சான் கொங்சாங்

அக்குழந்தை பிறந்தது ஏப்ரல் 7, 1954இல். இவர் பெற்றோரான சார்லஸும், லீ லீ சானும் இவருக்கு வைத்த பெயர் “சான் கொங்சாங்”.

சான் பிறக்கும்போது 12 கிலோ எடையுடன் பிறந்ததால், அறுவை சிகிச்சை செய்து வெளி யெடுக்கக்கூட பணமின்றி வறுமையில் வாடிய இக்குடும்பம் நண்பர்களின் உதவியோடு இவரை பெற்றெடுத்தனர்.

மிகுந்த வறுமையையும் புறம் தள்ளி, “சான்”னின் தந்தை, குழந்தைக்கு தினமும் அதிகாலை முதல் நள்ளிரவு வரை குங் பூ பயிற்சி தருவாராம்.

இக்குழந்தைக்கு சரியான உணவு கொடுக்க முடியா விட்டாலும் குங் பூ மூலம் நல்ல உடல் ஆரோக்கியத்தையும், பொறுமையையும், தைரியத்தையும் கொடுக்க முடியும் என்று வலுவாக நம்பினார் இவர் தந்தை.

“சான்”க்கு 7 வயதாக இருந்தபோது இவர் தந்தைக்கு ஆஸ்திரேலியாவில் சமையல் கலைஞராக வேலை கிடைத்தது. “சான்”னின் திறமைகளை மேலும் வளர்க்கும் நோக்கத்தில் அவர் சொந்த ஊரான ஹாங்காங்கிலேயே ஒரு டிராமா கம்பெனியில் சேர்த்துவிட்டார் அவர் தந்தை. இனிவரும் பத்து ஆண்டுகளும் அந்த டிராமா கம்பெனியில் தான் வாழ வேண்டிய நிர்பந்தம் குழந்தை சானுக்கு. மற்ற பள்ளிகளை விடவும் இந்த டிராமா பள்ளி மிகவும் கண்டிப்பானது. இங்கு பயிலும் குழந்தைகள் மிகவும் ஒழுக்கத்தடனும் தவறுகள் செய்யும்போது மிகுந்த கண்டிப்புடன் வளர்க்கப்பட்டனர். பாட்டு, ஆக்ரபேட்ஸ், நடிப்பு என அனைத்தும் இந்த டிராமா பள்ளியில் “சான்” கற்றுக் கொண்டான்.

அந்த பயில்வது சானுக்கு மிகுந்த சிரமமாய் இருந்தபோதும், அவனுக்கு வெளியே வர வாய்ப்பே இல்லை. அங்கு தங்கியிருந்த 10 ஆண்டுகளும், மிகக் குறைந்த முறையே பெற்றோரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. 17 வயதில் அந்த பள்ளியில் தன் படிப்பை நிறைவு செய்து சானும் அவன் நண்பர்களும் வெளியே வருகையில் அவர்கள் முன் இருண்டு கிடந்தது எதிர்காலம்.

அவர்கள் பயின்ற டிராமா பள்ளி மிகுந்த பிரபலம் இல்லாததால், அவர்களுக்கு எந்த வேலையும் கிடைக்காமல் போனது. வெறும் ஆட்டம், பாட்டு, நடிப்பை மற்றும் கற்றுக் கொடுத்த பள்ளி அடிப்படையில் எழுதவும் படிக்கவும் கற்றுக் கொடுக்காமல் போனதால் எண்ணற்ற சிரமங்கள் “சான்”னை சூழ்ந்து கொண்டது. எந்த வேலைக்கும் தகுதியில்லை, படிப்பறிவில்லை என்று துரத்தி அடிக்கப்பட்டு சானுக்கு கிடைத்தது என்னவோ திரைப் படங்களிலும், டிராமாகளிலும்… ஸ்டண்ட் அடிக்கும் வேலை தான். இத்தொழிலில், மூக்கு, மூட்டு என பலதையும் பலமுறை உடைந்தபோதும், உடையாமல் வலுவாக இருந்தது அவர் நம்பிக்கை மட்டும்தான்.

சிறுவயதில் அதிகாலை முதல் நள்ளிரவு வரை பயிற்சி மேற்கொண்ட சானுக்கு அச்சம் என்பது அணு அளவும் இருக்கவில்லை. அச்சமின்மையே “சான்”னின் தனி அடையாளமாய் போனது. எங்கு எந்த பயங்கரமான ஸ்டண்ட் வேலை நடந்தாலும் அனைவரும் அழைத்தது சானைத்தான்.

