” நீண்ட காலம் நோய்வாய்ப்பட்டிருந்த ஆங்கிலம் தன் 1617வது வயதில் மரணமடைந்தது”. இப்படியொரு வாசகர் கடிதம் ஆகஸ்ட் 21 வாஷிங்டன் போஸ்ட்டில் வெளிவந்துள்ளது. இலக்கணப்பிழையுடன் ஆங்கிலம் எழுதப்படுவதையும் தவறுதலாக உச்சரிக்கப்படுவதையும் கண்டித்து இப்படியோர் அதிரடிக் கடிதத்தை அந்த வாசகர் அனுப்பியிருந்தார். உலகம் முழுவதிலும் மொழிச்செப்பம்
பொருட்படுத்தப்படுவதில்லை என்பது வேதனையளிக்கிறது.
அடிப்படை இலக்கணம்கூடத் தெரியாமல் மொழியை அலட்சியமாகக் கையாள்வதில் இருக்கும் ஆபத்தை யாரும் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை. கடிதங்கள் எழுதுதல் குறைந்து குறுஞ்செய்திகளின் காலம் வந்த பிறகே இத்தகைய போக்கு. எழுதுவதிலும் பேசுவதிலும் அடிப்படை ஒழுங்குகள் மீறப்படும்போது மனிதன் வாழ்வின் அடிப்படை அக்கறையையே இழக்கிறான். தொலைக்காட்சித் தொகுப்பாளினிகளின் தாறுமாறான உச்சரிப்பை எப்படி யாரும் பொருட்படுத்தவில்லையோ அதுபோல, இந்த வாசகர் கடிதமும் பெரிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்திவிடவில்லை என்கிற வருத்தமான உண்மை, இணையம்வழி தெரிகிறது.
மொழிகளைக் கையாள்வதில் இருந்து மனித ஒழுக்கம் தொடங்குகிறது. இதற்கு உலகளாவிய இயக்கம் ஒன்று நடந்தால்கூட நல்லதுதான்.
Leave a Reply