வண்ணப் பலகையல்ல வரலாற்று கல்வெட்டு

வளரும் சிகரங்கள் குடந்தையில் தொடங்கிய இளந்தளிர் இயக்கம்

கும்பகோணம் சீமாட்டி ரெடிமேட்ஸ் நிறுவனம் விடுத்த அழைப்பின் பேரில் பெற்றோர் களுடன் வந்து குவிந்த குழந்தைகள் முகங்களில், அரங்கில் நுழைந்ததுமே மின்னலிட்டது மகிழ்ச்சி. அவர்களுக்கான இருக்கைகளில், அவர்களுக்கு முன்னரே அமர்ந்திருந்தன சில அழகிய பைகள். உள்ளே குழந்தைகளுக்கு விருப்பமான தின் பண்டங்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், அழகிய நாப்கின், கூடவே வளரும் சிகரங்களில் இணைவதற்கான நுழைவுப்படிவம்.

அன்பும் அக்கறையும் பொங்கப்பொங்க கும்பகோணம் சீமாட்டி ரெடிமேட்ஸ் உரிமையாளர் திரு.முகமது ஜியாவுதீன் செய்திருந்த நேர்த்தியான ஏற்பாடுகளில் களைகட்டியது, கும்ப கோணத்தின் பராம்பரியப் பெருமைமிக்க சரசுவதி பாடசாலையின் அன்னிபெசன்ட் அரங்கம்.

மஹாராஜா சீமாட்டி குழுமங்களின் தலைவர் ஹாஜி எம். எம். ஷாகுல்ஹமீது அவர்கள் முன்னிலையில், தினமலர் இதழின் இணை யாசிரியர் திரு. ராமசுப்பு, வளரும் சிகரங்கள் பெயர்ப் பலகையினைத் திறந்து வைத்தார். விழாவில் அல் அமீன் பள்ளித்தாளாளர் திரு. கமாலுதீன், சரசுவதி பாடசாலையின் தாளாளர் திரு. வெங்கடசுப்பன், சுழற்சங்க வருங்கால ஆளுநர் டாக்டர் பழனிவேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். திரு.முகமது ஜியாவுதீன் தனது வரவேற்புரையில் நமது நம்பிக்கை இதழுடன் இணைந்து சீமாட்டி ரெடிமேட்ஸ் நிறுவனத்தின், வளரும் சிகரங்கள் இயக்கத்தில் ஆண்டு முழுவதும் நிகழ்த்தவுள்ள ஆக்கப்

பணிகளுக்கென்றே ஒரு குழு அமைத்து அறிவித்தார். விழாவில் பேசிய தினமலர் இணையாசிரியர் திரு.ராம சுப்பு, இளந்தளிர்கள் மனதில் நம்பிக்கை துளிர் விட வேண்டிய தேவை குறித்தும் அதனால் ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்தும் விளக்கினார். குழந்தைகள் மனதில் புதிய சிந்தனைகள் உருவாக தின மலரின் நிறுவனர் ஆற்றிய பணிகளை நினைவு கூர்ந்தார்.

நமது நம்பிக்கை ஆசிரியர் மரபின் மைந்தன் முத்தையா வளரும் சிகரங்கள் குறித்து விளக்கவுரை நிகழ்த்தினார். கும்பகோணத்தில் திரு.ராமசுப்பு அவர்களால் திறந்து வைக்கப்பட்ட வளரும் சிகரங்கள் வண்ணப்பலகை, வரலாற்றுக் கல் வெட்டாக விளங்கும் அளவு இந்த இயக்கம் விசுரூபமெடுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். கோவையில் வெள்ளோட்டம் கண்ட வளரும் சிகரங்கள், குடந்தையில் தேரோட்டம் காண்பதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். நகைச்சுவைத் தென்றல் டாக்டர் கு.ஞான சம்பந்தன் விழாவில் சிறப்புரை நிகழ்த்தினார். பெற்றோர் மனநிலையில் ஏற்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து விரிவாகப் பேசினார்.

குழந்தைகளுக்கு நடைமுறை வாழ்க்கை குறித்து கதை சொல்லல், விடுகதைகள் மூலமாக ஆர்வமும் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றார் அவர். உலக வரைபடத்தில் எந்த நாடுகள் எங்கே இருக்கின்றன என்று காட்டுகிற திறமை படைத்த சிறுவன் ஒருவன், பள்ளிக்கூடம் விட்டால் வீட்டுக்கு வர வழி தெரியாதிருக்கும் நிலைக்குக் காரணம், வாழ்வியல் கல்வி வழங்கப் படாததுதான் என்றார் அவர். மிகச்சிறந்த கவிஞரும் பேச்சாளரு மான தஞ்சை இனியன், விழா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். விழாவில் கலந்துகொண்ட விருந்தினர்களுக்கு மஹாராஜா சீமாட்டி நிறுவனங்களின் உரிமையாளர்கள் திரு.முகமது ரஃபி, திரு.சா.பஷீர்அகமது, திரு.சா.ஆசிஃப் அலி ஆகியோர் சிறப்புச் செய்தனர்.

தங்கள் குழந்தைகளை நெறிப்படுத்த ஒரு நல்ல இயக்கம் உதய மானதில் ஏற்பட்ட உள நிறைவுடன் கும்பகோணம் நகரின் பெற்றோர்கள் குதூகலம் கொண்டனர். கோடை விடுமுறை முடிந்ததும் குடந்தையில் கொடிகட்டப் போகிறது சீமாட்டி ரெடிமேட்ஸ் வழங்கும் வளரும் சிகரங்கள் இளந்தளிர் இயக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *