கடுமையான பாலைவனத்தில் முகாமிட்டிருந்தார் அந்த ராணுவவீரர். அவருடைய மனைவியும் உடன் சென்றிருந்தார். தகிக்கும் வெய்யிலையும் எங்கும் வீசியடிக்கும் அனலையும் மணலையும் அவரால் தாங்க முடியவில்லை. தன் தந்தைக்குக் கடிதம் எழுதினார். அவர் தந்தை பதிலெழுதினார்.
“சிறைக்குள்ளிருந்து சாளரம் வழியே வெளியே பார்க்கும் வாய்ப்பு இரண்டு கைதிகளுக்குக் கிடைத்தது. ஒருவர் வெறும் மணலைப் பார்த்தார். இன்னொருவர் நட்சத்திரங்களைப் பார்த்தார். நீ எதைப் பார்க்கப் போகிறார்?” அந்தப் பெண் புரிந்து கொண்டார். அந்தப் பாலைவனத்தை நேசிக்கத் தொடங்கினார். முகாம் முடிந்த பிறகும் அங்கேயே தங்கி பாலைவனம் பற்றிய புத்தகம் ஒன்றை எழுதினார்.
k.Ramesh
it is very useful for life