உளிகள் நிறைந்த உலகமிது!

அறிமுகங்கள்! அனுபவங்கள்! ஆளுமைகள்!

ஆடிய காலும் பாடிய வாயும் நிற்காது என்பார்கள். எழுதிய கையும் அப்படித்தான். விளம்பர எழுத்தாளராய் வாழ்வை நடத்துவது ஒரு வகையில் சுகமானது. ஒற்றைப் பொறி தட்டி ஒரு கருத்துரு தோன்றிவிட்டால் நல்ல பணம். சிரமமில்லாத வேலை. பிடி கிடைக்கும் வரை பிடிவாதமாக இருந்துவிட்டால் நிலைகொண்டு விடலாம். இந்த நம்பிக்கை ஆழமாக இருந்தது. உள்ளூர் விளம்பர நிறுவனங்களில் நல்ல தொடர்பும் இருந்ததால் சமாளித்துவிடலாம் என்று தோன்றியது.

>மேலும்…” />

அந்தப் பருவத்தில் சம்பாதித்து வீட்டுக்குப் பணம் தர வேண்டிய அவசியமில்லை. எனவே சுதந்திரமாய் பரிசோதனை முயற்சிகளை மேற் கொள்ளமுடிந்தது. செய்து கொண்டிருக்கும் ஃப்ரீலான்ஸ் வேலைகளை தீவிரப்படுத்த முடிவெடுத்தேன். இதற்கிடையில் சென்னை சென்ற போது மா போஸேல் நிறுவனத்துக்கு எழுதிக் கொடுத்த விளம்பரம் அங்கீகரிக்கப்பட்டு பணம் வந்தது. “ஏதேனும் கேம்பெய்ன் ஒப்பந்தங்கள் வந்தால் அழைக்கிறோம். ஃப்ரீலான்ஸ் முறையில் வந்து எழுதிக்கொடுங்கள்” என்றார் பிரசாத். ஆனால் நான் பெரிதும் கேள்விப் பட்டிருந்த விளம்பர நிபுணரான திரு.கணேஷ் பாலிகாவை சந்திக்க முடியாத ஏக்கம் என் மனதில் இருந்தது. சென்னை மா போஸேலின் ஆளுமைமிக்க தலைவராய் அவர் அப்போது இருந்தார்.

கோவையில் மா போஸேல் மேலாளரான ராமகிருஷ்ணன், ப்ரோஃப் அட்ஸ் மேலாளரான சீனிவாசன் ஆகியோர் தங்கள் ரீடெய்னர் ஒப்பந்தங்களை மீண்டும் உறுதி செய்திருந்தார்கள். எப்போதும் இருந்த வாசிப்பு, இந்தக் கால கட்டத்தில் உறுதிப்பட்டது.

பெரும்பாலான கேம்பெய்ன்கள் ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்டு தமிழ்ப் படுத்தப் படும். தேசிய அளவிலான கேம்பெய்ன்கள் என்பதால் இந்த அணுகுமுறை. அப்போதுதான் கோவையில் ஷோபிகா என்ற பெயரில் பெண்களுக் கான பிரத்யேக ஆடையகம் ஒன்று துவக்கப்பட்டது. ஆடைகள் மட்டுமின்றி, பெண்களின் பயன்பாட்டுக் கான அனைத்துப் பொருட்களும் அங்கே இருந்தன. அதற்கு ஆங்கிலத்தில் நட்ர்க்ஷண்ந்ஹ-உஷ்ஸ்ரீப்ன்ள்ண்ஸ்ங் ஜ்ர்ம்ங்ய்ஷள் ள்ற்ர்ழ்ங் என்னும் வாக்கியத்தை உறுதி செய்திருந்தார்கள். இதற்கு ல்ர்ள்ண்ற்ண்ர்ய்ண்ய்ஞ் ள்ற்ஹற்ங்ம்ங்ய்ற் என்று சொல்வார்கள். அதேபோல உஸ்ங்ழ்ஹ்ற்ட்ண்ய்ஞ் ட்ங்ழ் ட்ங்ஹழ்ற் க்ங்ள்ண்ழ்ங்ள் என்பது ஆங்கிலத்தில் தரப்பட்டிருந்த பேஸ்லைன். இரண்டுக்கும் தமிழில் நான் தந்த வாசகங்கள் நேரடி மொழிபெயர்ப்பாக இல்லாமல் டிரான்ஸ் கிரியேஷன் ஆக அமைந்தன.

உஷ்ஸ்ரீப்ன்ள்ண்ஸ்ங் ஜ்ர்ம்ங்ய்ஷள் ள்ற்ர்ழ்ங் என்ற வாசகத்துக்கு, “இது பெண்களின் தனி உலகம்” என்றும் உஸ்ங்ழ்ஹ்ற்ட்ண்ய்ஞ் ட்ங்ழ் ட்ங்ஹழ்ற் க்ங்ள்ண்ழ்ங்ள் என்ற வாசகத்துக்கு “வஞ்சியரின் நெஞ்சம்போல்” என்றும் தந்திருந்தேன். இந்த இரண்டு வாசகங்களுமே ஷோபிகா உரிமையாளர் திரு.சௌகத் அலியின் பெரும் வரவேற்பைப் பெற்றன. பெண்கள் மகளிர் என்ற வழக்கமான சொற்களுக்கு மாற்றாக வேறு சொற்களை விளம்பரங்களில் பயன்படுத்த நான் கொஞ்சம் யோசிப்பதுண்டு. சசியில் பணிபுரிந்த போது ஏற்பட்ட அனுபவம் ஒன்றுதான் அதற்குக் காரணம்.

சக்தி குழு நிறுவனங்களின் அங்கமான சக்தி சோயாஸ் லிமிடெட் சார்பாக சக்தி விகர் என்ற சோயா மாவு அறிமுகப்படுத்தப்பட்டது. யார் யாருக்கெல்லாம் அது பயன்படும் என்று தனித்தனி விளம்பரங்களில் விவரிப்பது என்று முடிவானது. கொட்டை எழுத்துக்களில் மேலிருந்து கீழாக ஒரே வரியும் தயாரிப்பின் படமும் இடம்பெறும் விதமாக விளம்பரங்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன. இதற்கு நற்ழ்ண்ல் ஹக் என்று பெயர். இதில், கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டம் கொடுப்பது சக்தி விகர் என்பதால், “தாய்மை நிலையிலுள்ள பாவையருக்கு உடல்நலம் தரும் ஓர் உன்னத வரம்” என்றொரு வரி இடம் பெற்றிருந்தது.

அந்த விளம்பரம் வெளிவந்து சிலநாட்களில் சக்தி சோயாஸ் அலுவலகத்துக்கு வந்த கடிதம் ஒன்றை சசி விளம்பர நிறுவனத்துக்கு அனுப்பி இருந்தார்கள். “தமிழிலக்கியத்தில் பாவை என்பது பொம்மைகளையும் குறிக்கும். பெண்மையை பொம்மைபோல் வைத்திருக்க வேண்டும் என்ற கண்ணோட்டத்தை இந்த விளம்பரம் ஏற்படுத்தி விடக்கூடும். எனவே மகப்பேறு நிலையிலுள்ள மகளிர் என்று விளம்பரம் செய்தால் தங்கள் தயாரிப்பை பெண்டிர் உகப்பர்” என்று செந்தமிழில் ஒரு பெண்மணி எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில் இருந்த கையொப்பம் கிறுக்கலாக இருந்தது. எனினும் அதைவைத்து இன்னாராகத்தான் இருக்குமென்று யூகித்தேன்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு சக்தி சோயாஸில் இருந்து அழைப்பு. மார்க்கெட்டிங் மேலாளர் திரு.கிருஷ்ண மேனன் அழைத்தார். கடிதம் எழுதிய அந்தப் பெண்மணி அலுவலகம் வந்திருப்பதாகவும், மேலும் சில ஆலோசனைகள் சொல்ல விரும்புவதால் சில நிமிடங்கள் வந்து போக முடியுமா என்று கேட்டார்கள். சசியிலிருந்து சில நிமிடங்கள் தொலைவில்தான் பந்தயச் சாலையில் உள்ள சக்தி அலுவலகம். (அந்த இடத்தை 1972ல் 2 இலட்சம் ரூபாய்களுக்கு இலட்சுமி மில்ஸ் அதிபர் திரு.ஜி.கே.சுந்தரம் அவர்களிடம் வாங்கியதாக சமீபத்தில் அருட்செல்வர் டாக்டர் நா.மகாலிங்கம் அவர்கள் என்னிடம் சொன்னார்)

