திசைகளைத் திரும்பிப் பார்க்கிறேன்

– தொடர்

-சிந்தனைக் கவிஞர் கவிதாசன்

வேலாயுதம் தொடுத்தார் நூலாயுதம்

கனவுகளோடும் கவிதைகளோடும் விஜயா பதிப்பகத்தின் நிறுவனர் திரு. மு.வேலாயுதத்தைச் சந்தித்தபோது “தம்பி! வாங்க!” என்று முகத்தில் புன்னகை மின்னலிட நெஞ்சம் நிறைய வரவேற்றார். “நான் கவிதை எழுதியிருக்கிறேன். அதை உங்களிடம் காட்டுவதற்காக வந்திருக்கிறேன்” என்று கவிதை நோட்டை நீட்டினேன்.அதன் முதல் பக்கத்தில்,

“உன்னைப்

பார்க்காமல் இருந்திருந்தால்

என் கவிதை நோட்டு

வெள்ளையாகவே இருந்திருக்கும்”

என்ற வரிகளை எழுதியிருந்தேன். அதைப் பார்த்த அவர் “இது நீங்கள் எழுதியதா?” என்றார். “இல்லை அய்யா, எங்கோ படித்தது; பிடித்திருப்ப தால் எழுதியிருக்கிறேன்” என்றேன்.

“காதல் கவிதைகளை மட்டுமே எழுதாதீர்கள். சமுதாயச் சிந்தனைமிக்க கவிதைகளையும், சமூகச் சிக்கல்களுக்கு தீர்வாகும் கவிதைகளையும் எழுதுங்கள்” என்று சொல்லிக்கொண்டே கவிதை நோட்டை புரட்டி, மேலோட்டமாக கவிதைகளை மனதுக்குள்ளாகவே வாசித்துவிட்டு, இன்னும் இவற்றை நன்கு செதுக்குங்கள். நல்ல எதிர்காலம் இருக்கின்றது” என்று வாழ்த்தியதோடு கவிஞர் மு.மேத்தாவின் “கண்ணீர்ப்பூக்கள்” கவிதைத் தொகுப்பினைக் கொடுத்தார். அதன் விலையான பத்து ரூபாயை எடுத்து நீட்டினேன். “வேண்டாம் வைத்துக் கொள்ளுங்கள்! இந்நூலை நாங்கள்தான் வெளியிட்டிருக்கிறோம். இது எனது அன்பளிப்பாக இருக்கட்டும்” என்று சொல்லி விட்டு தனது வியாபாரத்தைக் கவனிக்க ஆரம்பித்து விட்டார். நன்றி சொல்லி விடைபெற்றோம், நானும் நண்பர் நாராயணசாமியும்.

திரு.வேலாயுதம் அவர்களின் உற்சாக வரவேற்பும் ஊக்குவிப்பும் எனக்குள் புதிய வெளிச்சத்தை விதைத்தது. காயம் படாமல் களை எடுக்கும் அவருடைய உத்தி என்னைக் கவர்ந்தது. புதியவர்களுக்குப் பட்டுக் கம்பளம் விரித்து வரவேற்கும் பாங்கு பாராட்டுக்குரியது. சமுதாய அக்கறையோடு வாழையடி வாழையாக கவிஞர்களையும், எழுத்தாளர்களையும், சிந்தனை யாளர்களையும் உருவாக்கும் அவருடைய முயற்சிக்கும் அன்பான அணுகுமுறைக்கும் நான் ஆயுள் முழுவதும் வணக்கம் செலுத்துவேன்.

அறிவுலகின் அட்சய பாத்திரமாகத் திகழும் விஜயா பதிப்பகம் என்னைப் போன்ற எண்ணற்ற படிப்பாளிகளையும் படைப்பாளிகளையும் உருவாக்கி வருகின்றது. நல்ல படைப்பாளிகளை உருவாக்குவதோடு நல்ல நூல்களை வெளியிடு வதிலும் அவர்கள் சிறந்து விளங்குகின்றார்கள்.

நூல்கள் சாதாரண மனிதர்களைச் சாதனை யாளர்களாக்குகின்றன என்பதை யாராலும் மறுக்க முடியாது. இதைத்தான் கவிஞர் மேத்தா, “எழுத்து விதைகள் இதயங்களில் தூவப்படும்போது சேர்ந்து வளர்வது தனிமனிதன் மட்டுமல்ல; இந்தச் சமுதாயமும்தான்” என்கிறார். நூல்கள் நமக்குக் கிடைத்த வரங்கள். கண்டதைப் படிப்பவன் பண்டிதன் ஆவான் என்றார்கள் நமது முன்னோர்கள்.

செல்வ வளம் அழியக்கூடியது; ஆனால் அறிவு வளம் வளரக்கூடியது. அறிவின் ஆட்சி நிகழும்போது ஒருவனுடைய வாழ்க்கை வரலாறு ஆகின்றது. ஆகவே வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் வாசிக்க வேண்டும்; வாசித்த கருத்துக்களைச் சுவாசிக்க வேண்டும். சுவாசித்த கருத்துக்களை வாழ்க்கையில் அமுல்படுத்த வேண்டும். வெறியோடும் நேர்மையாகவும் வாழ்வதற்கு நூல்கள் உறுதுணையாக நிற்கின்றன என்பதை நாம் உணர்வதோடு நமது நண்பர் களுக்கும் பிள்ளைகளுக்கும் நல்ல நூல்களை அறிமுகம் செய்து வாசிப்பை அவர்களுடைய பழக்கமாகிக் கொள்ள உதவ வேண்டும்.

திரு.மு.வேலாயுதம் அவர்கள் கொடுத்த கண்ணீர்ப் பூக்களை வாசித்தேன். கவிஞர் மு.மேத்தாவின் எளிமையும் சொற்செறிவும் கற்பனை வளமும் என்னைக் கவர்ந்தது. அவருடைய கவிதைகளை வாசித்து வாசித்து நெகிழ்ந்ததோடு, அவற்றை நண்பர்களிடம் கூறி மகிழ்ந்தேன்.

மு.மேத்தாவின் கவிதையில் கரைந்து போன நான், எனது பெயரை “மேத்தாதாசன்” என மாற்றிக் கொள்ள விரும்பி அவருக்குக் கடிதம் எழுதினேன். அதற்கு, அவர் ஏற்கெனவே தனது மாணவர் ஒருவர் “மேத்தா தாசன்” என்று மாற்றியிருக்கிறார் என்ற தோடு, மேத்தா தாசன் எழுதியிருந்த கவிதை நூல் ஒன்றையும் எனக்கு அனுப்பினார்.

கோடுகளை அழகாக வளைத்தால் அவை ஓவியமாகிவிடுகிறது. அதிகமாக வளைத்தால் அவை சிக்கலாகிவிடுகிறது. அதுபோல அளவாகச் சிந்தித்தால் வளமடையலாம். அதிகமாகச் சிந்தித்தால் குழப்பமடையத்தான் முடியும். ஆகவே நமது சிந்தனைகளை நெறிப்படுத்திக் கொண்டு, அவற்றை செயலாக்க வேண்டும் என்ற சிந்தனையோடு செயல்படத் தொடங்கினேன்.

கல்லூரியின் தேசிய மாணவர் படையின் மூலமாக, மிதிவண்டிச் சுற்றுலா ஒன்றினை ஏற்பாடு செய்தார்கள். அதில் நான் கலந்து கொண்டேன். கோவையில் தொடங்கி, பொள்ளாச்சி, உடுமலை, பழனி, தாராபுரம், பல்லடம், கோவை என்று அதன் வழித்தடம் அறிவிக்கப்பட்டது. என்.சி.சி.யின் மாணவப் பொறுப்பாளர் என்ற நிலையில் அப் பயணத்திற்குத் தலைமையேற்று மாணவர்களை வழிநடத்திச் சென்றேன். எனக்கு உறுதுணையாக நண்பர்கள் முரளிதரன், ஷியாம், சைக்காலஜி கணேசன் போன்றவர்கள் இருந்தார்கள். வழிநெடுக மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் குறிப்பாக, விவசாயிகள் வியர்வை சிந்திக் கடுமையாக உழைப் பதையும் பார்த்து நிறையக் கற்றுக் கொண்டேன்.

மகாத்மா காந்தி மதுரை வந்தபோது, விவசாயிகள், மேலாடை இல்லாமல் நிலங்களில் பாடுபடுவதைக் கண்டு தனது மேலாடையைத் துறந்தார் என்று ஆசிரியர் ஒருவர் சொன்னது எனது நெஞ்சில் ஓடியது. கடுமையாக உழைத்தும் வாழ்வில் முன்னேறாமல் வறுமையில் வாடும் அவர்களைப் பார்த்து கண்ணீர் துளிகள் அரும்பின. கடுமையாக உழைப்பதால் மட்டும் முன்னேற்றம் ஏற்படாது. திட்டமிட்டு, புத்திசாலித் தனமாக உழைத்தால்தான் ஒருவரால் முன்னேற முடியும் என்பதையும் உணர்ந்து கொண்டேன்.

ஆவலோடு எதிர்பார்த்திருந்த சென்னைப் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளிவந்தது. எனது மதிப்பெண் பட்டியலைப் பெறும்போது, நான் சென்னைப் பல்கலைக்கழக முதல் மாணவனாகத் தேறி தங்கப் பதக்கம் பெற்றுள்ள செய்தியை அறிந்து பெரும் மகிழ்ச்சியடைந்தேன்.

எல்லையில்லாத மகிழ்ச்சியில் உள்ளம் துள்ளிக்குதித்தது. அந்தச் செய்தியை முதலில் எனது பேராசிரியர் திரு.ஏ. ராஜு அவர்களுக்கு தெரிவித்தேன். மேற்கொண்டு டஎ படிக்க முடிவு செய்து, சென்னை மாநிலக் கல்லூரியில் ங.அ.,டர்ப்ண்ற்ண்ஸ்ரீஹப் நஸ்ரீண்ங்ய்ஸ்ரீங் படிக்க விண்ணப்பித்தேன். அதேபோல் மதுரை காமராஜ் பல்கலைக் கழகத்திலும் விண்ணப்பம் போட்டேன்.

கோவையில் உள்ள பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரியில் ங.அ. சமூகப்பணி படித்தால் உடனடியாக வேலை கிடைக்கும் என்றும், அந்தப் படிப்பு முடித்தால், நூற் பாலைகளில் தொழிலாளர் நல அதிகாரியாக (கஹக்ஷர்ன்ழ் ரங்ப்ச்ஹழ்ங் ஞச்ச்ண்ஸ்ரீங்ழ்) பணிபுரியலாம் என்றும், கோவையில் அப்பொழுது நூற்றுக்கும் மேற்பட்ட பெரிய நூற்பாலைகள் நல்லநிலையில் இயங்கிக் கொண்டிருந்தது. கோவை அரசு கலைக்கல்லூரியில் ஆஅ (அரசியல் அறிவியல்) படித்த எனது சீனியர் மதுக்கரை சண்முகம் ஏற்கெனவே ங.அ.(நர்ஸ்ரீண்ஹப் ரர்ழ்ந்) படித்துக் கொண்டிருப்பதாக அறிந்து, நானும் அந்தப் படிப்புக்கு விண்ணப்பித்தேன்.

நான் விண்ணப்பித்திருந்த அனைத்துப் படிப்புகளுக்கும், சேர்கைக்கான அழைப்பு வந்திருந்தது. எந்தப்படிப்பு சேரலாம் என்று குழப்பம் எனக்கு இல்லை. எனது பெற்றோர்களுக்குப் படிப்பைப் பற்றி எதுவும் தெரியாததால், “இதுபடி அது படி” என்று என்னைக் குழப்பவும் இல்லை. உனக்கு எது பிடிக்கின்றதோ அதைப்படி. நாங்கள் படிக்க வைக்கின் றோம் என்றார்கள்.

படித்த பெற்றோர்கள் வழி காட்டுகிறார்கள். படிக்காத பெற்றோர்கள் வழித்தேட வழி விடுகிறார்கள். முதல் தலை முறைப் படிப்பாளிகளுக்கு முழு சுதந்திரம் இருக்கின்றது. என்றாலும் ஒரு சில மாணவர்கள் தான் அதை முழுமையாகப் பயன் படுத்து கின்றார்கள். பலர் வழிதவறிப் போய் விடுகின்றார்கள். ஆகவே முதல் தலைமுறைப் படிப்பாளிகளை முறையாக வழிநடத்தும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு சற்று அதிகமாகவே இருக்கின்றது. இதைத்தான் எனது ஆசிரியர்கள், திரு.க.ச.அப்பாவு, திரு.கே.ராஜமாணிக்கம், திரு. செ. ஜெயபால், திரு.செ.பெரியசாமி ஆகியோரும், எனது பேராசிரியர்கள் திரு.அ.ராஜு, திரு.ஆர். மூர்த்தி, முனைவர் ஜி.சேகர், முனைவர் ட.சம்பத்குமார், பேராசிரியர் இல.செ.கந்தசாமி ஆகியோர் எனக்குச் செய்தார்கள்.

பலர் வகுப்புப்பாடம் மட்டுமே நடத்தி மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்து கின்றார்கள். ஒரு சில ஆசிரியர்கள் மட்டுமே வகுப்புப் பாடங்களோடு வாழ்க்கைப் பாடமும் நடத்தி தமது மாணவர்களை வாழ்க்கைக்குத் தயார் படுத்துகிறார்கள். வகுப்புப் பாடம் நடத்துகின்ற ஆசிரியர்களை, தேர்வு முடியும் வரை மட்டுமே மாணவர்கள் நினைத்து கொண்டிருப் பார்கள். ஆனால், வாழ்க்கைப் பாடம் நடத்துகின்றவர்களை தங்களுடைய ஆயுள் முழுவதும் நினைத்துக் கொண்டே இருப்பார்கள்.

என்னைச் செதுக்கிய ஆசிரியர்களை ஒவ்வொரு நாளும் நினைத்து வணங்குகிறேன். அதன் வெளிப்பாடாகத்தான், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஆசிரியர் தினத்தில், அவர்களுக்கு ஒரு கவிதை எழுதியிருந்தேன். அதாவது,

உங்கள் அறிவுவலைக்குள்

அகப்படாமல் இருந்திருந்தால்

ஆயுள் முழுவதும்

சூனியமாகவே

சுற்றியிருப்பேன்!

தேனீயைப் போல

பறந்து பறந்து

சேகரித்த புதிய கருத்துக்களோடு

வகுப்பறைக்கு வந்து

கருத்த மேகத்தைப் போல

கருத்து மழை பொழிந்தீர்!

அதனால் தான்

உங்கள் சாரல் பட்டவர்கள் கூட சாதனையாளர்களாகத்

திகழ்கின்றார்கள்!

சிலைகளைத் தெய்வங்களாக நாம் வணங்கும்போது அவற்றைச் செதுக்கிய சிற்பிகளையும் சேர்ந்தே வணங்க வேண்டும். ஓவியங்களை ரசிக்கும் போது அவற்றைத் தீட்டிய தூரிகைகளையும் பாராட்ட வேண்டும். கனிகளை சுவைக்கும்போது அவற்றைத் தந்த வேர்களுக்கும் நாம் நன்றி செலுத்த வேண்டும். ஒரு கை உணவை உண்ண எடுக்கும்போது வியர்வை சிந்திய உழவனை வணங்கும் பண்பையும் வளர்த்துக் கொள்பவர்கள் தான் மாமனிதர்கள். எந்த நிலைக்கு வந்தாலும் வந்த நிலையை மறவாமல் வாழும் பண்பே ஒருவரை சிகரத்தில் வைத்து வணங்கச் செய்கிறது.

பி.எஸ்.ஜி. கல்லூரியில் இருந்து எனக்கு ங.அ. சமூகப்பணி சேருவதற்கான அழைப்பு கடிதம் வந்திருந்தது. மேலும் தகுதி மதிப்பெண்கள் அடிப்படையில் எனது பெயர்தான் சேர்க்கை அறிவிப்புப் பட்டியலில் முதலில் இருக்கின்றது என்பதை எனது நண்பர் திரு.ராஜேந்திரன் சொன்னார். வெளியூர் சென்று படிப்பதில் விருப்பம் இல்லாமல் இருந்த நானும் ங.அ.(நர்ஸ்ரீண்ஹப் ரர்ழ்ந்) சேர்ந்துவிடலாம் என்று முடிவு செய்து அழைப்புக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த தேதியில் குறித்த நேரத்தில் சகல சான்றிதழ்களுடன் டநஎ கலை அறிவியல் கல்லூரிக்குச் சென்றேன்.

அட்மிஷன் கவுண்டரில் சென்று எனது அழைப்பு அட்டையை (அக்ம்ண்ள்ள்ண்ர்ய் இஹழ்க்) கொடுத்து, நான்தான் லிஸ்டில் முதல் மாணவன் என்றேன். “எந்தக் கல்லூரியில் படித்தாய்?” என்றார் அங்கிருந்தவர். “கோவை அரசு கலைக் கல்லூரியில்” என்றேன். “அரசுக்கலைக் கல்லூரி மாணவனா?!’ கல்லூரி முதல்வரைப் பார்த்து இந்த அட்டையில் அவருடைய கையெப்பம் வாங்கி வா. அப்பொழுதுதான் உனக்கு அட்மிஷன் கொடுக்க முடியும்!” என்றார்.

“நான்தானே லிஸ்டில் முதல்வன், பிறகு எதற்கு முதல்வரைப் பார்க்க வேண்டும்” என்று மெல்லிய குரலில், பயம் கலந்த சொற்களில் கேட்டேன். “அரசுக்கலைக்கல்லூரி மாணவர்கள் என்றால், அவரைப் பார்த்த பிறகு தான் அட்மிஷன் போடுவது வழக்கம், அவரைப் போய் பார்” என்றார்.

அச்சம் எனக்குள் அடியெடுத்து வைக்க, நான் கல்லூரி முதல்வர், பேராசிரியர் டி.கே.பி. வரதராஜன் அவர்களுடைய அறைக்குள் அடியெடுத்து வைத்தேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *