கான்ஃபிடன்ஸ் கார்னர் – 2

புகழ்பெற்ற ஓவியர் அரசரின் சித்திரக்கூடத்தில் வரையப் போவதை அறிந்த இளம் ஓவியன் அரசனிடம் வந்தான். “அரசே! புகழ்பெற்ற ஓவியர் வரைவதைப் பார்க்கா மலேயே அதற்கு நிகரான ஓவியத்தை வரைகிறேன். அவருக்கு நேரெதிரே இடம் கொடுங்கள்.

நடுவில் ஒரு திரையிடுங்கள். அவர் வரைவதைப் பார்க்க மாட்டேன்” என்றான். பிரபல ஓவியரின் அற்புதமான படைப்பு முடிந்தது. இளம் ஓவியனின் படைப்பைப் பார்க்க திரை அகன்றது. என்ன ஆச்சரியம்! அச்சு அசலாய் அதே ஓவியம். உண்மையில் இளம் ஓவியன் வரையவில்லை. தன் பக்கத்து சுவரை பளிங்காய்த் தேய்த்து பளபளப்பாக்கியிருந்தான். பிரபல ஓவியரின் படைப்பை இவன் சுவர் பிரதிபலித்தது. சித்திரம் ஒரு கலை. சாமர்த்தியம் இன்னொரு கலை.

  1. M. J. SYED ABDULRAHMAN

    GREATNESS
    சாமர்த்தியம் இன்னொரு கலை.

    THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *