“முன்பின் அறியாத கடவுளை நான் நம்புவதில்லை” என்றார் அந்த ரயில் பயணி. அருகிலிருந்த சக பயணி, “அதனாலென்ன! நீங்கள் கடவுள் தன்மையை நம்புகிறீர்களே, அது போதும்” என்றார். நாத்திகருக்குப் புரியவில்லை. “இந்த ரயிலை இயக்குபவரை நீங்கள் முன் பின் அறிந்ததில்லை. ஆனால் பயணம் செய்கிறீர்கள்.
சற்றுமுன் நீங்கள் அருந்திய தேநீரை விற்பனை செய்தவரை உங்களுக்குத் தெரியாது. நம்பி வாங்கினீர்கள். உலகில் உள்ள நல்ல தன்மைகளை நம்புவதே கடவுளை நம்புவதற்குச் சமம்” என்றார் சகபயணி.
Leave a Reply