”சாட்சிகள் யாருமே இல்லாத உரையாடலில் என்னை நீ எப்படி நம்புகிறாய்? என்று நபிகள் கேட்டார். நபியே! இறைவன் இருக்கிறான் என்று நீங்கள் சொன்னீர்கள். நம்பினோம்” இந்த வரிகள் உண்மையில் எதார்த்தத்தை யோசிக்க வைக்கிற வார்த்தைகள் அழகு, வாக்கியங்களும் அழகு, அதைச் சொன்ன விதம் அழகோ அழகு.
சிவபாலன், கொலப்பளூர்.
நமது நம்பிக்கை மாத இதழ் 5ஆம் தேதிக்குள் கிடைக்கவில்லை யென்றால் ஏதோ இழந்ததுபோல் உள்ளது. புத்தகம் கையில் கிடைத்தவுடனேயே, அட்டைப் படத்தில் உள்ள வாக்கியம் உள்ளே சென்று பார் பார் என்று சொல்லும். ஆனால் அட்டைப் படமோ யோசிக்க வைக்கிறது. தலைப்பில் உள்ளவர்களை அட்டைப்படமாகப் போடலாமே, இல்லையென்றால் அட்டைப்படத்தில் உள்ளவர்களை யாரென்று குறிப்பிடலாமே!
ஸ்ரீதேவி, கோபி.
நமது நம்பிக்கை இதழ் ஆரம்பித்தது முதல் தொடர்ந்து படித்து வருகிறேன். ஒவ்வொரு மாதமும் பல்வேறு அனுபவங்களை வெளியிட்டு வருகிறது. சென்ற இதழில் மரபின்மைந்தன் முத்தையா அவர்களின், ‘உளிகள் நிறைந்த உலகமிது” என்ற கட்டுரையில் அவரது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அந்தக் கட்டுரையில் வரும் அனைத்து அனுபவங்களையும் பகிர்ந்த விதம் அருமை.
ரம்யா ராகவேந்தர், குன்னூர்
சினிமா, அரசியல் வார மாத இதழ்களுக்கு மத்தியில் இவையேதும் இல்லாத முழுக்க முழுக்க நம்பிக்கை ஊட்டக்கூடிய கருத்துச்செறிவுமிக்க தங்கள் மாத இதழ், ”நமது நம்பிக்கை” எங்களைப் போன்ற வாசகர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றால் அது மிகையல்ல. தங்கள் இதழில், ”கான்ஃபிடன்ஸ் கார்னர்” மற்றும் அனைத்துப் பகுதிகளும் அருமை.
ராம்குமார், கோவை.
நாம் வாழ்கின்ற இந்தக்காலத்தில் தகுதி மட்டுமே அளவுகோலாக இல்லாமல் திறமையும் சமயோசிதமும் ஊக்கமும் உடனிருந்தால் மட்டுமே உயர முடியும். என்று விவரித்த ஆசிரியரின் வார்த்தைகள் காலத்திற்கான விளக்கம் மட்டுமல்ல, எண்ணற்ற இளைஞர்களுக்கு அறிவுரையும்கூட. ‘நமது நம்பிக்கை நம்பிக்கையின் ஏணி’,
ஸ்ரீதர், திருத்துறைப்பூண்டி
Leave a Reply