சென்று பார்த்தபின் என் யூகம் சரிதான் என்று தெரிந்தது. அந்தக் கடிதத்தை எழுதியவர் கவிஞர் ரோகிணி. “தேன்முள்ளுகள்” என்னும் தொகுப்பின் மூலம் பரபரப்பாகப் பேசப்பட்டவர். கவிஞர் சேவற்கொடியோனுடன் இணைந்து, “பர்ணசாலை மான்கள்” என்ற கவிதைத் தொகுப்பையும் வெளியிட்டவர். முற்போக்குச் சிந்தனையாளராக அறியப்பட்டவர். ஒரு கவியரங்கிற்கு கவிஞர் ரோகிணி தலைமை தாங்கினார். காதல் என்ற தலைப்பில் பாடிய அன்பு என்ற கவிஞர், அரங்கத் தலைவர் வணக்கம் பாடிய போது “என்னால் உன்னைக் காதலிக்க முடியவில்லை” என்று குறும்பாகக் குறிப்பிட்டார். அதற்கு கவிஞர் ரோகிணி, “நீ என்னைக் காதலிக்க வேண்டாம். கிழவியைக் காதலி. தமிழ்க் கிழவியைக் காதலி” என்றார்.

கவிஞர் ரோகிணியை சக்தி சோயாஸில் பார்த்தபோது இந்தச் சம்பவம் நினைவுக்கு வந்தது. ஆனால் அப்போது அவர் புற்றுநோய் முற்றிய நிலையில் இருந்தார். ஆன்மீகத் தேடலில் காவியணிந்து கழுத்தில் ருத்திராட்ச மாலையுடன் காட்சியளித்தார். என்னை அவருக்கு அடையாளம் தெரிந்தது. “பெண்ணை பாவை என்று சொல்வதில் பொம்மை என்ற பொருளும் இருப்பது உங்களுக்கு தெரியுமே தம்பி” என்றார்.

அவருடன் விவாதிக்க விருப்பமில்லாமல் பிரியமாகப் பழைய கதைகளைப் பேசிக்கொண்டு விடைபெற்று வந்தேன். ஷோபிகா விளம்பரத்தில் “வஞ்சியரின் நெஞ்சம்போல்” என்றெழுதியதற்கு யாராவது கண்டனம் தெரிவித்துக் கடிதம் எழுதுவார்களோ என்று எண்ணினேன். நான் எதிர்பார்த்த அந்தக் கடிதத்தை யாருமே எழுதவில்லை. ஆனால், நான் சற்றும் எதிர்பாராத ஒருவரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தை அனுப்பியிருந்தவர்…. கணேஷ் பாலிகா!!

கடிதம் எழுதியவர் கணேஷ் பாலிகா என்றாலும், சென்னை மாபோஸேல் நிறுவனத்தி லிருந்து அவர் எனக்கு எழுதவில்லை. அவர் கையொப்பத்திற்குக் கீழே மேனேஜிங் டைரக்டர் பிஃப்த் எஸ்டேட் என்ற பெயரில் விளம்பர நிறுவனம் தொடங்கும் முகாந்திரப் பணிகளை அப்போதே மேற்கொண்டிருந்திருக்கிறார். பிரசாத்தின் எடைபோடும் திறமையில் அவருக்கு அபார நம்பிக்கை. தன்னுடைய புதிய நிறுவனத்துக்கு நான்தான் தமிழ் விளம்பர எழுத்தாளர் என்று என்னைப் பாராமலேயே முடிவெடுத்திருக்கிறார். என் விண்ணப்பத்தை வாங்கி வைத்துக் கொண்டாரே தவிர என்னை சந்திப்பதைத் தவிர்த்துவிட்டார். புதிய நிறுவனம் தொடங்கியதும் அழைத்துக் கொண்டார்.

சென்னை, திறமைகளுக்கான ஆடுகளம். அங்கே எனக்கு ஒருவாசல் மூடி மறுவாசல் திறந்தவர் கணேஷ்பாலிகா. விளம்பர உலகின் மூன்று நிபுணர்கள் சேர்ந்து பிஃப்த் எஸ்டேட் நிறுவனத்தைத் தொடங்கியிருந்தார்கள். நிர்வாக இயக்குநர், கணேஷ் பாலிகா. ராமகிருஷ்ணா, விவேகானந்தன் ஆகியோர் இயக்குநர்கள். படைப்பாக்கப் பிரிவுக்கு ராமகிருஷ்ணா (ராம்கி) தலைவர். மீடியா எனப்படும் ஊடகப் பிரிவுக்கு விவேகானந்தன் தலைவர்.

படைப்புத்திறன் கொண்ட விளம்பர நிபுணர்களில், ராம்கி போல் மென்மையும் மேன்மையும் கொண்ட ஒருவரை நான் இதுவரை சந்திக்கவில்லை. நல்ல உயரம். ஒற்றை நாடி உடம்பு. சிவந்த நிறம், குறுந்தாடி, சிரிப்பும் தீட்சண்யமும் மின்னும் கண்கள். விவேக் அடிக்கடி பதட்டமாகக் கூடியவர். கணேஷ் பாலிகா இருவரின் குணங்களையும் கலந்த கலவை. பனிமலையும் எரிமலையும் பாதிப்பாதி.

பிஃப்த் எஸ்டேட் நேர்காணலில் என்னிடம் கேட்கப்பட்ட ஒரே கேள்வி. “எப்போது வேலைக்குச் சேருகிறாய்” என்பதுதான். கணேஷ் பாலிகாவும் ராம்கியும் எவ்வளவு பெரிய விளம்பர மேதைகள் என்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை. சென்னையில் வேலைவாய்ப்பு என்ற பெருங்கனவின் நிறைவேற்றமே போதுமானதாக இருந்தது. 1993. நாலாயிரத்து சொச்சம் ரூபாய் சம்பளத்தில் சென்னையில் பணி. விளம்பர நிறுவனங்களுக்கே உரிய சுந்திரமான சூழல்.

விளம்பரங்கள் உருவாக்கத்தின் நுட்பங்களை நான் கற்றுக் கொண்டது அங்கே தான். பணியில் இறங்கும் முன், ஏற்கெனவே நடை பெற்றுக் கொண்டிருந்த வேலைகளைப் பார்த்த போது மிரண்டு போனேன்.

மின்சார வயர்களை இணைக்கும் அதெஸிவ் டேப் ஒன்றிற்கான விளம்பரங்கள் உருவாகிக் கொண்டிருந்தன. அந்த டேப்பின் பெயர் மேஜிக். எனவே மேஜிக் சம்பந்தப்பட்ட எல்லா கதைகளையும் அடிப்படையாகக் கொண்டு ராம்கி, விளம்பரங்களை உருவாக்கினார். அலாவுதீனும் அற்புத விளக்கும், சிந்த்ரெல்லா என்று விதம்விதமான தளங்களை அடிப்படை யாகக் கொண்டு விளம்பரங்கள் உருவாயின.

அப்போதுதான் மேஜிக் நிறுவனம் கார்பெரேட் அட்வர்டைஸ்மென்ட் ஒன்றை வெளியிட விரும்பியது. கார்ப்பரேட் அட்வர்டைஸ்மென்ட் என்பது ஒரு நிறுவனம், தன்னுடைய நிறுவனப் பெருமைகளைப் பேசுவது. உருவான ஆண்டு, ஏற்படுத்திய சாதனைகள், பெற்ற விருதுகள் நிறுவனத்தின் கொள்கைகள் போன்றவற்றைப் பேசுவது, கார்ப்பரேட் அட்வர்டைஸ்மென்ட்.

சமூக நலனுக்காக தாங்கள் செய்த பணிகளையெல்லாம் பட்டியலிட்டு டாடா நிறுவனம், வீ ஆல்ஸோ மேக் ஸ்டீல்” என்று செய்திருந்த விளம்பரம், கார்ப்பரேட் அட்வர்டைஸ்மென்ட்டுக்கு மிகச்சிறந்த உதாரணம். தயாரிப்பின் தன்மைகள், அதன் சிறப்பம்சங்கள் குறித்த விளம்பரங்களை, புரோடக்ட் அட்வர்டைஸ்மென்ட் என்பார்கள். மேஜிக் டேப்பின் புரோடக்ட் அட்வர்டைஸ் மென்ட்களுக்கு மாயாஜாலக் கதைகளை மையமாகக் கொண்டு பல விளம்பரங்கள் செய்யப்பட்டு விட்டன.

