கூண்டில் இருந்த அந்தக்கிளி, “விடுதலை வேண்டும்! விடுதலை வேண்டும்” என்று விடாமல் மிழற்றிக் கொண்டிருந்தது. மனமிரங்கிய மனிதர் ஒருவர் அதன் கூண்டைத் திறந்து விட்டார். கதவு திறந்த பிறகும்கூட கிளி, “விடுதலை வேண்டும்! விடுதலை வேண்டும்” என்று குரல் கொடுத்ததே தவிர வெளியே வர வில்லை. நாமே பிடித்து வெளியே விடலாம் என்று கையைக் கூண்டில்
நுழைத்தால் இன்னும் உள்ளொடுங்கி அமர்ந்தது. பிறகுதான் அந்த மனிதருக்குப் புரிந்தது. விடுதலை என்று அந்தக்கிளிக்கு வார்த்தைதானே தவிர வேட்கையல்ல. தங்கள் கூண்டுகளிலேயே சுகம் காண்பவர்களுக்கு விடுதலையின் இன்பம் விளங்காது.
Leave a Reply