அந்த வெற்றியும், உற்சாகமும் சானுக்கு நெடு நாள் நீடிக்கவில்லை… வெகு விரைவிலேயே திரைப் படத்துறை ஹாங்காங் நாட்டில் சரிவை சந்தித்தது. தோல்விகள் சானை பெற்றோர் இருக்கும் ஆஸ்திரேலியாவிற்கே துரத்தியடித்தது. அங்கு ஒரு உணவகத்திலும் கட்டிட தொழிற்சாலையிலும் வேலை பார்த்தார் சான். அவரோடு வேலை பார்த்தவர்களுக்கு இவரின் முழு பெயரான சான் கொங் சாங் என்பதை உச்சரிக்க கடுமையாக இருந்ததால் இவரை செல்லமாய் “லிட்டில் ஜெக்” என்று அழைக்கத் துவங்கினர்.

ஆஸ்திரேலியா, சானுக்கு பெரும் துன்பத்தையே தந்த வேளையில் சான்னின் வெற்றி ஒரு டெலிகிராம் மூலம் வந்தது. அதை அனுப்பியிருந்தவர் வில்லி சான், இவர் சானோடு ஹாங்காங் திரைப்படத்துறையில் பணியாற்றியவர்.

அவர் துவங்க இருக்கும் திரைப்படம் ஒன்றிற்கு துணிச்சலான வீரர் தேவைப்படவும் அவர் நினைவில் வந்தவர் சான். அந்த டெலிக்ராம் கண்டு ஹாங்காங் விரைந்த சானுக்கு அன்று தெரியாது பிற்காலத்தில் வில்லி தன் உயிர் நண்பராகவும் தனக்கே மேலாள ராகவும் மாறி போவார் என்று.

ஹாங்காங் திரும்பிய நொடி முதல் அவரின் தொழில் வாழ்க்கை வில்லியின் கட்டுப் பாட்டின் கீழ் வந்தது. வில்லி மூலம் திரைப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த போதும். சான் நடித்த திரைப்படங்கள் தோல்வியையே தழுவின.

தன் திறமைகள் சரியாக பயன்படுத்தப் படாததே காரணம் என்பதை உணர்ந்த சான், அவர் நடிக்கும் கதாபாத்திரங்களில் நகைச் சுவையை கலக்கத் துவங்கினார். சான்னின் உடல் வலிமை அவர் வெற்றியை மேலும் வலுவாக்கியது. படிப்படியாய் சிரமங்கள்… தடைகள் அனைத்தையும் பிளந்து முன்னேறிய சான் பின்னொரு காலத்தில் ஹாலிவுட்டின் ஜாம்பவானாவே மாறிப்போனார்.

திரைப்படம் மட்டுமின்றி உலக எய்ட்ஸ் கட்டுப்பாடு அமைப்பின் தூதுவராக நியமிக்கப்பட்ட சான் தன் நேரங்களையெல்லாம் குழந்தைகளுக் காகவும், முதியவருக்காகவும் அர்ப்பணிக்க துவங்கினார். இருப்பினும் அவர் திரைப்படத் தாகம் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

அன்று எந்த மொழியையும் படிக்கவும் எழுதவும் தெரியாதவருக்கு இன்று ஏழு மொழிகள் சரளமாய் தெரியும்.

அன்று வறுமையில் வாடிய சானின் இன்றைய சம்பளம் 50 மில்லியன் அமெரிக்கன் டாலர்.

அன்று 21 வயதில் துவங்கிய இவர் திரைப்படப் பயணம் இன்று உலக சினிமாக்களை புரட்டிப் போட்டுள்ளது.

அன்று “ஸ்நேக் இன் ஈகிள் செடோஸ்” (நய்ஹந்ங் ண்ய் உஹஞ்ப்ங்’ள் நட்ஹக்ர்ஜ்) என்ற திரைப்படம் மூலம் துவங்கிய இவர் வெற்றி “டிரங்கன் மாஸ்டர்” (ஈழ்ன்ய்ந்ங்ய் ஙஹள்ற்ங்ழ்), “பியர்லஸ் ஹெனா” (ஊங்ஹழ்ப்ங்ள்ள் ஏஹ்ங்ய்ஹ) எனத் தொடர்கிறது.

துவக்கத்தில் தடுக்கும் தோல்விகள் பிற்காலத்தில் பிரம்மாண்ட வெற்றியே தரும் என்பதற்கு உதாரணமாய் வாழ்ந்த “சான்” எனும் இந்த வெற்றியாளர்…… யார்??

2 Responses

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *