காதைச் சுற்றும் கொசு, முகத்தில் மோதும் சில்வண்டு, எல்லாம் தன் தியானத்திற்குத் தடையாய் இருப்பதாய் அந்த குருவிடம் முறையிட்டான் சீடன். ‘நன்கு யோசி. அதன்பின் உன்னை எது தொந்தரவு செய்கிறதோ, அதன் முதுகில் சுண்ணாம்புக் கோடொன்று
போடு’ என்றார் குரு. மறுநாள் சீடன் வந்தான். தன் இதயத்தில் கோடு போட்டுக் கொண்டு. “குருவே! நீங்கள் சொன்னதை உணர்ந்து கொண்டேன். என்னைத் தொந்தரவு செய்வது கொசுவோ சில்வண்டோ அல்ல. என் மனம்தான்” என்றான். மனதில்தான் எல்லாத் தடைகளும். மற்றவற்றில் அல்ல.
Leave a Reply