ரிஷபாரூடன் அவர்கள் மிஸ்டர்.மனசாட்சியுடன் நடத்திய நேர்காணல் வெகு அருமை. தேர்ந்தெடுத்த கேள்விகள், தெளிவான பதில்கள் ஒவ்வொருவருக்குள்ளும் எழும் சந்தேகங்களை கையாண்ட விதம் அருமை. அரசியல் பற்றிய கேள்வியும் அதற்கான பதிலும் அற்புதம். டாக்டர் குமாரபாபு இலக்குகளை தீர்மானிக்கவும், இலக்குகளை அடைய நாம் செய்யவேண்டிய பயிற்சி பற்றியும் மிகத்தெளிவாக விளக்கியுள்ளார்.
அருண், தேனி.
மார்க்கெட்டிங் மந்திரங்கள் தொடர் மார்க்கெட்டிங் என்றால் என்ன? வாடிக்கையாளர்களிடம் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், அவர்களை எப்படி கையாள வேண்டும் என தெளிவாக எடுத்துரைத்தது. மரபின்மைந்தனின் கடைசிப்பக்க கவிதையில் ஆசைகள் எல்லாம் விதைத்துவிடு. அனைத்தும் ஒரு நாள் பயிராகும்! என்ற வரி எங்களுக்கு நம்பிக்கையூட்டியது,
சங்கர், ஊட்டி
இயகோகா சுப்ரமணியம் அவர்களின் வெற்றி வெளிச்சம் தொடர் மிகவும் நன்றாக இருக்கிறது. வெற்றியில் சிறியது. பெரியது என்றெல்லாம் கிடையாது. அவரவர் தளங்களில் கிடைக்கும் வெற்றி வெற்றிதான் என்று எடுத்துரைத்த அவரது புதிய சிந்தனைதான் அவரை உச்சத்திற்கு கொண்டு போய் உள்ளது.
கோபால், திருப்பூர்.
மேலாண்மைத் துறையில் முடிசூடா மன்னனாக விளங்கும் ஸ்டீஃபன் ஆர்.கோவே அவர்களின் சித்தாந்தத்தை இரத்தினச் சுருக்கமாகத் தொகுத்துரைத்த ஆசிரியர் அவர்களுக்கு கோடான நன்றி மலர்கள்.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கோவை.
ஐ.ஏ.எஸ் தேர்வை நோக்கி பயணிக்கும் வேளையில் நம் இதழில் சிறப்பான கட்டுரை தளங்கள் மிகவும் பயனுள்ளதாக அமைந்திருக்கிறது. தனி மனிதனுக்கும் சமுதாய மேம்பாட்டுக்கும் உதவிபுரிந்து வருவதில் நமது நம்பிக்கை பெரும்பங்கு வகிக்கிறது. அறிய வேண்டிய ஆளுமைகள், மிஸ்டர் மனசாட்சி, நம்பிக்கை ஒளி, மனம் எனும் மாயக்கம்பளம், இருப்பதை உணர்வோம் என்ற கட்டுரைகள் புதிய அடையாளத்தை பெற்று தந்து இருக்கிறது. மேலும் மேலும் பல கட்டுரை பகுதிகளை படித்து புதிய சிந்தனையை உருவாக்கித் தந்தது நமது நம்பிக்கை.
ரேவதி, சேலம்.
Leave a Reply