இன்று புதிதாய் பிறப்போம்

– ருக்மணி பன்னீர்செல்வம் பலமுறை பயன்படுத்தப்படும் இசைத்தட்டு எப்படியோ கீறல் விழுந்துவிடுகிறது. கீறல் விழுந்தபின்னர்தான் நீண்ட நாட்களாய் ஒன்றையே திரும்பப் திரும்பப் பயன் படுத்திக் கொண்டிருப்பதை நாம் உணர்கிறோம். பழமைகளை போற்றிப் புகழ்ந்துக் கொண்டிருப்பது நமது இயல்பு. அதில் தவறொன்றுமில்லை. புதுமையை நோக்கியும் நாம் பயணப் படுகின்றோம். ஆனால் பாதையின் துன்பங்களைக் கண்டதும் பாதிவழியிலே பலர் … Continued

பொருளோடு வாழ்கிறீர்களா?

– ருக்மணி பன்னீர்செல்வம் இந்தக் கேள்வியானது இருபொருள்பட அமைந்ததுதான். உங்களுடைய வாழ்க்கையை அர்த்தம் உள்ளதாய், பொருள்பொதிந்ததாய் கட்டமைத்துக் கொண்டிருக்கிறீர்களா? என்பது ஒன்று. இன்றைய தேவை மட்டுமல்லாது எதிர் காலத்திற்கான தேவைகளுக்கும் பணத்தட்டுப்பாடு ஏற்படாதவண்ணம் முன்னேற்பாடுகள் செய்து வைத்து செல்வத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கி றீர்களா? என்பது மற்றொன்று.

போட்டிகளை எதிர்கொள்ளுங்கள்

விரித்து வைக்கப்பட்ட சதுரங்கப் பலகையில் அணிவகுத்திருக்கும் காய்களின் அடுத்த கட்ட நகர்வு குறித்த திட்டமிடுதல் யுத்தமா? விளையாட்டா? தீர யோசித்தால் இரண்டும்தான் என்றே தோன்றும். அதை விளையாட்டாகவே நாம் நினைத்தாலும் கூட எதிர்க்காய்களின் வீழ்ச்சியில்தான் இன்னொரு தரப்பின் வெற்றி இருக்கிறது.

நெஞ்சில் உரமும் நேர்மைத் திறமும்

– ருக்மணி பன்னீர்செல்வம் அடிகுழாயில் ஊற்றப்படும் நீர்போல் நம்முடைய புலன்கள் மூலம் நாம் அறிந்து கொள்ளும், உள்வாங்கும் அறிவை எல்லாம் அப்படியே உள்ளிருப்பாய் வைத்திருப்பதில் பயன் ஒன்றும் இல்லை. (சிலர் அறிந்து கொள்வதுமில்லை, வைத்திருப்பதும் இல்லை என்பது வேறு விஷயம்). உள்ளே ஊற்றிய நீர் கீழிறங்கி விசையின் மூலம் பூமிக்கடியில் இருக்கும் ஊற்று நீரை வெளியே … Continued

அவமானங்களை வெகுமானங்களாக்குவோம்

– ருக்மணி பன்னீர்செல்வம் மைக்கேல் ஏஞ்சலோவின் புகழ்பெற்ற சிற்பங்களில் ஒன்று ‘தாவீது’ சிற்பம். இந்த சிற்பம் உருவான கதை மிகவும் சுவாரசியமானது. அது மட்டுமின்றி மற்றவர்களை ஊக்கப்படுத்தக் கூடியதுமாகும். இத்தாலி நாட்டின் புகழ்மிக்க சிற்பி அகஸ்டினோ அன்டானியோ. இவர் சிற்பமொன்றினை வடிப்பதற்காக மிகப்பெரிய சலவைக்கல் ஒன்றை தேர்ந்தெடுத்து செதுக்கத் தொடங்கினார். எப்படிச் செதுக்கியபோதும் ஏனோ அவரால் … Continued

நீங்கள் அரசாளப் பிறந்தவர்தானே!

– ருக்மணி பன்னீர்செல்வம் டொனால்டு ஆர்.கிரிப்பின், ராபர்ட் கேலம்போஸ் என்ற இரு விலங்கியல் ஆய்வாளர் களுக்கு நீண்ட நாட்களாய் ஒரு சந்தேகம் இருந்து வந்தது. ”கும்மிருட்டில் கூட எப்படி வௌவால்கள் எதிலும் மோதிக்கொள்ளாமல் பறக்கின்றன?” என்பதுதான் அவர்களின் சந்தேகம். இதனை எப்படி அறிந்து கொள்வதென்று பல்வேறு யோசனைகள் செய்து இறுதியாய் ஒரு குறிப்பிட்ட முறையில் ஆய்வை … Continued

பொறுமையும் வேகமும்

– ருக்மணி பன்னீர் செல்வம் வெற்றியின் இரகசியத்தை அறிந்துகொள்ள விரும்பிய இளைஞன் ஒருவன் சாக்ரடீசை சந்தித்தான். பணிந்து அவருக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு, “ஐயா தாங்கள் எனக்கு வெற்றியின் இரகசியத்தை தெரிவிக்க வேண்டும்” என்றான். அவன் கண்களை உற்று நோக்கிய சாக்ரடீஸ், “நாளை காலை என்னை ஆற்றங் கரையில் வந்து பார்” என்று சொல்லியனுப்பினார். சொன்னபடி மறுநாள் … Continued

நாம் வசிக்கிறோமா? வாழ்கிறோமா?

– ருக்மணி பன்னீர்செல்வம் தத்துவப் பேராசிரியர் ஒருவர் தன் வகுப்பிற்குள் நுழையும்போது சில பொருட் களையும் எடுத்துக்கொண்டு வந்திருந்தார். வகுப்பறை மேசையின் மேல் அப்பொருட்களை பரப்பி வைத்தார். வகுப்பு தொடங்கியவுடன் எதுவும் பேசாமல் ஒரு பெரிய குவளையை எடுத்து அதற்குள் கற்களைப் போட்டு நிரப்பினார். அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த மாணவர் களை நோக்கி, ‘இந்தக் குவளை … Continued

ஞாபக வேர்களுக்கு நீரூற்றுங்கள்

– ருக்மணி பன்னீர்செல்வம் பாஸ்டன் நகரத்தில் இருக்கும் அந்தப் பெண்கள் பள்ளிக்கு அன்றைய தினம் மிகப் புகழ் பெற்ற விஞ்ஞானி ஒருவர் சிறப்பு விருந்தினராக அழைக்கப் பட்டிருந்தார். மாணவிகளும், ஆசிரியர்களும், ஏன் பள்ளியின் முதல்வரும்கூட அவருடைய உரையை கேட்பதற்காக மிக ஆவலாக அவரின் வருகையை எதிர் பார்த்திருந்தனர்.

உங்களின் தகவல் தொடர்பு சரியான அலைவரிசையில் செல்கிறதா?

– ருக்மணி பன்னீர்செல்வம் இயற்கையின் படைப்பில் மற்ற உயிரினங்களிலிருந்து மனித இனம் இன்றைய நிலையில் பெரும்வளர்ச்சி பெற்றிருப்பதற்கு அடிப்படையாய் அமைந்தது தகவல் பரிமாற்றம் தான். மனிதனால் முதன்முதலில் பயன்படுத்தப் பட்ட தகவல் பரிமாற்ற வழிமுறையானது இன்றைக்கு பெரிதாகப் பேசப்படும் ஆர்க்ஹ் கஹய்ஞ்ன்ஹஞ்ங் எனும் உடலசைவுதான்.