கைத்துப்பாக்கி வீரர் கரோலி டகாக்ஸ், லண்டனைச் சேர்ந்தவர். 1938இல், அவரது வலது கரத்தில் ஒரு கிரனேட் வெடித்து முற்றாகச் சிதைந்தது. மிக முயன்று இடது கையில் எல்லாம் செய்யப் பழகிக் கொண்டார். விபத்து நடந்து ஓராண்டில் ஹங்கேரி பிஸ்டல் கிளப்பில் சேர்ந்து பயிற்சிகளைத் தொடர்ந்தார்.
பத்தாண்டுகளில் லண்டன் ஒலிம்பிக்ஸில் தொடர்ச்சியாக சுடும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார் டகாக்ஸ். அத்துடன் அவருடைய வெற்றிப்பயணம் நிற்கவில்லை. 1952இல் ஹெல்ஸின்கி போட்டி களிலும் தன் நிபுணத்துவத்தை நிரூபித்தார். வலது கை சிதைந்தாலும் நம்பிக்கை சிதையாத வாழ்க்கை கரோலி டகாக்ஸின் வாழ்க்கை.
Leave a Reply