1936 ஒலிம்பிக்ஸ். நீளம் தாண்டும் போட்டியில் முன்பே சாதனை படைத்திருந்த கறுப்பின வீரர் ஜெஸ்ஸி ஓவன்ஸ் பயிற்சிக்குப் போனார். அங்கே நாஜி இனத்தை சேர்ந்த வாட்டசாட்டமான வீரர் ஒருவரைக்கண்டு தயங்கினார்.
நாஜிக்கள் கறுப்பர்களை மதிப்பதில்லை. பயிற்சியில் ஜெஸ்ஸி செய்த சின்னத் தவறுகளை சுட்டிக் காட்டிய அந்த நாஜிவீரர், சில யோசனைகளையும் தந்தார். அவர் பெயர் லஸ்லாங். போட்டியில் ஜெஸ்ஸி வென்றார். லஸ்லாங் தோற்றார். என் எல்லா தங்கப் பதக்கங்களையும் ஒன்றாய் உருக்கினாலும் அது லஸ்லாங்கின் நட்புக்கு ஈடாகாது என்றார் ஜெஸ்ஸி.
சாதனையாளர்களே சாதனையாளர்களை அடையாளம் காண்கிறார்கள்.
Leave a Reply