திசைகளைத் திரும்பிப் பார்க்கிறேன்

– தொடர் -சிந்தனைக் கவிஞர் கவிதாசன் வேலாயுதம் தொடுத்தார் நூலாயுதம் கனவுகளோடும் கவிதைகளோடும் விஜயா பதிப்பகத்தின் நிறுவனர் திரு. மு.வேலாயுதத்தைச் சந்தித்தபோது “தம்பி! வாங்க!” என்று முகத்தில் புன்னகை மின்னலிட நெஞ்சம் நிறைய வரவேற்றார். “நான் கவிதை எழுதியிருக்கிறேன். அதை உங்களிடம் காட்டுவதற்காக வந்திருக்கிறேன்” என்று கவிதை நோட்டை நீட்டினேன்.

திசைகளைத் திரும்பிப் பார்க்கிறேன்

– சிந்தனைக் கவிஞர் கவிதாசன் வானொலியில் எனது கவிதை ஒளி நாட்டு நலப்பணித்திட்ட முகாமின் நிறைவு விழாவில் என்னை, ”சிறந்த மாணவத் தொண்டர்” என்று பாராட்டி எனக்கு நற்சான்றிதழ் வழங்கினார்கள். நண்பர்களின் கரவொலிக்குள் நான் சிறகுகளை கட்டிக்கொண்டு மகிழ்ச்சி வானில் பறந்தேன். வெற்றி என்பது விபத்தல்ல; அது ஒரு வியர்வைத் துளிகளின் விளைச்சல் என்பதை உணர்ந்தேன். … Continued

ஆயிரம் சிறகுகள் முளைத்தன

– சிந்தனை கவிஞர் கவிதாசன் எனது முதல் கவிதை நூல் நனவுகளும் கனவுகளும் தலைப்பிரசவ வேதனையோடு 1983இல் வெளிவந்தது. நிகழ்காலத்தின் அவலங்களின் அழு குரல்களோடு எதிர்காலத்தின் நம்பிக்கைக் கீற்று களும் ஏக்கப் பெருமூச்சுகளும் அதில் கவிதைகளாக அரங்கேறி இருந்தன. சிற்பியில் விழுகின்ற மழைத்துளி முத்தாக மாறுவதைப்போல, நெஞ்சின் ஆழத்தில் விழும் சமுதாயப் பதிவுகளும் எதிர்பார்ப்புகளும் கவிதை … Continued

திசைகளைத் திரும்பிப் பார்க்கிறேன்..!

-சிந்தனைக்கவிஞர் கவிதாசன் முதன்முதலாக எனது மேடைப் பேச்சு, கோவை கிருஷ்ணம்மாள் கல்லூரியில்தான் அரங்கேறியது. உலகநாடுகளிடையே இந்தியா தலை நிமிர்ந்து நிற்கிறதா? நிற்கவில்லையா? என்பதுதான் தலைப்பு. ஒவ்வொரு கல்லூரியில் இருந்தும் இருவர் கலந்துகொண்டு ஒருவர் தலைப்பை ஒட்டியும் மற்றவர் வெட்டியும் பேச வேண்டும் என்பதுதான் நிபந்தனை.

வெற்றி மேடை ஏறினேன்

சிந்தனைக் கவிஞர் கவிதாசன் முயற்சிக்கு முன்னால் வரும் தயக்கமும் வெற்றிக்கு பின்னால் வரும் மயக்கமும் நிலையான முன்னேற்றத்தைக் கொடுக்காது தம்பி, உள்ளே வா!” என்றார். எங்களுடைய துறையின் தலைவர் டாக்டர் பெருமாள். அச்சத்தோடு அவருடைய அறைக்குள் நுழைந்தேன்.

திசைகளை திரும்பிப் பார்க்கிறேன்

தேர்தலில் அமோக வெற்றி – சிந்தனைக் கவிஞர் கவிதாசன் முடியாது என்று முடங்கிவிட்டால் மூச்சுக் காற்றும் நின்றுவிடும் முடியும் என்று துணிந்து விட்டால் மூளைக்குள் மின்சாரம் பிறப்பெடுக்கும் தமிழ்மன்றத் தேர்தலில் நான் அமோக வெற்றி பெற்று தமிழ்மன்றச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். என்னை எதிர்த்துப் போட்டியிட்ட அறிவியல் துறையைச் சார்ந்த ரவிச்சந்திரனைவிட 800 ஓட்டுக்கள் அதிகம் பெற்றிருந்தேன்.

திசைகளை திரும்பிப் பார்க்கிறேன்

– சிந்தனை கவிஞர் கவிதாசன் “நண்பர்கள் நம்மைப் பறக்க வைக்கிறார்கள்; வீழும் போதெல்லாம் தாங்கி நிற்கிறார்கள்” “எனக்குப் புனைபெயர் சூட்டுவதில் நண்பர்கள் தீவிரமாக இருந்தார்கள். பலரும் பல பெயர்களை முன்மொழிந்த நிலையில் “கவிதா” என்று புனைபெயர் இறுதியாக தேர்வானது. அதை நானும் ஏற்றுக் கொண்டு “கவிதா” என்ற புனைபெயரில் எழுதலாம் எனத் தீர்மானித்தேன். அப்பெயர் எனக்கு … Continued

அச்சுக் குதிரையில் அச்சமின்றி ஏறினேன்

– சிந்தனைக் கவிஞர் கவிதாசன் திசைகள் தோறும் வாய்ப்புகள் இருக்கும் திறமைகள் இருந்தால் வாவென அழைக்கும். அடுத்த நாள் கல்லூரிக்கு உற்சாகத்தோடு எனது இலட்சியத் தீர்மானங்களோடும் வந்தேன். ஆனால், கல்லூரியில் சோகம் தோய்ந்த முகத்தோடும் கலங்கிய கண்களோடும் கல்லூரியின் வளாகமெங்கும் மாணவர்கள் கூட்டங்கூட்டமாக நின்று கொண்டிருந்தார்கள். எனது வகுப்பறையின் முன்பாக நின்று கொண்டிருந்த எனது வகுப்பு … Continued

வாஸ்கோடாகாமாவிற்கு வழிகாட்டியது யார்?

– சிந்தனைக் கவிஞர் டாக்டர் கவிதாசன் அச்சத்தோடுதான் எழுந்தேன். என்றாலும் எனக்குள் ஒரு எரிமலை வெடித்துச் சிதறியது. பேராசிரியர் இல.செ.கந்தசாமி அவர்களைப் பார்த்து, ”உங்களைப் போன்றவர்கள் வழிகாட்டுவார்கள் என்றுதான் நாங்கள் காத்துக் கிடக்கிறோம். திசை தெரியாத பறவைகளாகச் சுற்றித்திரிகிறோம். வழிகாட்டுதலுக்காக காத்துக் கிடந்து காத்துக்கிடந்து எங்களைக் கரையான் அரிக்கத் தொடங்கிவிட்டது. இனிமேல் யாருடைய வழிகாட்டுதலுக்காகவும் காத்துக்கிடக்கப் … Continued

என்னைக் கண்டெடுத்தேன்

– சிந்தனைக் கவிஞர் டாக்டர் கவிதாசன் ”நிகழ்வுகள் அனுபவத்தை தருகின்றது. அனுபவம் நம்மை நமக்கே தருகின்றது” வாழ்க்கை என்பது நம்மை நாமே கண்டெடுக்கும் ஒரு தேடல். நாம் நமக்குக் கிடைக்காதவரை உலகம் நமக்குக் கிடைக்காது. இந்தத் தேடலில்தான் வாழ்க்கை தொடங்குகிறது. போதி மரத்தடியில்தான் சித்தார்த்தன் தன்னைத் தானே கண்டெடுத்தான், புத்தனாக.