கார்ப்பரேட் விளம்பரமோ ஹிந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற நாளிதழ்களில் வெளிவர வேண்டும். தீவிரமாகச் சிந்திக்கும்போதுகூட ராம்கியின் முகத்தில் புன்னகை நிரம்பிக்கிடக்கும். அப்படி தீவிரமாக சிந்தித்து, அந்த விளம்பரத்தின் உயிர்நாடியாகிய வரியை ஹெட்லைனாக ஆங்கிலத்தில் எழுதினார் ராம்கி. கொட்டை எழுத்துக்களில் ரட்ங்ய் உப்ங்ஸ்ரீற்ழ்ண்ஸ்ரீண்ற்ஹ் ஜ்ஹள் ண்ய்ற்ழ்ர்க்ன்ஸ்ரீங்க் ச்ர்ழ் ற்ட்ங் ச்ண்ழ்ள்ற் ற்ண்ம்ங்,ல்ங்ர்ல்ப்ங் ற்ட்ர்ன்ஞ்ட்ற் ண்ற் ஜ்ஹள் ஹ ம்ஹஞ்ண்ஸ்ரீ என்று எழுதி விட்டு, சற்றே சின்ன எழுத்துகளில் சப்ஹெட் லைனாக பட்ங்ஹ் ஜ்ங்ழ்ங் ழ்ண்ஞ்ட்ற் ண்ய் ஹ ஜ்ஹஹ் என்று எழுதினார்.

“முதன்முதலில் மின்சாரம் அறிமுகமான போது மக்கள் அதனை மேஜிக் என்று கருதினார்கள். சொல்லப்போனால் அதுவும் சரி தான்” என்று எழுதிவிட்டு, மேஜிக் டேப்பில்லாத மின்சார இணைப்பு சாத்தியமா என்ன? என்று விளம்பரம் தொடரும். ஒரு விளம்பரத்திற்கான கருத்துருவாக்கம் (கான்செப்ட்) உருவாக்கப் பட்டால் அதை எப்படியெல்லாம் செழுமைப்படுத்த வேண்டும் என்று நான் கற்றுக்கொண்டது அப்போதுதான்.

மேஜிக் அதெஸிவ் டேப் என்கிற டேப் பாதுகாப்பு சம்மந்தப்பட்டது. அதையே காரணமாக்கி மக்களை அச்சுறுத்தாமல், மாயா ஜாலம் என்று கருத்துவருவாக்கத்தை கையிலெடுத்து ராம்கி நடத்திய சித்து விளையாட்டு எனக்குள் பல ஜன்னல்களைத் திறந்தது.

கொடியசைந்ததும் காற்றுவந்ததா? காற்று வந்ததும் கொடியசைந்ததா என்ற கேள்வி போலவே விளம்பரத்தில் காணப்படும் ஓவியம் அல்லது புகைப்படத்திற்கு வாசகமா அல்லது வாசகத்திற் கேற்ப காட்சியா என்ற கேள்விக்கும் பிஃப்த் எஸ்டேட்டில் ஒரு புதிய விடை கிடைத்தது. விளம்பரத்தை எழுதுபவரே கூட காட்சிப்பூர்வமாக எழுதவேண்டும் என்பதுதான் அது.

மேஜிக் விளம்பரம் ஒன்றை எழுத வேண்டிய ராம்கி ஏதோ குத்துமதிப்பாக வரைந்து கொண்டிருந்தார். தனித்தனியாக இரண்டு வயர்களை வரைந்து கொண்டிருந்தார். முதல் பார்வையிலேயே ஒரு வயர் ஆண் என்றும் இன்னொரு வயர் பெண் என்றும் கண்டுபிடிக்க முடிந்தது. பெண்ணுடலின் வளைவுகள் ஒரு வயரில். அந்த பெண் வயர் சிந்திப்பதாக ஒரு வளையம் போட்டு ராம்கி எழுதினார். ஐச் ண் ஸ்ரீர்ன்ப்க் ழ்ங்ஹஸ்ரீட் ட்ண்ம்…. ண்ற் ஜ்ண்ப்ப் க்ஷங் ஙஹஞ்ண்ஸ்ரீ!!! “அவரை மட்டும் நான் சென்று சேர்ந்து விட்டால் அது நிச்சயம் மேஜிக்தான்!!”

இரண்டு வயர்களின் இணைப்பு என்னும் அலுப்பூட்டும் விஷயத்தை, இரண்டு இதயங்களின் இணைப்பு என்று உருவகப்படுத்தும்போது ராம்கிக்குள் இருக்கும் பேனா கேமராவாகவும் செயல்பட்டது.

எனக்கு இரண்டு கயிறுகளை கந்தன் என்றும் வள்ளி என்றும் உருவகப்படுத்திய மகாகவி பாரதி நினைவுக்கு வந்தார்.

ராம்கி அந்தக் கவிதையைப் படித்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அவருக்கு தமிழ் தெரியாது!!

  1. kanna

    sir.
    I want to suscribe .Please send me the details.
    Kanna

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *