இன்று புதிதாய் பிறப்போம்

– ருக்மணி பன்னீர்செல்வம்

பலமுறை பயன்படுத்தப்படும் இசைத்தட்டு எப்படியோ கீறல் விழுந்துவிடுகிறது.

கீறல் விழுந்தபின்னர்தான் நீண்ட நாட்களாய் ஒன்றையே திரும்பப் திரும்பப் பயன் படுத்திக் கொண்டிருப்பதை நாம் உணர்கிறோம்.

பழமைகளை போற்றிப் புகழ்ந்துக் கொண்டிருப்பது நமது இயல்பு. அதில் தவறொன்றுமில்லை.

புதுமையை நோக்கியும் நாம் பயணப் படுகின்றோம். ஆனால் பாதையின் துன்பங்களைக் கண்டதும் பாதிவழியிலே பலர் தங்களின் புதுமையை நோக்கிய பயணத்தை மறந்துவிட்டு திரும்பிவிடுகிறார்கள்.

அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிகளும், வசதி வாய்ப்புகளும் ஏதோ சில குறிப்பிட்ட பகுதிகளில் குறைந்த எண்ணிக்கையிலான மக்களுக்கு மட்டுமே வசப்படுவதாய், பயன் படுவதாய் இருக்கும் நிலையில் எல்லோருக்குமே இவை வசப்பட வேண்டுமே என கவலைப் படுவோரும் அதற்கான முயற்சிகளில் இறங்குவோரும் துன்பங்களைக் கண்டு துவண்டு போய்விடாமல் தங்களின் பயணத்தைத் தொடர்கிறார்கள்.

வாழும் சமூகமானது பல்வேறு ஏற்றத் தாழ்வுகளோடு முன்னேற்றங்கள் இன்றி வேதனையைத் தரும். பழமைகளையே சுமந்து கொண்டிருப்பதைப் பார்த்து இதனை மாற்றி அமைக்க வேண்டுமே என்று புறப்பட்டாள் ஒரு பெண்.
அவள் ஒரு அழகிய இளம்பெண். பருவம் பூத்து நிற்கும் அந்த இளம்பெண்ணுக்கு தன் வயதொத்த பெண்கள், ஆண்களோடு சேர்ந்து உயர்கல்வி பயிலும் வாய்ப்பு ஏற்பட்டது. பல்வேறு கனவுகளும், காதல் உணர்வுகளும் பொங்கியெழும் வயதில் அப்பெண்ணுக்கு இவை மட்டுமே வாழ்க்கையில்லை என்னும் ஞானம் வாய்த்தது.

எதையாவது சாதிக்க வேண்டும். அச்சாதனை தன்னுடைய தனிப்பட்ட பெருமையை பறை சாற்றுவதாக இல்லாமல் இந்த சமூகத்திற்கு பயனுள்ளதாய் அதிலும் பாமர மக்களுக்கு பயன் தரக் கூடியதாய் இருத்தல் வேண்டும் என்று தீராத தாகத்தைக் கொண்டிருந்தாள்.

உயர்கல்வி பயிலும் காலத்திலேயே தன் சிந்தனையும், முயற்சியும், உழைப்பும் மக்களுக்கு போய்ச் சேர்ந்துவிட வேண்டும் என்றும் அப்பெண் உறுதி கொண்டாள்.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமின் கௌஹாத்தியில் பிறந்து தற்போது பெங்களுரூவில் வசித்துக் கொண்டிருக்கும் அப்பெண்ணின் பெயர் இந்திராணி மேதி.

நாக்பூரில் உள்ள விஸ்வேஸ்வரய்யா தேசிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் ‘கட்டிடக் கலை’ப்படிப்பில் இளங்கலையும், அமெரிக்க தேசத்தின் சிகாகோவில் உள்ள இல்லினாய்ஸ் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில், ‘வடிவமைப்பு’ படிப்பில் முதுகலையும் கற்றுத் தேறியவர் இந்திராணி மேதி.

தற்போது மும்பையில் உள்ள இந்திய தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் தன்னுடைய ஆராய்ச்சிக் கல்வியை முடிக்கும் தறுவாயில் இருக்கும் இந்திராணி பெற்றுள்ள விருதுகளைப் பார்த்தால் மலைப்பாகத்தான் உள்ளது. எடுத்துக் காட்டிற்காக ஒரு சிலவற்றை கூற வேண்டுமானால்,

ஙஐப பங்ஸ்ரீட்ய்ர்ப்ர்ஞ்ஹ் தங்ஸ்ண்ங்ஜ்’ள் பத35 ப்ண்ள்ற் எனும் 35 வயதுக்குட்பட்ட ‘முதன்மைப் புதுமை கண்டு பிடிப்பாளர்கள்’ பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

ஊர்ழ்ற்ன்ய்ங் பத்திரிகையின் 2010-ஆம் ஆண்டிற்கான ‘கூற்றறிவுத் திறன்மிக்க 50 தொழில் நுட்பவியலாளர்கள்’ பட்டியலில் இடம் பெற்று உள்ளார். இதே பத்திரிகை இவருக்கு ‘உலகளாவிய பொதுவிடத் தொலைநோக்காளர்’ எனும் பட்டத்தையும் வழங்கியுள்ளது.

இசச ஐஆச நிறுவனத்தின் 2010 ஆண்டிற்கான ‘இளம் இந்தியத் தலைவர்’ விருதைப் பெற்றுள்ளார்.

35 வயதுக்குட்பட்டோரில் மிகச்சிறந்த சாதனையாளர்களுக்காக இந்தியா டுடே பத்திரிகை வழங்கும் ‘இளையோரின் அடையாளச்சின்னம்’ எனும் விருதையும் பெற்றுள்ளார்.

சரி, இந்த இந்திராணி மேதியின் சாதனை தான் என்ன?

கணிப்பொறியையும் ஸ்மார்ட் போனையும் இயக்கத் தெரிந்தவர்கள் எல்லாத் தகவல்களையும் தங்களின் விரல்நுனியில் வாய்க்கப் பெற்றிருக் கிறார்கள் என்பது உண்மைதான்.

ஆனால் உலகம் முழுவதிலுமாக 774 மில்லியன் மக்கள் எழுதப் படிக்கத் தெரியாதவர் களாக இருக்கிறார்கள் என்பதும் அதிர்ச்சிக்குரிய, ஆனால் சத்தியமான உண்மை.

எழுதப்படிக்கத் தெரியாத இப்படிப்பட்ட பாமர மக்களையும் அரைகுறைப் படிப்பாளி களையும்கூட கணிப்பொறியையும் செல் பேசியையும் அன்றாட வாழ்க்கைப் பயன் பாட்டிற்காக பயன்படுத்த வைக்கவேண்டும் என்பதை இந்திராணி மேதி தன் இலட்சியமாகக் கொண்டார்.

பெங்களுரூவில் உள்ள மைக்ரோசாப்ட் ஆராய்ச்சிக் கூடத்தின் சார்பாக இந்திராணி மேதி இந்தியா, தென் ஆப்பிரிக்கா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் கள ஆய்வுப் பணியை மேற்கொண்டார்.

பங்ஷ்ற்-ஊழ்ங்ங் மள்ங்ழ் ஐய்ற்ங்ழ்ச்ஹஸ்ரீங்ள் என்னும் வடிவமைப்பு தான் இந்திராணியின் முதல் அற்புதக் கண்டு பிடிப்பு. எழுதப்படிக்கத் தெரியாதோர் கணிப் பொறியை எவ்வித தயக்கமும் இன்றி எளிதாக பயன்படுத்தி வேலைவாய்ப்புத் தகவல்கள், மருத்துவத் தகவல்கள் மற்றும் மின்னணு வரை படத்தினை பயன்படுத்த அறிதல் ஆகியவற்றை உள்ளடக்கிய மென்பொருள் வடிவமைப்பு.

இவ்வடிவமைப்பினை உருவாக்க இந்தி ராணி மேதியின் குழுவினர் 300 மணி நேரத்தினை செலவழித்துள்ளனர். இதற்காக இவர்கள் பெங்களூரில் உள்ள குடிசைப்பகுதி மக்கள் 250 பேரைக் கொண்டு ‘இனப்பரப்பு விளக்க ஆய்வியல்’ (உற்ட்ய்ர்ஞ்ழ்ஹல்ட்ண்ஸ்ரீ க்ங்ள்ண்ஞ்ய் ல்ழ்ர்ஸ்ரீங்ள்ள்) எனப்படும் முறையில் வடிமைப்பைச் செய்துள்ளனர்

இவ்வடிவமைப்பினை பயன்படுத்த எழுத்துக்களை அறிந்திருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. தட்டச்சு செய்ய வேண்டிய தேவையுமில்லை.

இவ்வடிவமைப்பை இயக்கத் தொடங்கிய வுடன் கணிப்பொறி திரையின்மீது படங்களும் கார்ட்டூன் என்னும் சித்திரப்படங்களும் தோன்றும். அவற்றை கையினால் தொட்டவுடன் குரல் ஒலியோடு அவை அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும் என வழிகாட்டும். அது மட்டுமின்றி எப்படி இயக்குவது என்பதையும் ஒலிஒளித் திரைக்காட்சியாகவும் இணைத்து வழிகாட்டும்.

திரையினைத் தொடுவதன் வாயிலாகவே தமக்குத் தேவையான தகவல்களைப் பெறும் முறை தான் இவ்வடிவமைப்பு.

இதன் முதல் கட்டமாக வந்திருப்பவை மேலே கூறிய வேலை வாய்ப்புத் தகவல்கள், மருத்துவத் தகவல்கள் மற்றும் மின்னணு வரைபடத்தினை பயன்படுத்த அறிதல் ஆகும்.

இவற்றைத் தொடர்ந்து பாமர மக்களும் வங்கிச் செயல்பாடுகளை மொபைல் போன் எனப் படும் செல்பேசியின் வழி அறிவற்கான வடிவமைப்பை உருவாக்கி வருகின்றனர். இதற்காக இந்தியா, பிலிப்பைன்ஸ், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளைத் தேர்ந்தெடுத்து மக்களிடம் ஆய்வு செய்து புதிய வடிவமைப்பை உருவாக்க முற்பட்டுள்ளனர்.

பழமைகள் மாறி புதுமைகள் பூக்கும் காலத்தில் அவை அனைத்து வகையான மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனையோடு செயல்படுதல் என்பது பெரிதும் போற்றுதற்குரியது.

தான் வாழும் சமூகத்தின் மீதும் உலகளாவிய மக்கள் மீதும் பற்றுதல் கொண்டிருப்பவர்களால் மட்டுமே இவை சாத்தியப்படும். இவ்வாறு சாதித்திருக்கின்ற இந்திராணி மேதியை பாராட்டுவது நமது கடமையாகும்.

“எவ்வித வாழ்க்கை முறையினை தேர்ந்தெடுத்து வாழ்வது என்கின்ற விழிப்புணர்வு அற்ற மக்கள் வாழும் சமூகத்தினை பின்புலமாகக் கொண்டு பிறந்த நான், இந்நிலையை மாற்றி அமைக்க வேண்டுமென்பதற்காக இப்போது நான் செய்து கொண்டிருப்பதுபோல் பல மறு கண்டு பிடிப்புகளைச் செய்யவேண்டியதாயிற்று. இது மேலும் தொடரும்” என்பது இளம் சாதனை ராணி இந்திராணி மேதியின் கூற்றாகும்.

இந்திராணி மேதியினைப் போல் நாமும் ஒவ்வொரு நாளும் புதிதாய்ப் பிறக்க முற்படுவோம்.

2 Responses

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *