இப்படியும் நடக்குது

குடியிருப்புப்பகுதியில்
நாய் வளர்ப்பது வெகு சிரமம்
என்று கருதியிருந்தோம். ஆனால்
எங்கள் பொமரேனியன் நாய் டைகர், எங்கள் குடியிருப்பு முழுவதும் பிரபலமாகிவிட்டது. நம்மைத் தெரியாதவர்களுக்குக்கூட நம் நாயைத் தெரியும் என்பார் என் கணவர். ஒரு தடவை பொது விருந்தொன்றில் ஒருவரை எங்கள் உறவினர் அறிமுகம் செய்தார்.

அந்த மனிதர் சொன்னார், நான் உங்களைப் பார்த்திருக்கிறேன். நீங்க டைகர் வீட்டிலே இருக்கிறங்கதானே நல்ல வேளை டைகர் எங்களை வளர்ப்பதாக அவர் சொல்லவில்லை.

பிரபல பல் மருத்துவ நிபுணர்
ஒருவரிடம், நண்பர் கேட்டார்,
வாழ்க்கை எப்படி போகுது?
அவர் சொன்னார்,
ஏதோ கைக்கும்
வாய்க்குமா பிழைப்பு ஓடுது.

ஓர் அலுவலகத்தில் தீயணைப்பு
அலுவலர் பயிற்சியளித்தார். ஆபத்து
நேர்ந்தால் ஒட்டு மொத்தமாக
வெளியேற உங்களால் முடியுமா? ஓர்
அலுவலர் எழுந்து சொன்னார், ஏன்
முடியாது? தினமும் மாலை ஐந்து
மணிக்கு அலுவலகம் முடிந்ததும்
அப்படித்தான் வெளியேறுகிறோம்.

ஒருவரின் கார் திருடு போய்விட்டது.
அதனை காவல்துறை
கண்டுபிடித்துவிட்டது. பூட்டப்
பட்டிருந்த காரை நெருங்கித்
தொட்டபோது அலாரம் அலறியது.
காரைத் திருடியவன், திருடியதும்
முதல் வேலையாக அதில் அலாரம்
பொருந்தியிருந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *