுமெனில், விழிப்புணர்வு வரவேண்டும்.
விழிப்புணர்வு என்பது மாற்றத்திற்குப் பிறகு வருவதல்ல. மாற்றத் திற்கு முன்னால் நிகழக்கூடிய விழிப்புணர்வு வந்தால் மாற்றம் நிகழும். அப்படியெனில் மாற்றம் என்பது என்ன? எது மாற்றம்? மாற்றம் என்பது சிதைவல்ல. அது சுத்தமான தோலுரிப்பு ஆகும். நம்மை நாமே தோலுரித்து காட்டக்கூடிய ஒரு அனுபவம்தான். மாற்றம் ஒரு விதை. முளைக்க வேண்டுமென்றால் மண்ணில் விழுந்து அழுக்காக்கி மண்ணில் புதையாமல் முளைக்காது.
கனியின் உள்ளே இருக்கும் விதை மீண்டும் கனியை விட்டு நீங்கி, மண்ணில் விழுந்து, புதைந்து உள்ளே வெடித்துச் சிதறினாலொழிய முளைப்பு நிகழாது.
இப்போது நம்மை உட்கார வைத்துள்ளனர். உட்கார்ந்த நிலையில் காலை ஊன்றி உந்த வேண்டும் என்றால் நமக்கு அந்த மண்ணின் தன்மை தெரியவேண்டும். இந்த மண்ணின் தன்மை நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். நாம் எங்கே இருக்கின்றோம் என்கிற தன்மை நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். இந்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொள்ளாமல் வாழ்க்கையில் சில உயர்வுகள் சாத்தியம் கிடையாது.
ஏற்கனவே நமக்கு மைன்ட் செட் என்று ஒன்று உள்ளது. ஒன்றை நாம் வெளிப்படுத்துகிறபோது நாம் யார்? நம்முடைய மனம் எந்த அளவில் உள்ளது? நாம் எப்படிச் சிந்திக்கின்றோம் என்பதை பிறருக்கு வெளிப் படுத்துகிறோம். நம்முடைய புரிதல் அறிவு ஒரு பெட்டகத்தினுள் இருக்கிறது.
உறைந்த நிலையில் இருந்து உறைந்து போகாத தன்மைக்கு வந்தாலொழிய, சில கற்றல் சாத்தியம் கிடையாது. இன்பம் என்பது வேறு. ஆனந்தம் என்பது வேறு. நாம் லட்டு சாப்பிடுகிறோம் என்பது இன்பம். பிறருக்கு லட்டு கொடுத்து அவர்கள் சந்தோஷமாக இருப்பதைப் பார்ப்பது ஆனந்தம். நாம் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருப்பது இன்பத்தை அனுபவிக்கும் போதல்ல. மற்றவர்கள் இன்புற பார்த்து களிக்கின்ற போது நாம் ஆனந்தமாக இருக்கிறோம்.
ஒரு சின்ன சம்பவம்.
ஒரு குரங்காட்டி தன்னோடு இரண்டு குரங்குகளை வைத்துக்கொண்டு தெருக்களில் ஓவியம் வரைகிறான். பிறரிடம் கையேந்துவ தில்லை. யாராவது காசு கொடுத்தால் காசு வாங்காமல் வடை மட்டும் வாங்கித் தரச் சொல்லுவான். குரங்குகளோடு தானும் பகிர்ந்து சாப்பிடுவான். அவன் ஊமை என்றுதான் பார்ப்பவர்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஒருமுறை அவன் கடையில் புரோட்டா வாங்கிக் கொண்டிருந்தபோது, பார்த்த நண்பரொருவர், ஏய் நீ ஊமையல்லவா? எப்படி பேசுகிறாய் என கேட்டதற்கு, அவன், யார் சொன்னார்கள், நான் ஊமை என கேட்க, நண்பரோ பிறகு ஏன் நீ பேசுவதில்லை. நான் பேசுவது அவர் (குரங்கு) களுக்குப் பிடிக்காது. அதனால் நான் பேசுவதில்லை என்று பதில் சொல்லி இருக்கிறான். இதுதான் வாழ்க்கை. அது என்னை வியப்புக்குள்ளாக்கியது. அந்த ஒரு வார்த்தை எனக்கு குருவாசகமாகியது.
நாம், நம் குடும்ப உறுப்பினர்களையே புரிந்து கொள்வதில்லை. நம் மனைவி, கணவர், குழந்தை, அண்டை வீட்டார் யாரையும் நாம் புரிந்து கொள்வதில்லை. ஏனெனில் நாம் உறைந்த நிலையில் உள்ளோம். அப்பா வண்டி ஓட்டுவதைப் பார்த்து, அப்பா நான் வண்டி ஓட்டுகிறேன் என்று கேட்கிறது. அப்பா உன்னால் முடியாது போ என்கிறார். அம்மா தண்ணீர் எடுத்து வருவதைப் பார்த்து, குழந்தையும் குடத்தில் தண்ணீர் எடுக்க ஆசைப்பட்டு அம்மாவிடம் கேட்க, அம்மாவோ, உன்னால் முடியாது என்று உதாசீனப்படுத்துகின்றனர். ஆனால் குழந்தை தயார்நிலையில்தான் உள்ளது.
உன்னால் முடியாது என்று சொல்லிச் சொல்லி வளர்க்கிறோம். பின்பு நாம் தண்ணீர் எடுத்து வா என்றால் குழந்தை, என்னால் முடியாது என்கிறது. இதை, யார் சொல்லித் தந்தது? நமக்கு ஒன்று தெரியவில்லை. குழந்தை பிறந்தவுடன் கற்றுக் கொடுப்பதற்கு ஓர் வாய்ப்பு வந்துவிட்டதாக நாம் நினைக்கிறோம். நாம் ஏதோ ஒன்றை கற்றுக் கொள்வதற்காக இறைவன் கொடுத்த வாய்ப்புதான் குழந்தை. குழந்தைகள் தவறு செய்கிறார்கள். தவறு செய்யும் குழந்தைகளை பெற்றோர்கள் தண்டிக்கின்றனர். குழந்தையை நீங்கள் அடித்துவிட்டு, கண்ணா இங்கே வா என்றால் உடனே வந்துவிடும். அப்படி என்றால் என்ன பொருள். தவறு செய்யும் குழந்தைகளை பெற்றோர்களுக்கு தண்டிக்க மட்டுமே தெரியும்.
தன்னை தண்டிக்கும் பெற்றோர்களை குழந்தைகளுக்கு மட்டுமே மன்னிக்கத் தெரியும். குழந்தைகளின் மொழி நம்மில் பலருக்கு தெரிவதில்லை. பாட்டுப் பாடினால் பாடாதே என்கிறோம். ஆடினால் ஆடாதே என்கிறோம். கேள்வி கேட்டால் கேட்காதே என்கி றோம். இந்த உறைந்து போகின்ற தன்மையில் இருந்துதான் குடும்ப அமைப்பு நமக்கு புரிந்து கொள்ளப் பட்டிருக்கிறது. அந்த திணிப்பில் இருந்து வெளியே வர வேண்டும்.
குழந்தைகள், பெண்கள், ஆண்கள் மொழியை புரிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு வந்தால் உந்தலாம். காலை ஊன்றலாம். உங்கள் மனைவி பேசுவதை நீங்கள் கேட்காதீர்கள். தயவு செய்து கேட்கா தீர்கள். ஆனால் அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பதைக் கேளுங்கள். அதனால் தான் அன்றே சொன்னார்கள். ஆண்களுக்கு முடிவெடுக்கும் திறன் உண்டு. பெண்களுக்குத்தான் உள்ளுணர்வு உண்டு.
எல்லோரும் டங்ழ்ள்ர்ய்ஹப்ற்ஹ் ஈங்ஸ்ங்ப்ர்ல்ம்ங்ய்ற் வகுப்பிற்குப் போகிறேன் என்று சொல்வதுண்டு. டங்ழ்ள்ர்ய்ஹப்ற்ஹ் என்பது இத்தாலியச்சொல். யாருடைய டங்ழ்ள்ர்ய்ஹப்ற்ஹ்யையும் ஈங்ஸ்ங்ப்ர்ல்ங் பண்ண முடியாது. டங்ழ்ள்ர்ய்ஹம் என்பதற்கு இத்தாலியில் முகமூடி என்று பொருள். இந்த முகமூடியை சரியாக அணிந்து கொள்ள நீங்கள் பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும். அப்பா, கணவன், மனைவி, பேச்சாளர் என எல்லாமே ஒரு முகமூடி. அந்த முகமூடியை அணிந்து கொண்டு அதன்படி நடைபயில பயிற்சி எடுத்துக் கொள்பவன்தான் டங்ழ்ள்ர்ய்ஹப்ற்ஹ் யான ஆள்.
நாம் தெரியாத நிலையில் ஒரு கேள்வி கேட்கிறோம். இரண்டு நிமிடம் உட்கார்ந்து யோசித்தால் அதற்கான பதில் நமக்குள்ளிருந்து தான் வரும். நமக்கு தெளிவு கொடுக்கக்கூடிய வார்த்தைகள் வெளியில் இருந்து வந்தாலும்கூட தெளிவு உள்ளிருந்துதான் பிறக்கவேண்டும். இந்த தெளிந்த நிலை, இந்த அமைப்பு சார்ந்த சிந்தனை, இந்த சிந்தனையிலிருந்து அடுத்த தளத்திற்குப் போகவேண்டும்.
நம்மை எழவிடாமல், கால்களை தரையில் ஊன்றி வைத்திருக்கின்ற மற்றொரு காரணி எது வென்றால், இர்ல்ண்ங்க் க்ஷங்ட்ஹஸ்ண்ர்ழ். அதாவது, அடுத்தவர்கள் போலவே நாமும் இருக்கவேண்டும். அது முடியுமா? முடியாது; அவசியமுமில்லை. அவர் தான் இருக்கின்றாரே, அப்புறம் நாம் எதற்கு? முதலில் இர்ல்ண்ங்க் க்ஷங்ட்ஹஸ்ண்ர்ழ் யை எடுத்து வெளியில் போடுங்கள். பொதுவான பார்வையில் இருந்து குறிப்பிடத்தகுந்த ஒரு சிறப்பான பார்வைக்கு உங்களை மாற்றிப்பாருங்கள்.
நாம் அனைவரும் மிக முக்கியமானவர்கள். ஏனென்றால் இறைவன் ஒரு போதும் குப்பைகளை பூமியில் எறிவதில்லை. அப்படியெனில், நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு திறமை உள்ளது. நமக்குள் இருக்கும் திறமை எதுவென்று கண்டு பிடித்தால் இந்த இர்ல்ண்ங்க் க்ஷங்ட்ஹஸ்ண்ர்ழ் போய்விடும்.
இர்ல்ண்ங்க் க்ஷங்ட்ஹஸ்ண்ர்ழ் இருந்திருந்தால் எல்.ஐ.சி இந்த அளவிற்கு வளர்ந்திருக்குமா? நம் வாழ்வின் இறுதி நாள் தெரியாது. அப்படி தெரியாத ஒன்றை முதலீடாக எடுத்துக் கொண்டதுதான் எல்.ஐ.சி. பிறரைப் போல நாம் இருக்கவேண்டும் என்ற சிந்தனையை விட்டு வெளியே வரவேண்டும். சுயமான சிந்தனைகளைப் பின்பற்ற வேண்டும்.
புதிதாக பிறந்த குழந்தை ஒன்றைப் பார்க்கப் போகிறோம். குழந்தையைப் பார்த்ததும் குழந்தை, கண், மூக்கு, வாய் என ஒன்று அப்பாவைப்போல், அம்மாவைப்போல், கன்னம் பாட்டியைப் போல் இருக்கிறது என்றுதான் சொல்கின்றோம்.
குழந்தையை குழந்தையாகப் பார்க்கத் தெரிகின்றதா நமக்கு? அதற்குள் ஏதோ தேடல் நமக்குள் உள்ள பதிவுகளைப் போட்டு நசுக்கினா லொழிய நமக்கு நிம்மதி வராது. நாம் பிறரை போல் இருக்கவேண்டும் என்ற நிலையில் இருந்து மாற வேண்டும். அதை அதுவாகப் பாருங்கள்.
வெற்றி என்பது தனிமனிதனுக்குரியது. இது வெற்றியின் வாசல். இங்கு தனிமனித முன்னேற்றத்திற்கான பயிற்சி தரப்படுகிறது.
அடுத்த இலக்கு என்ன?
சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள், ”விதைகளைத்தான் என்னால் கொடுக்க முடியும். அதை மரமாக்கி கனி எடுத்து சாப்பிடவேண்டியது உங்கள் பொறுப்பு” என்று கூறுவார்கள். விதை வழங்கும் கூட்டம். இதில் வெற்றி சாதனை என்பது பொது மக்களுக்கு உரித்தானது. வெற்றி என்பது தனி மனிதனுடையது. சாதனை என்பது மற்றவர் களுடையது. அதனால்தான் ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு ‘சாதனைச்சுடர்’ விருது கிடைத்தது. நாம் எந்தவகையில் மற்றவர் களுக்கு உதவியாக இருக்கிறோம் என நினைத்துப்பார்க்க வேண்டும்.
இன்று அனைத்திலும் அல்ல்ப்ஹ் வந்து விட்டது. எதற்கெடுத்தாலும் அல்ல்ப்ஹ் பண்ணுகிறோம்.
நபிகள் நாயகம் கூறுகிறார், ”நீங்கள் எவ்வளவு கற்றாலும் அதை ஓரளவாவது வாழ்க்கையில் பயன்படுத்துங்கள்”. இதுதான் அல்ல்ப்ஹ் செய்வது. நம்மில் எத்தனையோ பேர் அல்ல்ப்ஹ் செய்கிறோம். ஒரு பெண்ணிடம் என்ன படிக்கிறாய் என்று கேட்டேன். எக்னாமிக்ஸ் என்றார். எக்னாமிக்ஸ் படித்து என்ன செய்யப் போகிறாய்? ஆறாயிரம், ஏழாயிரம் ரூபாய்க்கு ஏதாவது அலுவலகத்தில் ரிஷப்சனிஸ்ட் வேலை பார்க்கப் போகிறேன் என்கிறாள். ரிஷப்சனிஸ்ட் வேலை பார்க்க எதற்கு எக்னாமிக்ஸ் படிக்க வேண்டும். அதில் சிறந்து விளங்கலாம். ஏன் மன்மோகன்சிங் மாதிரிகூட வரலாம்.
நம்மிடம் சுயசிந்தனை இல்லை. யாரோ வடிவமைத்தது, போட்டுக் கொண்டிருக் கிறோம். யாரோ செய்தார்கள். அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். யாரோ சாலை போட்டார்கள். அதில் நடந்து கொண்டிருக் கிறோம். நாம் வடிவமைக்க முன்வருவதில்லை. இந்த நிலையில் இருந்து நமக்கு நாமே வெளியே வரவேண்டும் என்றால் Comport Zone இருந்து Conflic Zone வரவேண்டும். Conflic Zone ரொம்ப பயமாக இருக்கும். Comport Zone ரொம்ப நன்றாக இருக்கும். Conflic Zone என்பது வானம், Comport Zone என்பது தரை. அதாவது கீழே, நமக்கு கீழே உட்கார்ந்து இருப்பது நன்றாகத்தான் இருக்கும். உந்தி எழுந்து பறக்க வேண்டுமெனில் Conflic Zone வந்தாக வேண்டும்.
நெப்போலியனுக்கு நீச்சல் தெரியாது. எல்லோரும் நீச்சல் கற்றுக்கொள்ளலாமே என்றார்கள். அவரோ, நான் சுறாக்கள் அல்லாத ஆழ்கடலில் நீச்சல் பழகுவதில்லை என்ற பொன்மொழியை சொன்னார். அந்தத் துணிச்சல் நம்பிக்கை நம்மில் எத்தனை பேருக்கு வரும்? இன்றிலிருந்து நாம் ஒரு வார்த்தையை விட்டொழிக்க முன்வர வேண்டும். நண்பருக்கு போன் செய்து நாளை காலை 11 மணிக்கு உங்கள் வீட்டுப்பக்கம் ஒரு வேலையிருக்கிறது. அப்படியே உங்களையும் பார்க்க வருகிறேன் என்று சொல்கிறோம். எதிர்முனையில் நோ ப்ராப்ளம் என்று சொல்கிறார். எதற்கு ப்ராப்ளம் என்ற வார்த்தை உச்சரிக்க வேண்டும். அது ஒன்றும் பிரச்சனையில்லை என்று சொல்கிறோமே ஏன்? பிரச்சனை என்கிற சொல்லே கிடையாது. சிக்கல் என்றுதான் உள்ளது. பிரச்சனை என்ற சொல்லே இல்லை.
புரிந்து கொள்ளக்கூடிய சூழல் என்று அதற்குப்பெயர். பிரச்சனைகளைக் கண்டு ஓடினால் நனைய வேண்டியிருக்கும். சினிமாவில் நமக்கு ஜெயித்த நூறுபேர்தான் தெரியும். ஆனால் தோற்றவர்கள் பல லட்சம்பேர் உள்ளனர். நாம் ரோல் மாடலை தேர்ந்தெடுக்கும் போது எத்தகைய தீவிரத்தன்மையை நம் குழந்தைகளுக்கோ நமக்கோ உள்ளேயே செலுத்திக்கொள்கிறோம். அது இல்லாமல் எப்படி வரமுடியும்? யாரையும் பார்த்து வியப்படையாதீர்கள். வியப்பது வீழ்ச்சி. வியப்பதற்கு உலகில்
எதுவும் கிடையாது. நீங்கள் யாரைப்பார்த்து வியப்படை கின்றீர்களோ, அவர்கள் விஸ்வரூபமெடுத்து போய்க் கொண்டிருப்பார். நீங்கள் அங்கேயேதான் நின்று கொண்டிருப்பீர்கள். யாரையும் பார்த்து வியக்க அவசியம் கிடையாது. புரிந்து கொள்ளுங்கள்.
நான்காவது படிக்கும் பையனிடம் என்னவாக வரப்போகிறாய் என்று கேட்டதற்கு குப்பை லாரி ஓட்டப் போகிறேன் என்றான். என் மனது நொறுங்கிப்போனது. அவனுக்கு அந்த லாரி டிரைவர்தான் ஹீரோ. இன்று கேட்டால், பிளைட் ஓட்டப்போகிறேன் என்கிறான். நோக்கம் ஒன்று தான்.
ஆனால் இன்னும் மாறும். மாறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்து அவர் களுடைய திறமையை கண்டுபிடித்து, திறமையை தக்க வைத்துக்கொள்வதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது நம்மில் எத்தனைபேருக்கு உள்ளது?
வாழ்க்கை மிகவும் சிறியது. அந்த சிறிய வாழ்க்கையைத்தான் நாம் அவ்வளவு சிறப்பான விஷயமாக எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ‘
நாம் ஏறப் பயப்படுகின்ற விஷயங்களில் நம் குழந்தை ஏறி தலைகீழாக நிற்கவேண்டும். அந்த தன்மையை நம் குழந்தைகளிடம் எதிர்பார்க்க வேண்டும். அந்த
வேகம் குழந்தைகளிடையே இருக்க வேண்டும். எல்லோரும் போலச்செய்தல் என்று நாம் எங்கு வந்து நிற்கிறோம். பொழுதுபோக்கில் எப்படி உந்தி எழமுடியும். பொழுது ஆக்குவதற்காகத்தானே? போக்குவது எப்படி? பொழுது என்பது சும்மா இருந்தாலே போய்விடும்.
தமிழ் சினிமா பார்ப்பதை கொஞ்சநாள் ஒத்தி போட்டுவிட்டு உலகச்சினிமாக்களை பாருங்கள். அங்கு சினிமா என்பது என்னவென்று தெரிந்து விடும். நாம் எப்படி ஏமாறுகிறோம் எனத் தெரிந்துவிடும். நாம் ரியாலிட்டி இல்லாமல் நம் நாளை கெடுத்துக்கொண்டிருக்கிறோம். காலம் உயிர் போன்றது எனச் சொன்னார்கள். அவ்வளவு அற்புதமான சொல். பொன் போன்றது என்பதில் உடன்பாடு கிடையாது. பொன்னை இழந்தால் பெற்றுக்கொள்ளலாம். காலத்தை இழந்தால் பெற்றுக் கொள்ள முடியாது.
இந்த வெற்றிவாசலின் புனிதத்தன்மை, என்னால் மறுபடியும் நான் சம்பாதித்து விட முடியாத என் நேரத்தை உங்களுக்காகவும், உங்களால் மறுபடியும் சம்பாதித்து விடமுடியாத நேரத்தை எனக்காகவும் அழித்துக் கொண்டிருக் கிறீர்களே, அதுதான்.
இந்தப் புனிதத்தன்மையை புரிந்து கொண்டு அந்த நேரத்தை நான் சரியாக செலவு செய்தேனா? முதலீடு செய்தேனா, வீணடிக்கிறேனா என்று யோசித்துப் பாருங்கள். இதில் செலவு என்பது வேறு. முதலீடு என்பது வேறு. நேரத்தை நாம் எந்த அளவிற்கு கையாளுகிறோம்?
பொழுது பற்றி ஒரு ஜென் கதை உண்டு.
நம் தலையணையின் கீழ் இறைவன் தினமும் 24 தங்கக்காசுகள் வைக்கிறானாம். என்றைக்கு அந்தக் காசு குறையும், என்று நிற்கும் என்று நமக்குத் தெரியாது. ஆனால் 24 தங்கக்காசுகள் வந்து கொண்டேயிருக்கின்றன. அவற்றை நாம் எப்படி செலவு செய்கின்றோம் என்பதில்தான் வாழ்க்கையின் வெற்றியிருக்கிறது. நேரத்தை சரியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். சீரியஸ் என்பது வேறு. சின்சியர் என்பது வேறு. அதுவே நம்மில் பலருக்கு தெரிவதில்லை. சீரியஸாக இருப்பதை சின்சியராக இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
எம்.ஜி.ஆர். கத்திச்சண்டை போடும் போதும், சிரித்துக்கொண்டேதான் இருப்பார். உதட்டில் எப்போது சிரிப்பு வரும்? நம் வேலையில் முழுமையான நம்பிக்கை இருந்தால்தான் உதட்டில் சிரிப்பை வைத்துக்கொண்டே வேலை செய்ய முடியும்.
உங்கள் கடந்த காலத்தை நீங்கள் பிரேதப் பரிசோதனை செய்வதன் மூலமாக உங்களில் எதையும் நீங்கள் சாதிக்கமுடியாது. கடந்த காலத்தை பற்றி எண்ணிக்கொண்டே இருக்காதீர்கள். எப்போதும் கேட்பது பாதிதான். புரிந்து கொள்வது கால்பங்கு.
ஆனால் வெளிப் படுத்துவது முழுவதுமாக. அதை அப்படியே சரி என்று நம்பிக்கொண்டு வாழ்க்கையை பாழாக்கி விடுவது. கேட்கக்கூடிய நிலையிலும், புரிந்து கொள்ளக்கூடிய நிலையிலும் மிகச்சரியான ஒரு நிலையில் இருந்து நீங்கள் அனுபவத்தை அனுபவியுங்கள். நாளை என்று ஒன்று இல்லை என்று சொன்னார்கள். இந்தக்கணம் மாறாதது. செய்வதற்கு முன்னால் செத்துப் போய் விடக் கூடாது. செய்து விட்டுத் தான் செத்துப் போக வேண்டும். செய்யவேண்டும் என்கின்ற உணர்வு நம்மில் எத்தனைபேருக்கு உள்ளது. நீங்கள் எந்தக் காலை வைத்தாலும் அது புதிது தான்.
ஒரு பல்கலைக்கழகத்தேர்வு.
ஐந்து தாளில் இரண்டில் மட்டும் கையெழுத்து மாறு பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, உரிய மாணவனை அழைத்துவந்து பேராசிரியர்கள் முன் நிறுத்தி விசாரித்தனர். இந்த மூன்று தாள்களை எழுதியது யார் என்று கேட்டார்கள். நான்தான் என்று சொன்னான். இந்த இரண்டு தாள்களை யார் எழுதினார்கள் என்று கேட்க, நான் இல்லை என்றான். அப்படியானால் ஐந்து தாள்களில் இரண்டு தாள்களை நான் எழுதவில்லை. ஆள் வைத்து எழுதினேன் என்று எழுதிக்கொடு என்றார்கள். மாணவனோ, நான் ஏன் சார் அப்படி எழுதித் தரவேண்டும்? நான் எழுதிய இரண்டு தாள்கள் எங்கே? என்று கேட்க, ஆடிப்போய் விட்டார்கள் . அந்த அளவு புத்திசாலித்தனம்.
ஒருவர் 12 வருடமாக கஷ்டப்பட்டு பணம் சேர்த்து வைத்தார். தனது மகளுக்கு நடத்திய விழாவில் ஆயிரம்பேருக்கு சாப்பாடு போட்டு காலி செய்து விட்டார். எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம். எப்படி செலவு செய்யவேண்டும் என்பதுதான் முக்கியம்.
”நீ விதைப்பது பெரிய விஷயமில்லை. விதைப்பதை வளர்த்து, பாதுகாப்பது பெரிய விஷயமல்ல. அதை அறுவடை செய்வதும் பெரிய விஷயமில்லை. அதை வீட்டிற்கு கொண்டு வருவதில்தான் சிக்கல் இருக்கிறது” என்று சத்குரு ஜக்கி வாசுதேவ் சொல்வார்.
செயலாக்கத்திறனை உள்ளே வளர்த்துக் கொண்டு மேலே பறக்கக்கூடிய ஒரு வாய்ப்பை வளர்த்துக்கொள்ளவேண்டும்.
கால்பந்து விளையாடிக்கொண்டிருந்தான் என் மகன். அதைப்பார்த்த உறவினர் ஒருவர், கால் பந்து என்றால் உங்கள் மகனுக்கு விருப்பமா என்று கேட்டார். ஏன் கேட்கிறீர்கள்? என்றேன்.
விருப்பமில்லாமல் விளையாட முடியாது. அதில் முழுகவனம் தேவை. அதைப்போல் உங்களின் விருப்பத்தை அடையாளப்படுத்தி உங்களை மேலே உந்தி எழச்செய்யும் தொலை நோக்குப் பார்வையில் என்னுடைய பங்கு என்னென்ன செய்யவேண்டும் என எண்ண வேண்டும். எனக்கு என்ன என்ற நிலை மாற வேண்டும்.
உங்களைப் பற்றி நீங்கள்தான் பெருமை யாகச் சொல்லவேண்டும். இன்றைக்கு இதைச் சாதித்தேன் என்று சொல்லுங்கள். இவ்வளவு முன்னேறியுள்ளேன் என்று சொல்லுங்கள்.
எப்படி இருக்கின்றீர்கள் என்று ஒருவர் உங்களிடம் கேட்டால், நன்றாக இருக்கிறேன். உயரத்தில் இருக்கிறேன். உயர உயரப்பறந்து கொண்டிருக்கிறேன் என்று சொல்லுங்கள்.
வீழ்வதல்ல தோல்வி. எழ மறுப்பதுதான் தோல்வி. எழ மறுப்பவர்கள்தான் இறந்து போகிறார்கள்.
வெற்றி என்பது ஒரு வார்த்தை. தோல்வி என்பது தள்ளி நிற்கும் வெற்றி.
சுயமதிப்பீடு என்பது எனக்கு எதுவெல்லாம் தெரியுமோ, அதுவல்ல. எனக்கு எதுவெல்லாம் தெரியாது என்பதனை தெரிந்து கொள்வதுதான் சுய மதிப்பீடு.
எதுவெல்லாம் உங்களுக்கு தெரியாதோ, அதையெல்லாம் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். தெரியாது என்கிற நிலைமாறி, தெரியும் என்ற நிலையில் வெற்றியின் வாசலை நோக்கி நடக்க வேண்டும்.
பார்வை மாறினாலொழிய சில உச்சங்களை அடையமுடியாது.
பறவை ஏன் பறக்கிறது? ஒரு பறவை உந்தி எழுகிறது என்றால் என்ன பொருள்? விடுதலையை நோக்கிற பிரயாணம் அல்ல. பசி என்கிற தீ இல்லாமல் உந்த முடியாது. பறக்கமுடியாது.
அந்த நெருப்பு பற்றி எரிகின்ற நெருப்பிற்கும் எங்கோ கிடைக்கின்ற இரைக்கும் நடுவில் உள்ள இடைவெளியை தன் வயிற்றில் அடித்து அடித்து கடப்பதற்கு எடுக்கின்ற முயற்சி. அதுதான் பறத்தல்.
உங்கள் மனதில் எழுச்சியும் உங்கள் அடி வயிற்றில் அந்தப் பசியின் தீயும் இருந்தால் நீங்கள் நிச்சயமாக இருந்த இடத்தில் இருக்க மாட்டீர்கள். உந்தி எழுவீர்கள்.
உயரப்பறப்பீர்கள். பறப்பதற்கு முடிவு செய்து விட்டபிறகு எந்தப் பறவையும் ஓய்வைப் பற்றி நினைப்பதில்லை.
ஓய்வறியாமல் உழைப்போம். அடுத்த முறை நீங்கள் பல உச்சங்களைத் தொட்டிருப்பீர்கள்.
Leave a Reply